Tuesday, November 30, 2010

மௌனம் ?



நீண்ட மௌனம்
காலம் கரைதலில்
உண்டான அர்த்தங்கள்
பல

மனது பேசியது
தொடர்புடையவர்கள்
தொடர்பு அற்றவர்கள்
முன்அறிவிப்பு
சொல்லாது வர

அன்பு காட்டி
சண்டை போட்டு
கட்டி  புரண்டு
கோபம் காட்டி
சமாதானம் செய்து

தனித்திருத்தலில்
மனதுடன் பேச்சு
மௌனம்?
பகல் கனவு..

Sunday, November 28, 2010

பெண் பார்க்க போறீங்களா...


சமுதாயபழக்க வழக்கங்களில் ஆண் , பெண் உறவுகள்,  நட்பு ,  தொடர்புகள் என்னதான் மாறினாலும் பாரம்பரியத்தை கட்டி காக்கும் கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

ஆண் திருமண   வயதை எட்டியவுடன் நெருங்கிய சொந்தம் தூரத்து சொந்தம்  என்று ஆணை   ப் பெற்ற தாயின்  பார்வை செல்லும் தன்னுடைய  வசதிக்கு நிகராக  இருந்தால் மட்டுமே பேச்சு தொடங்கும்.

தானாக பெண் கொடுக்க முன் வந்தால் கூட   “ எம்   புள்ள  புதுசொந்தம் வேணுங்கிறான் என்று சொல்லி தவிர்த்து விடுவார்கள்.

பெரும் சொத்துகாரர்கள் தான் அவர்கள் தன்னுடைய பையனுக்கு பெண் தேடினார்கள். சொந்தத்தில் அமைந்த ஒருபெண்   முடிவு சொல்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்து கடைசியில் இல்லை  என்று சொன்னார்கள்.
நிராகரிக்க பலகாரணங்கள் இருந்தது.

நல்லபடியாக  பெண் வாழ வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் அறிந்தவர்களிடம்   தெரிந்தவர்களிடம் விசாரித்து யாரோ  ஒருவர் சொல்லும்  வாதங்களின் அடிப்படையில் மாப்பிள்ளை  நிராகரித்தல் இருக்கும்.

பெற்றோர்கள் சொன்னதற்காக கழுத்து காட்டி கயிறு கட்டிய   ஒவ்வொரு பெண்ணின்வாழ்க்கையும்  நல்லபடியாக அமைந்ததும் உண்டு. அமையாததும் உண்டு.

புரோக்கரின் மூலமாக  வேறொரு பெண்ணின்    ஜாதகம் பார்த்து பொருந்தி போக   பெண் பார்க்கும் படலம்  மாப்பிள்ளை  பார்க்கும் படலம் முடிந்து ம் முடிவு சொல்லாது பெண்     வீட்டார்கள் முடிவு சொல்லாது  இழுதடிக்க  மாப்பிள்ளை வீட்டாருக்கு  அவசரம்.

 மாப்பிள்ளை  வீட்டார்  கேட்கும் அடுத்த மாதம்  அடுத்த மாதம் மூன்று மாதங்கள் ஆக   பையனுக்கு உள்ளுக்குள் கோபம்.

கடைசியாக பெண்   ணின் பாட்டி  மாப்பிள்ளை  பார்க்க வந்து  வீட்டில்  இருக்கும்  குறைகளை       சுட்டி காட்டியவுடன்  மாப்பிள்ளைக்கு வந்தது கோபம்.

பெற்றோர்கள் தடுத்தும்  மாப்பிள்ளை  வேகமாய்   பேச
நான் வர்றேங்க என்று சொல்லி சென்றவர்தான்.

மாப்பிள்ளை    வீட்டார்  புரோக்கர் இடத்தில் வேறு ஜாதகம் கேட்டிருந்தார்கள். 

