Friday, December 31, 2010

வீழ்வது பல விழிப்பது சில.



பரபரப்புக்கு   பஞ்சமில்லாத  நகரத்தின்  வீதிகள். பயண  த்தின்  இடை இடையே ஏற்பட்ட  வாகன நெரிசல்.  மக்களால் நிரம்பி வழிந்த  சூப்பர் மார்கெட்கள்.

 10 சதவீத தள்ளுப்படி 20 சத வீத தள்ளுப்படி  தேவை யில்லாதவற்றையும் தேவையாய்   வாங்கி குவித்த மக்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவச ப்பகுதியில்  முண்டியடித்த  கூட்டம்.

வாங்கிய  பொருளை  சுமந்து வருகையில்  கிடைத்த சந்தோ சம் எதுவரை  ?   கடை வரையிலா? வீடு  வரையிலா ?  அல்லது சுற்றத்தாரிடம் சொல்லும் வரையிலா?

கலர் கலராய் வண்ணவிள க்குகள் வெளிசத்தில்  வேண்டாம் என்கிற  மனோ  பாவத்தை   கூட   நமக்கு தேவை யோ   என்கிற மன ஆட்டத்தை  உண்டுபண்ணிய   பொ ருள்களின் அணிவகுப்பில் நடுத்தர  வர்க்கம் வீழ்வது நிச்சயம்.

புத்தாண்டு  சிறப்பு தள்ளுப்படியே  நடுத்தர வர்க்கத்தின் சில்லரை சேமிப்புகள்  பொ ருட்களாய் மாறி   புதிய வருசத்தின் முதல் நாளில் வீட்டினுள்கலராய் பல் இளிக்கும்.

வியாபார உல கின் கவர்ச்சியில்     வீழ்வது பல  விழிப்பது சில.

Thursday, December 30, 2010

பசி



களத்துமேட்டு
குப்பையை
கிளறிய கோ ழி
வேலிகால் முறித்து
பயிர்மேய்ந்த
மாடு
ஒரு ரூபாய் கூலி
தேநீர் வாங்க
ஓடிய சிறுவன்
உயிருடன் விளை  யாட்டு
ஒற்றை  கயிற்றில்
வித்தை
பசிக்காய் செயல்கள்
ஏதும் அறியாது.

Monday, December 27, 2010

தோல்விக்குப் பின்னால்... (பகிர்வு)


செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பாதை மாறியதால், அது மண்ணில் விழுந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வானிலேயே வெடித்துச் சிதறும்படிச் செய்தனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்புவதில் தோல்வியடைந்திருக்கிறோம்.
1979-ம் ஆண்டு முதலாக 7 முறை செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஏவப்பட்டு, நான்கு முறை தோல்வி அடைந்திருக்கிறோம். இத்தகைய தோல்விகள் வளர்ந்த நாடுகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரிய இழப்பு. தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் மதிப்பு ரூ. 125 கோடி. சென்ற ஏப்ரல் மாதம், பாதை தவறி கடலில் விழுந்த ராக்கெட்டின் மதிப்பு ரூ. 150 கோடி.
இதற்காக நம்பிக்கை இழந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இத்தகைய முயற்சிகளை நாம் நிறுத்த முடியாது,  நிறுத்தவும் கூடாது. இத்தகைய அறிவியல் சாதனைகள்தான் நம்மை உலக அரங்கில் தலைநிமிர வைக்கும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சிதான் ஒரு வளரும் நாட்டுக்கு முக்கிய அடையாளம் என்பதை மறுக்க முடியாது.
ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய தோல்வியை இந்தியா சந்திக்க நேர்கிறது என்பதை மிகத் துல்லியமாக, நுட்பமாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது மிகமிக அவசியம். இதற்காக இரண்டொரு நாளில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தியபோதும் இத்தகைய குழு அமைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும்கூட இப்போது புதிதாக ஒரு தவறு ஏற்பட்டு, அதன் காரணமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்த முடியாமல் போயுள்ளது.
கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் தேவையான முன்னேற்றம் காணவில்லை என்பது வெளிப்படை. தற்போது நாம் விண்ணில் செலுத்திக்கொண்டிருக்கும் ராக்கெட்டுகளில் ரஷியாவிடம் பெற்ற கிரையோஜெனிக் இன்ஜின்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன. புவியீர்ப்பு விசையை மீறி, சுமார் 2000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏந்திச்செல்ல வேண்டுமானால், மண்ணிலிருந்து புறப்படும் வேகம் மிகமிக அதிகமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பமாக கிரையோஜெனிக் இன்ஜின் அமைந்துள்ளது. இந்த முறையும் கிரையோஜெனிக் இன்ஜினை முடுக்கிவிடுவதில் ஏற்பட்ட கோளாறுதான் ராக்கெட் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. சரியாக எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.
தற்போது ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தைக்  கண்டறிந்தாலும்கூட, முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு காலத்தால் பின்னடைவு நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த பிரச்னையை அணுக வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.
முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொறியியல் மாணவர்கள் எல்லோரையும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாற்றுகின்றன. நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் கல்வியை அளிப்பது இல்லை. இதையும் மீறி நல்ல ஆராய்ச்சியாளர்கள் உருவானால் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆளில்லை.
கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எங்கள் மாணவர் ஆண்டுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று விளம்பரம் செய்யும் அவலம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் உருவெடுத்திருக்கிறது. எங்கள் மாணவர் இஸ்ரோவில் சேர்ந்திருக்கிறார் என்றோ, டிஆர்டிஓ-வில் ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றோ, கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்திருக்கிறார் என்றோ சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுமல்ல, அரசும் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டது.
இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களைவிட அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறுவது எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியாளர் நியமனங்களில்கூட, அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வேண்டியவர், தகுதியில் சற்று பின்தங்கியிருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் இவர்கள்தான் சில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவிகளில் அமர்கிறார்கள். அப்போது இவர்களது திறமைக்குறைவு எல்லாவற்றின் மீதும் படிகிறது.
மூன்றாவதாக, ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ என்றாலும், புதிய பீரங்கிகளை உருவாக்கும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானாலும் (டிஆர்டிஓ) தங்களுக்குத் தேவையான மிகச் சிறு கருவிகளையும் வெளியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தம் மூலமாகவே பெறுகின்றன. இத்தகைய அயல்பணி ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிற்கூடம், தரத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான தொழிற்கூடமாக இருந்தால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் பயனுறும். இதில் ஒரு சிறிய பாகத்தை தரக்குறைவான தொழிற்கூடத்திடம், அரசியல் நிர்பந்தம் அல்லது மேலதிகாரியாக இருக்கும் ஆராய்ச்சியாளரின் நிர்பந்தம் காரணமாக ஒப்பந்தம் கொடுத்து, செய்து வாங்கினால், இத்தகைய தோல்விகள் ஏற்படவே செய்யும்.
லாடம் சரியில்லாவிட்டால் குதிரை சரியாக ஓடாது. குதிரை சரியாக ஓடாவிட்டால் அதன் மீது அமர்ந்துள்ள ராணுவ வீரன் சரியாக சண்டையிட முடியாது. வீரன் சண்டையிட முடியாவிட்டால், போரில் தோல்வி தவிர்க்க முடியாதது. தரத்துக்கும் அறிவுக்கும் முன்னுரிமை தரப்படாவிட்டால் இதுபோன்ற தோல்விகளைத் தவிர்க்க இயலாது.


Sunday, December 26, 2010

தெருவோர மந்திரம்

எல்லோ  ருடைய  கண்களும் தரை நோக்கியே  குவிந்திருந்தன. உடுக்கை    சத்தம் வந்து கொண்டிருக்க தெரு கூத்துதான் நடத்தி கொண் டிருக்கி றார் என்று அ வ்விடம் செல்ல    பாம்பாட்டி   ஒருவன் பாம்புகளை   வைத்து கதை சொல்லி கொண்டிருந்தான்.

பேச்சின்      வீச்சில் ஈர்க்கப்பட்டு    கூட்டம் கூட  ஆ ரம்பிக்க பாம்புகளை   பெட்டி கட்டி  விட்டு  தாயத்து மத்திரம் என்று பெட்டிகடைப்பரப்ப அங்கிருந்து  கம்பி   நீட்டினோ  ம் நானும் என் நண்பரும் அப்போது க்ளிக்கியது.

