Monday, July 26, 2010

எண்ணச் சிதறல்

மனதில்  தானாய்
தோன்றும் நினைவுகளில்
பல பேரது வாசமாய்
அவர்களின் நினைவுகள்
மனதில் தோன்றியப்படி…
மகிழ்ச்சி வருத்தம்
கோபம் துன்பம்
நினைவுகளில் இயல்பு
என் செயல்களில்
என் தொடர்பு இல்லாத
எண்ணச் சிதறல்
புலன்களின் தொடர்புகள்
அறுந்துபோய்
தன்னிச்சை  இயந்திரமாய்
புலன்களின் வெளிப்பாடு
பார்த்து சிரிக்கும்
குழந்தைக்கு கூட
பதில் புன்னகை புரியாது
பலபேரது எண்ணங்களை
மனதில் சுமந்தப்படி
உண்பதும் உடுப்பதுமாய்
வாழ்வு.

சேரிடம் அறிந்து சோ்

பழகி முடித்தவர்களின்  எண்ணங்கள் எப்பொழுதாவது மனதில் உதிக்கும்.  வேலை யின் காரணமாக பிரிந்தவர்கள்
அல்லது தன்னுடைய  நடத்தையின் மூலம் தன்னுடைய பழக்கத்தை  பாதியில் முறித்து கொண்டவர்கள்.

வேலையின் காரணமாகபிரிந்தவர்கள் பற்றிய நினைவுகள் வரும் அவர்களை   பற்றி அறியும் செவி வழி செய்திகளில்
அவர்களுடைய நினைவுகளுக்கு பதில் கிடைத்துவிடும்.

தன்னுடைய நடத்தையின் மூலம் பிரிந்தவர்கள் அவர்களோடு பழகியவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டு பண்ணி விடுவார்கள்.  அவர்கள்  பிரிந்ததற்கு  அவர்களால் ஒரு நூறு சதவீத காரணத்தை சரியாய் சொல்லி விடமுடியும்.

நோக்கத்துக்காக மட்டும் பழகுபவர்களை அடையாளம் காண்பது அரிது.  அனுபவம் தான்  மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள செய்யும்.

எல்லோரும் ஒன்று சேர்வது அவர் அவர்களுடைய  சுயநலத்திற்காக இருந்தாலும் எப்பொழுது தனக்குரிய லாபம் கிடைக்கவில்லையோ அப்பொழுதே விலகிவிடும் பண்பு அதுவரையில் நல்லது கெட்டது பேசி  தனக்கான  நல்லத்திற்கு மட்டுமே நைச்சியம் பேசி அழைத்து போகும் பண்பாளர்கள்  இவர்கள்.

இவர்களால் மனவலி மிகும்.

எச்சரிக்கையாய் கையாள வேண்டியவர்களும் இவர்களே.  பேசுவதில் அவர்களுடைய காரியம் இருக்கும். அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும்  எதிரொலிக்கும். கொஞ்சம் உற்றுபார்த்தால்  அவர்களைப்பற்றி புரியலாம்.

Tuesday, July 20, 2010

விடியாத காலை

கருமேகங்கள்
ஒளி மறைக்க
இருண்ட காலை
இன்னமும் விடியவில்லை
சினுங்கிய பிள்ளை
பறவைகளின் சப்தம்
எட்டி ஒலித்த
பால்காரரின் குரல்
விடியாத காலையை
விடிந்ததாக சொல்ல
விரைவாய் வெளியேறிய
காற்றின் சப்தத்துடன்
வருகையை உணர்த்திய
குடிநீர் குழாய்
அம்மாவின் வேகம்
அதிகரிக்க
நிரம்பி வழியும்
குடம்
பொங்கி வழியும்
பால் பாத்திரம்
வினாடிகள் திகைத்து
அடுப்பு நோக்கி
விரையும் கால்கள்
துணிபிடித்து
இறக்கிய கையுடன்
குரல் கொடுக்கும்
அம்மா 
சினுங்கும் பிள்ளை
குடிநீர்குழாய்
நோக்கிகோபமாய்
அம்மாகுடம்
தூக்கி திரும்பவும்
குரல் கொடுக்க
இன்னமும் போர்வைக்குள்
அடிவாங்கும் பிள்ளை