Friday, November 26, 2010

தேடுதலில் தொலையும் வாழ்க்கை

தேடுதலில்
தொலைகிறது
வாழ்க்கை
காலையில்
தொடங்கிய
மழை  விடாது
பெய்தது
பசிக்க தவறாத
உடல்
உணர்த்திய அறிவு
பையில் காசு
உணவு தேடுகையில்
எரிய
மறுந்துப்போன
அடுப்புகள்
கடையில் தூங்கிய
பூனை
மழை பெய்கிறது
விட்டு விட்டு
வந்த மின்சாரம்
வராது நிற்க
இருளில் ழுழ்கிய
வீடு
தீக்குச்சிகள்
எரிந்த ஒலியில்
சிமில் விளக்கின்
தேடல்
வெளிச்சத்தில்
தூங்கிய குழந்தை
இருளில் முழித்து
வீறிட
பசியா…
பயமா…
உண   ர்வு தேடலில்
தாய்பரிதவிக்க
தந்தை
சிமில் விளக்கின்
தேடுதலில்…

Tuesday, November 23, 2010

குடி மறப்போம் குடி காப்போம்.

எங்கள் ஊருக்கு குடிவந்து பத்துவருடங்கள் இருக்கும். வெள்ளை வெளேரென்ற  தலைமுடியுடன் நல்ல திடகாத்திரமான உடல்வாகு.  எங்கள் ஊரின் உமர் முக்தார் என்று செல்லமாககூப்பிடுவார்கள். கிட்ட தட்ட எண்பதை நெருங்கி கொண்டிருந்தார்.  சோகங்களை  வெளியில் காட்டமாட்டார். எல்லோரிடமும் ஜாலியாக வம்பளத்தப்படி இருப்பார். பழையப் பாடல்கள் அத்துப்படி குரல் இனிமை.



இரு பையன்கள் மூத்தது அரசாங்க கூலி  இளையது சுமைதூக்கும் கூலி.

இளையது அன்றைய கூலியில் குடிப்பது போக  மீதம் தான் வீட்டிற்க்கு.  இளையதுக்கு இருபையன்கள்  கஷ்டம் தான்.

வேலை பார்த்து குடித்தது போக மூன்று வேலையும் குடிப்பதே வேலை ஆகி விட அப்பா (உமர்முக்தார்)கொடுத்த
நிலங்களும் அடமானம் ஆகிவிட்டது.

குடிப்பது குறைந்த பாடில்லை. 

என்ன கஷ்டமோ   தானாகவே பேசி  ரொம்பவும் குழம்பி கடைசியில் வயலுக்கு அடிக்கும்   பூச்சி மருந்தை வாங்கி குடித்து  நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர்துறந்தார்.

இனி அவரை நம்பியவர்களின் நிலைமை. எதிர்கால சந்ததியினர் நிலைமை ?

எனக்கு அவன் கொள்ளி போடுவான்னு நினைச்சேன் அவனுக்கு கொள்ளி போட்டாச்சு...
என்று தெரிந்தவர்களிடம் அவர்கள் கேட்கிறார்களோ    இல்லையோ    இவராக போய் சொல்லி ஆறுதல் தேடுவது தெரிந்தது.

Friday, November 19, 2010

கோபம்.



வராத  வேலைஆள்
வேலை  முடியலையே
ஆற்றாமை கோபம்
நேரில்
திட்ட முடியாத
முதலாளி
 நம்மை  புரியாத
வீட்டு மக்கள்
கோபம் வரும்
மனதில்
பல் கடித்து
தவிர்க்க முடியா
தருண   த்தில்
உயிரற்ற பொருளில்
கோபம் காட்டி
ஒதுங்கி செல்லுதலில்
முடிந்து விடும்
கோபம்.

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் தலையிலே..

கோடாலியை  வைத்து நெஞ்சை பிளந்து போட்டு விடலாம். ஆனால் பேச்சு…

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் தலையிலே..

ஆம்..அவர் அப்பா  வைத்துவிட்டு போன கடன் . கடன்காரர்களின் நெருக்குதல்  ஒரு நாள் செத்துப்போனார்.

