Monday, June 28, 2010

ஆத்ம சோதனை

ஆபீஸ் பணத்தை விரயம் செய்தால் சொந்தப்பணத்தை அது விரயம் செய்யும்.

துரோகம் பலன் கொடுத்தால் பிறகு பிறரை நாம் நமக்குத் துரோகம் செய்ய அழைக்க வேண்டியிருக்கும்.

குறுக்கு வழியில் பலன் பெற நினைத்தால் பலன் ஒதுங்கும்  அவமானம் வரும்.

அகங்காரம் அடிப்படையை அழிக்கும்.

உற்ற நண்பனுக்கு விரும்பிச் செய்யும் துரோகம்  நம் வாழ்வை துரோகத்தின் உற்பத்தி ஸ்தானமாக்கும்.

நல்லவனுக்கு வீம்பு சவால் விட்டால் பொல்லதாவன் அதை நிறைவேற்றுவான்.

உதவாக்கரை வாழநினைத்தால் மாறிய மனம்  மாற்றமான  பலன் தரும்.

உதவுபவர் காரியத்தைத் தள்ளிப்போட்டால் முக்கியமான காரியம் தள்ளிபோகும்.

ஆத்மசோதனை  முற்றும்.

கர்மயோகி

Saturday, June 26, 2010

எல்லைகள் தெரியா எனது பயணம்




தூர கேட்கும் இடிமுழக்கம்
வினாடியில்
தோன்றி மறையும் மின்னல்

இதயம் சுமையாகிறது
ஊமையாய் அழுகிறேன்
இன்ப முழக்கம்
தூர கேட்கையில்
என்னுள் உந்தன்
வெளிச்சகீற்று

தேடுகிறேன்
மறைந்து விடுகிறாய்
எதிர்பார்க்கவில்லை
வந்து செல்கிறாய்

ஆழ்கடல் அற்புதம் காண
அடிகடல்  செல்ல
சோதனையால்  சோதனையாகி
தொடமுடியா தூரமாய்
என்னுள்ளே

துயரமாய்
எனது பயணம்
எல்லைகள் தெரியா
பாலைவனத்தின் இடையே
திரும்பவும்
உனை நோக்கி...

Friday, June 25, 2010

ஆத்ம சோதனை

செய்தது வீண் போகாது.

நல்லது நல்லது செய்யும்.

அவசரம் காரியத்தை கெடுக்கும்.

சுயநலம் நஷ்டத்தை கொடுக்கும்.

வாலிபத்தின் ருசி பின்னால் மனவேதனை தரும்.

உடலால் செய்த  பாவம் மனதில் புண்ணை  ஏற்படுத்தும்.

கர்வம் மரியாதையைப் போக்கும்.

மரியாதையை நாடுவதற்கு கர்வம் உதவாது.

நாம் செய்யும்  காரியம் நல்லது கெட்டது என்பதை ஒதுக்கிவிட்டு மீண்டும் தன்னை திரும்ப செய்யும்படி  தூண்டும்.பல சமயம் அது நல்லதாக இருக்கும் பலசமயம் அது கெட்டதாக  இருக்கும். ஆனால் செய்தது  மீண்டும் வரும்.

உணர்ச்சிக்குரிய கடமையை தவறினால் பின்னால்  அது உயிரை எடுக்கும் .

தவறான வழி பலன் தந்தால் பலனை பிறகு அனுபவிக்க வேண்டியவர்களஅழிவார்கள்.

இல்லாததை இருப்பதாக பேசினால் இருப்பதும் போய்விடும்.

சொந்த மகன் ஆனாலும் அவன் தவற்றை ஆதாரித்தால் அவனே  உனக்கு பெரிய  தவற்றை செய்வான்.

இலட்சியம் பெரியதானாலும் மனப்போக்கு சிறியதானால் பெரும் பலன் விலகும்.

(ஆத்ம சோதனை  தொடரும்)

Monday, June 21, 2010

என் மனது


வேடங்கள்  வாழ்வாகி
வெகுதூரமாய் உண்மை
தோன்றி யவை  நினைக்க
எல்லாம் சரி
நியாயம் கற்பித்த
மனது
மனதின் ஆழத்தில்
மறைந்த உண்மை
இன்பம் துன்பமும்
எனை   பயம்செய்ய
அமைதி இழந்தவனாய்
நான்.

Saturday, June 12, 2010

வேதனை

அவனுடைய நடுமனது அரித்து என்னமோ செய்தது.  நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் அவனுடைய மனது செல்லவில்லை.