Friday, July 16, 2010

மாறும் பெண் தலைமுறை

ஊரில் பெரிய மனிதர்பெண்ணுடைய திருமணத்தை பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு. பெண்ணே  மாப்பிள்ளையை தேடி கொண்டது .

பேசி சரிசெய்து   விடலாம்  அவரின்  நினைவு நினைவாகவே இருக்க எனக்கு அந்த பையனை  திருமணம் செய்து கொடுங்கள் என்று கூற   அதிர்ந்து போய் தன்னுடைய பெயரை இவள்கெடுத்து விடுவாளோ  என்று பயந்து பெண் பார்த்த பையனுக்கு மணம் முடித்த அப்பா.

படிப்பு முடிந்த நாள்  அன்று  எதிர் வீட்டு பையனோடு ஓட்டம் அப்பா சொல்லமுடியாது தவிக்க அவளது அம்மா  வீட்டை வெளியில் வருவதையே தவிர்த்தாள்.

எதிரும் புதிருமாய் எப்படி இருப்பது.  வீடு விற்பனைக்கு என்று போர்டை தொங்க விட்டு ஒரு நாள் ராவோடு ராவாக வீட்டை காலி செய்து வெளியூர் சென்றது.

வீட்டுக்கு வந்து பழகிய பையன்  தன் பெண்ணை   காதலித்தான் என்பது  வீட்டிற்கு தெரியும்.  திடீரென்று  பெண் வீட்டை விட்டு வெளியேறி பையனோடு செல்ல     ஊர் வாய்காக பயந்து கொடி  பிடிக்கும் பெற்றோர்கள்.

 வீட்டின் கதவுகள்   பூட்டியே  கிடக்க வெளிவராத மனிதர்கள்.


தலைமுறைகள் மாறுகிறது. இச்சமுதாயத்தின் போக்குக்கு  தகுந்தாற் போல் இளைய சமுதாயத்தினுடைய  மனபோக்கில் பெரிய மாற்றங்கள்.

பழைமையின் வேர்கள் இன்னமும் கொஞ்சம் இருப்பதால்  பெற்றோர்களி்ன் மனமாறுதல் என்பது இக்காலத்திற்கு தகுந்தாற்போல் என்பது ஏற்று கொள்ளமுடியா நிலையில் அவர்களின் வேதனை இயல்பு தான்.

மன மாற்றம் பெற்ற இளைய தலைமுறைகளின் விளைவுகள் அறிய (குறிப்பாக பெண் தலைமுறை)  இன்னமொரு இருபதைந்து ஆண்டுகள் பொறுத்தால்   தெரியும்.

Wednesday, July 14, 2010

குறி பார்க்கும் பிள்ளை



மடித்துப் போன  கீற்றின்
வழியே இறங்கும்
மழைத்துளிகள்
வருசமாகியும் மாற்றப்படாத
வீட்டின் மேற்கூரை
அம்மா சொல்
உணர்த்தியும்
கவலைப்படா அப்பன்
போக்கு
அப்பனுக்கு தப்பாமல்
பிறந்த பிள்ளையின்
போக்கும் அப்பா
வழியே..
கருமேகம் பார்த்தவுடன்
குறி பார்க்கும் பிள்ளை
மழை பெய்யகூடாது
மனதில் எண்ணம்
நான் என்ன செய்ய?
அம்மாவின் திட்டலுக்கு
அப்பாவின் பதில்
பெய்த மழை
நனையாது தப்பிக்க
வீட்டினுள் புலம்பெயர்
 உயிர்ப்புகளாய்..