வாடிக்கையாய்  கடன்காரர்களின் நெருக்குதல்   வீட்டில் பிரச்சனை  ஏற்படகூடா என்று நினைத்த கடைக்குட்டி பையன்.

நான் தர்றேங்க...

தந்தை இறந்தவுடன் குடி மாறி சென்றார்கள்.
பல வருடங்கள் ஆனது.

மூன்று பையன்கள் அதில்  இரு பையன்களிடம் அப்பாவின் கடனை  அடைக்க கூடிய முழு தகுதி இருந்தும்  யார் பட்ட கடனோ  என்கிற பாணி.

அன்று அவர் அப்பாவிடம்  பணம் கொடுத்து ஏமாந்த டீக்கடைக்காரர் பார்த்துவிட …

தண்ணி போட்டிருந்தார்.

யோவ்…என் பணத்த  ஏமாத்திட்டு போயிட்டீங்கிளா..
நீங்க நல்லா இருப்பீங்களா…என்று கேட்க ஆரம்பித்து.

யோவ்..முழுசா அய்யாயிரம் கொடுத்தேன்.

நான் போலீசுக்கு போறேன் சொன்னப்ப   நீ தர்றேன்னு சொன்னில்ல..

நாங்க என்ன வீட்டுல கூட்டி கொடுத்த சம்பாதிச்சும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது…

என்றார் கடைக்குட்டி பையனிடம். தலைகுனிந்த வாறே  நின்றிருந்தார் அந்த பையன்.

அவர் பக்கத்து நின்றிருந்த நண்பர்களாலும் எதுவும் பேச இயலாது நின்றிருக்க.

அவரால் கத்த முடிந்த மட்டும்   கத்தி விட்டு சென்றார்.

அவர் பேச்சு  முள்ளாய் தைத்தது.

Monday, November 15, 2010

செல்போனில் தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க..


செல்போனில் தேவையில்லாத   அழைப்புகள் , SMS   களை  தவிர்க்க  எந்த கம்பெனியாக இருந்தாலும் 

START   DND   என்று  டைப் செய்து 1909  என்ற  நம்பருக்கு அனுப்பி னால்      பதிலாக  ரெப்ரன்ஸ் நம்பர் ஒன்று தருவார்கள்.

45 நாட்களுக்கு   செல்போன் இணை  ப்பிற்கு வரும்  தேவையில்லா அழைப்புகள் , SMS  அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள்.

எனக்கு  இதுநாள்  வரை தெரியாது. நண்பர் ஒருவர் அறிய செய்ததால்   தெரியாதவர்களுக்காக இப்பதிவு.

Saturday, November 13, 2010

அதிகாரம்

நான் போகிறேன்
நாளைக்கு தள்ளிவை
இன்று
நான் போகிறேன்
சொன்னது-அதிகாரம்

வாய்மூடிய
மௌன    மாய் சம்மதம்

விருப்பமோ
விருப்பமில்லையோ
உட்படு- அதிகாரம்

வாய்மூடிய
மௌ   னமாய் கீழ்படிதல்

அன்பு, ஆர்வம்
மகிழ்ச்சி , விருப்பம்
அதிகாரத்தில் சிதைபவை.

Friday, November 12, 2010

காசு சிரித்தது.

பூப்பெய்தினாள் அந்தப்பெண். அவளுடைய அப்பா வெளிநாட்டில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தார்.
வீட்டோடு  மாப்பிள்ளை அவர்.

ஆரம்பகாலங்களில்   காசுக்காய்  பட்ட கஷ்டம் அதிகம். அந்த பெண்  குடும்பம். சகோதரர்களால் நல்லமுன்னேற்றம் ஏற்பட காசு பத்திய கவலை  இல்லாமல் போனது.

காசு தான் உலகம் என்று ஆனது அந்த குடும்பத்தினுடைய பெண்களுக்கு….

சகோதரனின்  நிதிபலத்தால்  புகுந்தகம் செல்லாமல்  பிறந்த ஊரிலியே  வீடு கட்டி கொண்டு தங்கிவிட்டார்கள்.
கணவன்மார்களும்பொண்டாட்டி  சொல் தட்டாது பிறந்தகத்தை விட்டு புகுந்தகம் வந்தார்கள்.