கடைதிறக்கப்படுகிறது

பாம்பு வித்தை

தப்பிக்க நினைக்கும் பாம்பு

எங்க போற....

இன்னம் கொஞ்ச நேரம் நீ இப்படிதான்

கோபத்தில் சீறல்


Saturday, December 25, 2010

புகைப்படதொகுப்பு விவசாயி

மேற்பார்வை


சிந்திப்பு


தொலை நோக்கு


உழைப்பில் ஓய்வு

Friday, December 24, 2010

மனிதர்கள் தான். விலங்குகள் என்று சொல்லி


மாற்றத்துடன் தொடங்கிய காலை  நீலவானம் ஆரஞ்சு நிறம்பூசியிருக்க அங்கும் இங்கும் பறக்கும் பறவைகள் கோடைகாலங்களில் இந்த நிகழ்வு இயல்பு.

குளிர்    வீசும் காலையை  இளம்வெயிலில் சூடேற்றும் மனித உடல்கள்  சொந்தகதைப்பேசி ,    ர் கதைப்பேசி தன் நியாயங்களை  எடுத்துரைக்கும் உரையாடல் களம் என்னவோ   அந்த அரசமரத்தடிதான்.

அன்று  காலை     நீல வானம் முழுதும் வெள்ளைமேகங்கள் சூரியகதிர்களை  சிறைவைக்க  அரசமரத்தடி ஆ  ராவாரம் இல்லாமல் இருந்தது.

குளிர்விலகாத அந்த  காலைப்பொழுதில் அரசமரத்தின்காற்றுவீச்சில் உண்டாகும் குளிரில் சிக்கி கொள்ள விரும்பாத மனித உடல்கள் இன்னமும்  வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை மாறிகள்  பகுத்தறிவு விலங்குகள்.

இல்லை, இல்லை  பகுத்தறிவு மனிதர்கள் தான்.  விலங்குகள் என்று சொல்லி விலங்குகளை   அசிங்கப்படுத்த விருப்பமில்லை.

அரசமரம் நின்று கொண்டிருந்தது. எட்டுதிக்கிலும் தன் கிளைகளை   ப்பரப்பி  நடுவே  தன்  உடலை   கீழ்இறக்கி  வேர்களால்   நிலத்தில்  தன் பிணை   ப்பை பலப்படுத்தி நின்று கொண் டிருக்க  தினமும் கிளை களில்வழக்கமாய் வந்தமரும்  பறவைகள் வந்தமர்ந்து அரசமரத்துடன் உறவை ப் வளர்த்துகொண்டிருக்கும் இந்நிகழ்வு காலம் தோறும் நடக்கும் நிகழ்வு.

அரசமரத்தின் ஓரமாய்    மனிதர்கள் உருவாக்கிய  கோவிலை   புண ரமைத்து திருப்பணிகள்  நடைப்பெற   கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின்    மீது புனித நீ ர் ஊ  ற்றுவார்கள்.  புனித நீர் ஊற்றுவதை  மனிதர்கள் கண்ணை     மறைக்குமாம்.

அரசமரத்தின் கைகளை  வெட்டி வீழ்த்தி கொண்டிருந்தார்கள்  எங்கேயோ    வலித்தது.

Tuesday, December 21, 2010

மனிதம் எங்கே ?


விலங்குகள்  வாழும்
நாட்டில்
மனிதத்தை தேடுகிறோம்
இனப்பாகுபாடாய்
வதம்
மனிதம் அழிகிறது
பசிக்கு இரைத்தின்னும்
விலங்குகளுக்குநடுவில்
மனிதம் அழிவது
உண்மை
விலங்குகள்
கத்தும் ஊளையிடும்
சத்தங்கள் யாவும்
சர்வதேசத்து
செய்தியாய்…

Sunday, December 19, 2010

பாமர விவசாயி -2ஜியும்



2G  யை ப்பற்றி தெரியாத  விவசாயி  இருவர். கலைஞர் தெரியும் கனிமொழியை தெரியும் . ஆர்.ராசா வை   இப்பொழுது தான் தெரியும்.