நம்ம வீட்டிலும் எப்பொழுது இம்மாதிரியான திருமணவிழா நடைபெறும்? இன்னும் நடவாமல் இருப்பது எதனால் ஏன் ? என்ற எண்ணமே தலைதூக்கி நிற்க. கண்களில் கண்ணீர் வராத குறைதான் .

அவனால் முடிந்த அவனது பங்களிப்பை தன்வீட்டில் கொடுத்துநிறைவேற்றிவிட்டான்.  அவனது வீடும் விழாவினை சீரும் சிறப்புமாய் நடத்தகாத்திருந்தது.

அவர்களும் பார்க்காத ஜாதகங்கள் இல்லை  நாடாத புரோக்கர்கள் இல்லை. பார்த்தஇடங்கள்ஒன்று , இரண்டு , மூன்று ......என நீண்டு செல்ல அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் நெடிய பயணத்தின் களைப்பு காணப்பட்டது.

நண்பர்கள்  பேசினார்கள் ஏதோ பேசினான் உள்ளுக்குள் இனம்புரியாத குமுறல் நிகழ்ந்தது. நடுத்தரகுடும்பம் ஆடி ஓடி எறும்பாய் ஒன்று சேர்த்து இந்த திருமணத்தை செய்துவிடலாம் என்ற தகுதி வந்தவுடன் தங்களுடைய வீட்டு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். 


நிகழ்வு வேறாக இருக்க இவனின் உள்வேதனையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. திருமணவிழாவில் பாதியில் வெளி கிளம்பினான். நெருங்கியவர்களுக்கு மட்டும் அர்த்தம் புரிதிருக்கும்.

Thursday, June 10, 2010

கூடு



உதிர்ந்த குச்சிகள்
இன்றோ நாளையோ
வாழ்வின்  கடைசியாய்
தாங்கும் உயிர்
நாலைந்து உயிர்களின்
கூடு இது
கிளைகளின் இடையே
இலைகளின் வேய்தலில்
மழையோ வெயிலோ
காற்றோ பனியோ
பாதுகாத்து
வளர்ந்து வெளிசென்றவை
இருப்பிடம் வேறுகூடு
உள்இருப்பவை
உயிர்வாழ் போராட்டம்
கூடுகள் குச்சிகளை
இழக்க
உள் இருப்பவையோ
உணவு தேடலில்

Tuesday, June 08, 2010

சண்டை

ஓட்டமும் நடையுமாக ஒரு பெண் ரோட்டு திசைநோக்கி சென்றாள். மிக குறைந்த இடைவெளியில் மோட்டார் சைக்கிளில் இருவர் வேகமாய் செல்ல…


சென்றவர்கள் ஒரே இனத்தவர்கள். ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை என்று நினைத்த வேளையில் சத்தம் போட்டப்படியே  ஆண்களும் பெண்களும் ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

முப்பது வருசமா இங்க இருக்கோம் இது மாதிரி நடக்கல..
நாங்க மனசுங்க கெடையாத… நீதி நியாயம் கெடையாத…என்று
சத்தம் போட்டப்படியே செல்ல..

போய் கொண்டிருந்த ஆண்கள் இருவரை இடைமறிக்க.. நேத்து எங்க பையன்களுக்கு அவங்க பையன்களுக்கு பிரச்சனை ரெண்டு பேருக்குள்ளேயும் அடிதடி நடந்துருக்குங்க.

இப்பவந்து யாரோ பத்து பேரு வந்துஆம்பள பொம்பளன்னு பாக்காமா அடிக்கிறாங்க அதான் கேஸ் கொடுக்க போறோம்.

அதுகுள்ளாகவே ஊர் பெரியவர்கள் போலீசுக்கு போன் செய்து கிராம பஞ்சாயத்த பேசிக்கிறோம் எப்.ஜ.ஆர் போடவேண்டாம் என்று சொல்ல போலீஸ் சார்கள் அன்றைக்கு கேஸ் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

மறுநாள் காலை  எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் கூட ஆரம்பித்ததுபஞ்சாயத்தார்கள் சிலபோ் பிரச்சனைக்குரிய இரு இனத்தவர்களும் வந்திருந்தார்கள்.



