Tuesday, December 14, 2010

பயணம்



வேகமாக முன்னேறிய  இருசக்கரவாகனம்  எதிர்புறம் சைக்கிள்  மிதிக்கின்ற சிறுவன்   வர ஓரத்தில் கிடக்கின்ற விறகு கட்டினை   தவிர்த்து இருசக்கரவாகனத்தை  கடக்க நினைத்துஇருசக்கரவாகனம்  விறகு கட்டுக்கு இடையில் மாட்ட  இருதலை பாம்பாய் அவன்நிலை  முன்னேறவும் முடியாது  ஒதுங்கவும் முடியாது விறகு கட்டில் சைக்கிளுடன் சாய்ந்து  பயணம் தடைப்பட்டது.

இருசக்கரவாகனம் முன்னேறியதுவளைவில் வந்திருந்த வண்டி வேகமாய் வர  லாரி ஒன்றை கடக்க நினைத்து இருசக்கர வாகனம்வேகமாய் வர வளைவில் வந்த வண்டியும் வேகமாய்வர லாரியும் வேமாய்தான் போய்கொண்டிருந்ததுஇரண்டு வண்டிகளுக்கும் நடுவில் இருசக்கரவாகனம் அடிவயிற்றில் பயம் கிளம்பியதுஇருசக்கரவாகனத்துக்கு  பதட்டதில் மேலும் வேகம் மூன்று ஒன்றாய்  லாரி டிரைவர் சைடு கண்ணாடி வழியாக  பார்த்து வேகம் குறைக்க இருசக்கரவாகனம்  தப்பித்தது.

இருசக்கரவாகனம் முன்னேறியது பதினைந்து நாட்கள் மழையில்  சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட   தார் சாலையின் இருபக்கங்களிலும்   பெரிய குழிகள்  தினசரி செல்பவர்கள்      ஞாபகம் வைத்து  ஆபத்தில்லாது கடக்க  
புதிய வாகன  ஓட்டிகள் விழிப்புண  ர்வுடன் வாகனம் ஓட்டினால் மட்டுமே  பிழைக்கலாம். இரவு நேரம் 7 மணி முதல் 9 மணி வரை   வண்டிகளுக்கு பஞ்சமில்லை   குழிக்குள் இருசக்கர வாகனத்தை விட்டால் கட்டாயம் பின் வரும் வண்டியில் தப்பிக்க முடியாமல் இறக்கநேரிடலாம் அல்லது கால் கை போகும்.

அப்படிதான் இரவு நேர வண்டிபயண  ம் நண்பர்கள்  இருவர் ஜாலியாக பேசியப்படி ஆபத்து இவர்களை நோக்கி வருவது அறியாமல்வேகமாய் செல்ல   ஒரு குழிக்குள் விழுந்து ஏற  பின்னால் உட்கார்ந்திருந்தவர்    தூக்கி எறியப்பட்டு சாலையோர  புதருக்குள் விழ வாகன ஓட்டிக்கு சிராய்ப்புகளுடன்  வலி  வெளிச்சம் இல்லா அந்த இரவில் பின்னால் உட்கார்திருந்த நண்பனை  தேடுகையில் விரக்தியின் உச்சம்.

இருசக்கர வாகனம் முன்னேறியது  30    நாட்களாக குடிக்காமல் அய்யப்பன்   பக்தராக இருந்து மலையேறி திரும்பியவுடன்  மாலையை  கழட்டி விரதம் முடிக்க அப்படா இன்னிக்கு புல்லா அடிக்கனும் நினைத்து கொண்ட டூ  வீலர் மெக்கானிக்  வண்டி களுக்கு  உதரிபாகங்கள் வாங்கி  திரும்புகையில்   வழியில் இருந்த ஒயின்ஷாப்பில்  புல்லாய்  அடித்துவிட்டு    நிதானமாய்  ஓட்டுவதாக நினைத்து அதிக வேகத்துடன் வண்டி ஓட்டி பெரியவாகனத்தை கடக்க நினைக்கியில்  எதிர்வந்த வண்டியில் நேரிடையாக மோத    உயிர் விண்ணுக்கு உடல் மண்ணுக்கு என்றானது.

இருசக்கரவாகனம் முன்னேறியது.

10 comments:

Unknown said...

oooo

தமிழ் உதயம் said...

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -சாலையில்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

பாழாப்போன குடியும் , பாதுகாப்பில்லாத ரோடுகளும்...

:(

http://thavaru.blogspot.com/ said...

என்னங்க வினோத் சொல்லவர்றீங்க ..புரியலையே...

http://thavaru.blogspot.com/ said...

சாலையில் மட்டுமில்லீங்க வாழ்க்கையிலும் கூடதாங்க தமிழ்உதயம் நன்றிங்க.

http://thavaru.blogspot.com/ said...

ஆமாங்க பயணமும் எண்ணங்களும்.

Anonymous said...

அன்புத்தோழருக்கு வணக்கம்,


தங்களது படைப்பு அறிமுகத்தவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இயங்கு சுட்டி http://mag.pondicherryblog.com/?p=113

இவ்வெளியீட்டில் தமக்கு உடன்பாடு இல்லை என்றால் எம்மை தொடர்புக் கொள்ளவும். குறை நிறைகளை தயங்காது எடுத்து வைக்கவும், நிகர் செய்ய முயற்சிக்கிறோம். மிக்க நன்றிகள்.

இங்ஙனம்,

அங்கிதா வர்மா

இணை - ஆசிரியர் - அறிமுகத்தவ சஞ்சிகை

ஜோதிஜி said...

பொருத்தமான சாந்தி சொன்ன ரைமிங் பொருத்தமானதே

http://thavaru.blogspot.com/ said...

அடவாங்க அன்பின் ஜோதிஜி

பெரியவங்க கண்ணெல்லாம் இப்பதான் பட ஆரம்பிச்சிருக்கு நன்றிங்க...

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க அங்கிதா வர்மா

LinkWithin

Related Posts with Thumbnails