Saturday, July 10, 2010

நான் யார் ?



நான்  யார் ?   ஊர் எல்லையை  தாண்டி  தோப்புல  இருக்குற   வீரப்பன் மவன்  முனியாண்டி. 

அதான்   நீயா இல்ல வேற  எதாவதுமா ?

அய்யா என்ன கேக்குறியோ? 

இல்லடா நீ சொல்லற முனியாண்டியா   இல்லாட்டி  முனியாண்டின்னு வேறு எதுமா?

வீரப்பன் மவன்தாங்க நான்.

என்னங்க ஆத்தா ஊத்தி தர்ற கஞ்சிய குடிச்சுட்டு வய வேலக்கு போறது. சாங்காலம்   வேல முடிஞ்ச கையோட  வூட்டுக்கு வர்றது இதாங்க வேல..

எல  முனி இந்த மடைய  பாரு…

எல முனி  அந்த வயல தண்ணி கெடக்கா பாரு … வயகாரு கூப்புடறப்ப தெரியுங்க நாந் தான் முனியாண்டி

இத தாண்டி  வேற முனியாண்டிங்கிற எதுங்க ?

நான் யாரு  நம்ம மனசுல கேள்வி கேட்டு கிட்ட  இருந்தா  நீ முனியாண்டி யான்னு சந்தேகம் வந்துறுச்சுன்னா  நீ யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கான முதப்படி சொல்றாங்க

அய்யா சாமி  நாளக்கு  காத்தால  நடவு எல்லா வயலுக்கு தண்ணி பாய்க்கனும்  அதாங்க நமக்கு  எண்ணமா இருக்கு

இதயும்  தாண்டி நான்   கேள்வி கேட்டேன்னா  நாள வவுத்து பாடு சங்கடங்க…

Wednesday, July 07, 2010

சமாதானம்

ஆயிரம் சமாதானங்கள்  சொன்னான். சமாதானம் சொல்லஅவனுடைய மனது   தயாராகவே  இருந்தது.  அவன் செய்த செயல்களால்    துயரங்களுக்கு உள்ளானாலும் திரும்ப திரும்ப  தான் செய்வது சரிதான்  என்று வாதங்கள் புரிந்து  தன்னுடைய வழியே செல்ல ஆரம்பித்தான்.

இவன் உழைப்பால்  மட்டுமே   குடும்ப  நடத்த வேண்டிய  நிலையில் இவனுடைய சமாதானங்கள்  மென்மேலும்  குடும்பத்தினுடைய பலத்தை பலவீனமாக்கி கொண்டிருந்தது.

எடுத்து சொல்பவர்கள் எடுத்து சொன்னார்கள் மௌ    னமாய் அக்கறையாய் கேட்பான்.  ஒன்றை முடிவு செய்து  அவன் வழியில் செல்வான்   கேட்பதற்கும் செய்வதற்கும் தொடர்பே இல்லாது இருக்கும்

வாழ்க்கை  சூழல் நெருக்க ஆரம்பிக்க  அதற்கான   முன் சோதனைகளை தர ஆரம்பிக்க உழைக்க நினைத்தாலும் உழைக்க முடியா சூழல்.

நிற்க வே ஓடுகிறான். சரியாக நிற்கும் வரை ஓடதான் வேண்டும். வாழ்க்கை  வாய்ப்புகளும் காலங்களும் தான் வளமாக்கும். காலங்களையும்  வாய்ப்புகளையும் தவறவிட்டவர்கள்  துன்பபட்டுதான்  ஆகவேண்டும்.

பணம் தான்  வாழ்வாகி விட  பணம் சம்பாதிப்பதற்கான   வழிகள் இருந்தும்  சம்பாத்தியம்  பண்ணாது  வாய்ப்புகள்  வீணாக    துன்பங்கள் நிரந்தரமாக ஆரம்பித்தது.

LinkWithin

Related Posts with Thumbnails