என்னங்க  ஆயிரம் கோடி ரூபாயா கொள்ள அடிச்சுப்புட்டாங்க ...உண்மை தாங்களா...

டி்வி் போட்டு போட்டு காட்டுறாங்க என்னங்க அது.

இன்னொ  ரு விவசாயி       நீ வேற  இலட்சம் கோடிக்கு மேலன்னு சொல்லுறாங்க...

கலைஞருமாங்க செஞ்சாரு இத...

எல்லாருக்கும் பங்கு வராமாய டி.வி.  ல்ல  போடுறான்.

நிவாரணம் கொடுப்பாங்களா..

போனாவாட்டி மாதிரி கெடையாது. அந்தந்த வயல பாத்துதான் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க...

இன்சூரன்ஸ் கட்டுன்னு பணம்.

தஞ்சை மாவட்டத்துல தான் பாதிப்பே  இல்லேன்னு சொல்லுறாங்க...

பாதிச்ச வயல் மட்டுதான்கொடுப்பாங்க போலிருக்கு..

தேர்தல் வருதுல்ல   கலை ஞரு ஒரு தள்ளு தள்ளுவாருன்னு சொல்லிகிட்டாங்க..

அத நம்பிதான்  இன்சூரன்ஸ் கட்டிருக்கேன்.

அட ஏங்க...போன  மழைக்கு முத மழை பேஞ்சுதுல்லஒரு பயிரு   அழிஞ்சு போவாத  பெரும் விவசாயிய்க  இலட்ச  கண   க்குல  நிவாரணம்  வாங்குனாவோ.....

என்னமோ   பாப்போம் மேல  உக்காந்துகிகட்டு  இலட்சம் கோடின்னு சாதரண  மா   அடிக்கிறான்.

நாம   ஏக்கருக்கு ஆயிரம் அறிவிப்பானா...ஐயாயிரம் அறிவிப்பானா அவன் வாய்ய  பாக்க வேண்டியது தான்.

Wednesday, December 15, 2010

அறிவிப்பு


நீண்ட
மௌன     யுத்தம்
உச்சியில்
பறக்கும் பறவையின்
பறத்தல் ஓசையில்
கலையாத
வானத்தின் மௌ   னம்
இலை கள்அசையாது
காற்று
தன் மௌ   னம்
வெளிப்படுத்த
திக்கற்ற இலக்கில்
வெறித்த பார்வை
இமைகள் மூடாது
தன் மௌ    னம்
வெளிப்படுத்த
வழிந்த கண்ணீர்
கோடுகள்
பசித்தசிறுவனின்
யோ சிப்பில்
காலம்
தன் மௌ   னம்
வெளிப்படுத்த….

அகதிகள் முகாம்
ஆறுமணிக்கு
சாப்பாடாம்அறிவிப்பு.

Tuesday, December 14, 2010

பயணம்



வேகமாக முன்னேறிய  இருசக்கரவாகனம்  எதிர்புறம் சைக்கிள்  மிதிக்கின்ற சிறுவன்   வர ஓரத்தில் கிடக்கின்ற விறகு கட்டினை   தவிர்த்து இருசக்கரவாகனத்தை  கடக்க நினைத்துஇருசக்கரவாகனம்  விறகு கட்டுக்கு இடையில் மாட்ட  இருதலை பாம்பாய் அவன்நிலை  முன்னேறவும் முடியாது  ஒதுங்கவும் முடியாது விறகு கட்டில் சைக்கிளுடன் சாய்ந்து  பயணம் தடைப்பட்டது.

இருசக்கரவாகனம் முன்னேறியதுவளைவில் வந்திருந்த வண்டி வேகமாய் வர  லாரி ஒன்றை கடக்க நினைத்து இருசக்கர வாகனம்வேகமாய் வர வளைவில் வந்த வண்டியும் வேகமாய்வர லாரியும் வேமாய்தான் போய்கொண்டிருந்ததுஇரண்டு வண்டிகளுக்கும் நடுவில் இருசக்கரவாகனம் அடிவயிற்றில் பயம் கிளம்பியதுஇருசக்கரவாகனத்துக்கு  பதட்டதில் மேலும் வேகம் மூன்று ஒன்றாய்  லாரி டிரைவர் சைடு கண்ணாடி வழியாக  பார்த்து வேகம் குறைக்க இருசக்கரவாகனம்  தப்பித்தது.