பொண்டாட்டிகளிடம் மதிப்பு கம்மி தான். என்ன செய்வது ? பிரச்சனை இல்லா குடும்ப நிர்வாகத்திற்கு ஆம்பிள்ளை சகித்து போகவேண்டும் என்கிற பாணி அவர்கள்.  கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.

காசு கண்ணை மறைக்க தன் பெண்ணின் சடங்கு போது  கணவன் வீட்டிற்கோ  கணவருடைய உறவினர் வீட்டுக்கோ சொல்லாமல் சடங்கு செய்தார்கள்.

கணவன் அப்பொழுது வெளிநாட்டில் இருந்தார். கோபம் அடைந்த கணவன் புகுந்த வீட்டிற்கு வராமல் பிறந்த   வீட்டிற்கு சென்று பெட்டியை இறக்கி அங்கேயே தங்கிவிட்டார்.

காசு போகுதே காசு.

பொண்டாட்டி கூப்பிட்டாள்  பதில் இல்லை.  சகோதரர்கள் முயற்சிக்க பலன் இல்லை.

அந்த ஊர் பெரியமனிதர்களை வைத்து பேச  அவர்களிடமும் பிடிவாதமாய் என் பெண்ணுடைய  தேவைக்கு என் வீட்டாரை  அழைக்கவில்லை யென்றால் நான் அவளுக்கு கணவனாக இருந்து என்ன பயன் ? என்று வாதம் செய்து  விவாகரத்து செய்யவும் தயார் என்று பிடிவாதம் பிடிக்க    காசு சிரித்தது.

பஞ்சாயத்தார்கள்  ஒருவழியாக பேசி அவரை சமாதானப்படுத்தி  புகுந்தவீட்டிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

அவர் கொண்டு வந்த  பெட்டி காசு சிரித்தது.

இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய பிறந்த வீடு சென்று பெட்டிகளை எடுந்துவந்து புகுந்த  வீட்டில் வைத்தார்.
அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை   முகம் சரியில்லை.

பெட்டிகளை  இறக்கி வைத்து டீ குடித்தார். ஏதோ பலகாரம் சாப்பிட்டார்.

அய்யோ   வலிக்குதே…. சாய்ந்தார்... சாய்ந்தே   விட்டார்.

காசு சிரித்தது.

Tuesday, November 09, 2010

நான் இருமை



மனமாகிய தன்மை
மனமற்ற தன்மை
நான் இருமை
கிளைக்கிறேன்
தொடர்பு பெறுகிறேன்
மனமாகி சிதைந்து
நான்
கொப்பளிக்கும்
எண்ண குழம்பினுள்
சிக்குகிறேன்
ழுழ்குகிறேன்
அய்யோ…!
அறைகூவல்
சின்னதாய்   விழிப்பு
கால்கள் உதைத்து
கைகள் அடித்து
தலை தெரிய மேல்
எழும்பி
திரும்பவும்
ழுழ்குகிறேன்.

Monday, November 08, 2010

இது எங்கள் தீபாவளி.

மாடும் மனிதரும் குளிக்கும் பொதுகுளத்தில்  எண்ணெய் தேய்த்து குளித்தலில் தொடங்கிய      தீபாவளி.

குளத்து அரசமரத்தடியில்  மிக்சர்  பாக்கெட் ஒருபீர் ஒரு குவாட்டர்ரெண்டு காளி பிளாஸ்டிக் டம்ளர் மூன்று வாட்டர்பாக்கெட்  பல் இளித்த   எங்கள்  ஊரில் வசிக்கும் ராஜ கம்பளத்தார் பையன்கள்.

அறிமுகம் ஆனாதல்   எண்ணா  இன்னிக்கு     தீபாவளி அதான் காலையிலே ?

நீ குடிக்கிறியா?

  பதில் சொல்லாது  பல் இளித்தலுடன் நான்.