ஓருஇனத்தவர் மட்டும் அதிகமாய் வந்திருந்தார்கள். பஞ்சாயத்து ஆரம்பித்தது இரு தரப்பாரை கூப்பிட்டு விசாரித்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்பம் முதலே ஒருவரை பார்த்து ஒருவர் வேகமாய் பேசி கொள்ள ஆரம்பிக்க…

நீ ஆம்பளயா இப்ப அடிடா பாப்போம் என்று கத்த..

நீ சும்மா இரு எதிர்தரப்பு பதில் சொல்ல..

திடீரென்று இரு இனத்தவர்களும் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள். யார் யார் எங்கு இருக்கிறார்கள். யாரை காப்பாற்றுவது  ? எப்படி அடிபடாமல் தப்பிப்பது என்றே தெரியாமல் போனது?

துரத்தி துரத்தி ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள்.   அய்யோ…அய்யா….

அவன  புடிடா …அவன புடிடா….

அய்யா அங்க துரத்தி அடிக்கிறாங்கய்யா….

பொதுவில் உள்ளவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.

Friday, June 04, 2010

வாத விவாதங்களாய் வாழ்க்கை

வாத விவாதங்களாய்  போகும் வாழ்க்கை.    தலைதூக்கும்  ஈகோ.   தன்னை நினைக்காதவனை நான் நலம் விசாரிப்பதா தங்கையின் வீம்பு. எனக்கு மரியாதை  தராத  நீ இருந்தாலென்ன போனால் என்ன?  தேவை எனக்கு மரியாதை.

கஷ்டப்பட்டுஆளாக்கிய சொத்து அய்யோ  போகிறதே கதறும் அப்பன் கவலைபடாத பிள்ளைகள்.  இப்பதான் தெரியுது நான் செஞ்ச தப்பு புள்ளங்களா சரியா வளக்கல அப்பனின்  புலம்பல்.

குடும்பம் ஆகி புள்ளை பிறந்து தன் தகுதியை நிலை நாட்டாத அண்ணன் அக்கா உறவுகளுக்கு சேவை. வீட்டில் குழப்பம். என்னங்க நம்ம குடும்பத்த பாருங்க? எடீ எனக்கு தெரியுமடீ பதில் சொல்லி  கணவன்.

டேய் நேரம் கிடைச்சப்ப உழைச்சு காசு சேருடா? எல்லாத்துக்கும் உதவும் நண்பனின் புலம்பல் அலட்சியம் செய்தவன் வாழ்வு உழைத்தால் இன்றைக்கு சோறு. எங்கும் வராமல் உழைக்கும் நண்பன்.

கழுகு கண்ணாய் தன் லாபம்  மட்டும் பார்க்கும் பேசும்.பேச்சு  இனிப்பு  மயங்கி விழவைக்கும் கண்கள் பார்த்து சிரிக்கும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் ஓர் கணக்கு நம்பியவர்கள் ஏமாற்றபட்டவர்கள்.  ஒரு வட்டம் போய் அடுத்த வட்டம். அடுத்த வட்டம் போய் இன்னொரு வட்டம்  தொடரும் வாழ்க்கை.

பகுத்தறியும் இது தான் வாழ்வு என்று ஏட்டு படிப்பு வாழ்க்கை .  எதையும் தன்னுள் சிந்தித்து வெளிதள்ளும்  அல்லது தன்னுடன் இணைக்கும். இடம் அடைய  தகுதிகளை உருவாக்கி  இடம் நோக்கி பயணம் ஆகிறது.

வீராப்பு  முன்கோபம் புரிய வைக்க நிறைய பேசி னாலும் நான் சொன்னது தான்  வாழ்வு பிடிவாத வாழ்வு .  நல்லது நிறைய இருந்தும் எடுபடாமல்  போனது.

மனித வாழ்வு நாடகம் நேரங்கள் மாற வேடங்கள் மாறும். விருப்பமா விருப்பம் இல்லையா தேர்ந்தெடுக்க உரிமை கிடையாது வேடங்கள் ஏற்று நடித்து தான் ஆக  வேண்டும். நகம் கடித்து கொண்டிருக்கிறது.


விதி

முள் படுக்கை
ஆயிரம் முட்கூர்களின்
துளைப்பு
வலியில் வாழ்வு
உணர்வில் மயக்கம்
நான்கு கைகள்
யாரோ
கை கால்களை
பிடித்து மேல்தூக்கி
வலி வேதனை
மறக்க திரும்பவும்
முள் படுக்கை
வலியில் வாழ்வு

LinkWithin

Related Posts with Thumbnails