இருசக்கரவாகனம் முன்னேறியது பதினைந்து நாட்கள் மழையில்  சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட   தார் சாலையின் இருபக்கங்களிலும்   பெரிய குழிகள்  தினசரி செல்பவர்கள்      ஞாபகம் வைத்து  ஆபத்தில்லாது கடக்க  
புதிய வாகன  ஓட்டிகள் விழிப்புண  ர்வுடன் வாகனம் ஓட்டினால் மட்டுமே  பிழைக்கலாம். இரவு நேரம் 7 மணி முதல் 9 மணி வரை   வண்டிகளுக்கு பஞ்சமில்லை   குழிக்குள் இருசக்கர வாகனத்தை விட்டால் கட்டாயம் பின் வரும் வண்டியில் தப்பிக்க முடியாமல் இறக்கநேரிடலாம் அல்லது கால் கை போகும்.

அப்படிதான் இரவு நேர வண்டிபயண  ம் நண்பர்கள்  இருவர் ஜாலியாக பேசியப்படி ஆபத்து இவர்களை நோக்கி வருவது அறியாமல்வேகமாய் செல்ல   ஒரு குழிக்குள் விழுந்து ஏற  பின்னால் உட்கார்ந்திருந்தவர்    தூக்கி எறியப்பட்டு சாலையோர  புதருக்குள் விழ வாகன ஓட்டிக்கு சிராய்ப்புகளுடன்  வலி  வெளிச்சம் இல்லா அந்த இரவில் பின்னால் உட்கார்திருந்த நண்பனை  தேடுகையில் விரக்தியின் உச்சம்.

இருசக்கர வாகனம் முன்னேறியது  30    நாட்களாக குடிக்காமல் அய்யப்பன்   பக்தராக இருந்து மலையேறி திரும்பியவுடன்  மாலையை  கழட்டி விரதம் முடிக்க அப்படா இன்னிக்கு புல்லா அடிக்கனும் நினைத்து கொண்ட டூ  வீலர் மெக்கானிக்  வண்டி களுக்கு  உதரிபாகங்கள் வாங்கி  திரும்புகையில்   வழியில் இருந்த ஒயின்ஷாப்பில்  புல்லாய்  அடித்துவிட்டு    நிதானமாய்  ஓட்டுவதாக நினைத்து அதிக வேகத்துடன் வண்டி ஓட்டி பெரியவாகனத்தை கடக்க நினைக்கியில்  எதிர்வந்த வண்டியில் நேரிடையாக மோத    உயிர் விண்ணுக்கு உடல் மண்ணுக்கு என்றானது.

இருசக்கரவாகனம் முன்னேறியது.

Tuesday, December 07, 2010

மக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும் தஞ்சை வெ.கோபாலன் (பகிர்வு)