குடிச்ச பாட்டில  ஒடைச்சு போடாது ஓரமா போட்டுட்டு போங்க  என்ற ஒரு வேண்டுகோளுடன்  விடுவித்து   கொள்ள
அப்புறம் என்ன செய்தார்கள் என்று தெரியாது வீடு நோக்கிய பயணம்.

எங்கள் வீட்டிலும்  தீபாவளி  தெரிய  கடமைக்கு வெடித்த பட்டாசுகள்  பட….ப்பட..பட  என  வெடித்தலில் குறை  இல்லை தான்.

வாழை  இலை பரப்பி வைத்த  எண்ணெய் பலகாரங்கள்  ஒதுக்கி இட்லியை ம ட்டும்   உட்கொண்டு எழுந்திருக்க  

ஏன் பலகாரம் பிடிக்கலையா ?  என வீட்டாரின் பதிலுக்கு இன்றைக்கு எதுவும் பிடிக்காது  என்று சொல்லி இடம் நகர்ந்தேன்.

நண்பர்களுக்கு போன் செய்து ஓர் இடம் கூடச்சொல்லி வண்டிக்கு இருவராய்  பக்கத்து  ஊரில் உள்ள பிரசித்த பெற்ற  கோவிலுக்கு   சென்று அரட்டை அடித்தது. 


மதிய சாப்பாட்டிற்குள் திரும்பி அவர் அவர்  வீட்டிற்கு  செல்ல  மாலையில் இங்கு கூடுவோம் என்று ஒரு நண்பர் கடையை குறிப்பிட்டு விட்டு  கலைந்தோம்.





இரவு  7.30 நண்பர் கடையில் ஒன்று கூடி டீ குடித்து  நண்பர் கொண்டு வந்த மத்தாப்பு  அயிட்டங்களை  ஆளக்கொன்றாய்  பத்த  வைத்த மத்தாப்புகள்  எங்கள்    தீபாவளி ஹைலைட்.

இரவு பத்து மணி   வரை அரட்டை பேசி   கலைந்ததுடன்  எங்கள் தீபாவளி முடிவு பெற்றது.

Wednesday, November 03, 2010

பட்ஜெட் தீபாவளி.



நிறைந்த கூட்டம் வேறுவழியில்லை  உள்நுழைந்து மனைவிக்கென ஒதுக்கிய பட்ஜெட்டில் கலர் புடவைகளின் தேடல்  மனதுக்கு பிடித்த கலர்..

இது எடுங்க?

விலை  கேட்டவுடன்  இல்லீங்க  இன்னும் கொஞ்சம் கம்மியா...

சார் கூட்டநேரத்துல வந்து...பட்ஜெட் சொல்லுங்க நான் எடுத்துவரேன்.

சொன்னவுடன் ...

எடுத்து வந்த புடவைகளில்  நல்லதாய் எடுத்துவீட்டிற்கு கொண்டு சொல்கையில் கலர் பிடிக்கவில்லையென்று  சொன்ன மனைவி.

அப்பா இது புடிச்சிருக்கு..

இது வேண்டா தம்பி ..இத எடுத்துக்க..



இரண்டு வருடம் கழித்து போடவேண்டிய துணியை  எடுத்து காட்டிய  அப்பா.

அப்பா வெடியும்    கம்பி மத்தாப்பும் நிறைய  வாங்கிதா.

ஒதுங்கிய பட்ஜெட்டில் ஒற்றை  கம்பி மத்தாப்பும் ஒற்றை   பட்டாசும் நாலு கலர்  தீப்பெட்டியும்.

ஊர்கடையில் போட்டிருந்த     தீபாவளி  ஸ்பெசல் பலகாரம் பாக்கெட் ரூ 50   வாங்கிய இரண்டு பாக்கெட் பலகாரம்.

பெருமூச்சு விட்ட    குடும்ப தலைவர். அப்படா  தீபாவளிய ஓட்டியாச்சு.

LinkWithin

Related Posts with Thumbnails