இந்தியச் சுதந்திரத்தின் ஆயுள் இப்போது 63 ஆண்டுகள். பணி ஓய்வு பெற்றுவிட்ட வயது. வாழ்வின் மேடு பள்ளங்களை நன்கு உணர்ந்து பண்பட்ட வாழ்க்கையை நடத்துகின்ற வயது. குறித்த வயதுக்குள் நல்ல கல்வி, நடுத்தர வயதில் தேடிய செல்வம், ஓய்வு பெறும் வயதில் நல்ல சேமிப்பு, குறைகளைக் களைந்து, வாழ்வாதாராத்துக்கு நல்ல வாய்ப்புக்களைக் கொண்ட வாரிசுகள், நல்ல வளமான வாழ்வு- இதுதான் வாழ்க்கைத் தத்துவம். இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்துக்கு, நாட்டுக்குத் தேவையான வாழ்க்கைத் தத்துவம். இதனை இந்தியச் சுதந்திரம் பின்பற்றியிருக்கிறதா என்கிற கேள்வி நம்முள் ஏற்படுவது இயற்கைதானே.
கடந்த 63 ஆண்டுகளில் இந்திய நாடு முன்னேறவே இல்லை, நாட்டின் வளம் பெருகவே இல்லை, தனிநபர் வாழ்வு வளமானதாக ஆகவே இல்லை என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு நாமெல்லாம் கருத்துக் குருடர்கள் அல்ல. முன்னேற்றம் அடைந்திருப்பது உண்மை, முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். அப்படி அடைந்த முன்னேற்றம் எல்லா மட்டங்களுக்கும் சரிசமமாகப் போய்ச்சேரவில்லை. செல்வம் ஓரிடத்தில் சேரவும், அடிமட்டத்தில் பலர் அவதிப்படவும் செய்திருக்கிறது. ஊழலும் தவறுகளும் நமது முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருந்து சரிசமமான முன்னேற்றத்தை முட்டுக்கட்டைப் போடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதுதான் குறையே தவிர, முன்னேற்றமே இல்லை என்பது நமது வாதம் அல்ல.
1944-இல் இரண்டாம் உலகப் போரின் முழு அழிவுக்கு ஆளான ஜப்பான் அழிவிலிருந்து மீண்டு இன்று உலகப் பொருளாதாரத்துக்கு ஆதாரமான நாடாக இருப்பதைப் பார்க்கிறோமே. ஹிரோஷிமா நாகசாகியின் அழிவு உலகில் வேறு எந்த நாட்டுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக் குறிதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜப்பானைப் போல நாம் ஏன் முன்னேறவில்லை? இந்தக் கேள்விக்குச் சரியான விடையை நாம் கண்டுபிடித்து விட்டோமானால், நாம் விழித்துக் கொண்டு விட்டோம் என்று பொருள்.
சீறிப்பாய்ந்து முன்னேற்றம் (Great Leap Forward) அடைந்தது சீனாவின் சாதனை. பழமையெனும் அடிமைத் தளையிலினின்றும் மாவோவின் தலைமையில் சீனா சீறிப் பாய்ந்தது. நமக்குப் பின்னால் தவழ்ந்து வந்த அந்த நாடு இன்று அமெரிக்கா எனும் வல்லரசுக்கே அச்சுறுத்தலாக விளங்குவதைப் பார்க்கிறோம். இது எதனால் சாத்தியம் ஆயிற்று? நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற பல கிழக்காசிய நாடுகள் கூட செல்வத்திலும் தொழில் துறையிலும் தனி நபர் முன்னேற்றத்திலும் பல காத தூரம் முன்னேறிப் போய்விட்டதைப் பார்க்கிறோம். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும் அளவிடற்கரிய இயற்கைச் செல்வ வளங்களும் நிறைந்த நாம் மட்டும் ஏன் அப்படிப்பட்டதொரு முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. இதனை எப்போதாவது நாம் சிறிது சிந்திக்க வேண்டாமா?
இந்தியாவில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை. உழைக்க ஆள்களுக்குப் பஞ்சமில்லை. தோண்டி எடுக்க எடுக்கக் கொடுக்கும் இயற்கை வளங்களுக்கும் குறைவு இல்லை. மூலதனம் ஒரு சிலர் கரங்களில் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் மட்டும் பல மடங்கு தொழில்களை அதிகரித்துக் கொண்டு மிகப் பெரிய தொழிலதிபர்களாக முடிகிறது. என்றாலும் சாதாரண- உழைக்கும், அடிமட்ட, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் ஓரளவுதான் உயர்ந்ததே தவிர, மற்றவர்களுக்கு இணையாக வளர முடியவில்லையே ஏன்?
அன்று கிராமங்களில் கிராம அதிகாரிகள் பரம்பரையாக வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்குக் கிடைத்த ஊதியம் எனப்படுவது ஒரு நாள் செலவுக்குக் கூட போதுமானதாக இருந்ததில்லை. இருந்தாலும் அவர்களுக்குத் தாங்கள் இருக்கும் இடத்தில் நல்ல மரியாதையும் தொழிலில் காட்டிய அக்கறை, நேர்மை இவற்றால் மக்களிடம் அன்பும் கிடைத்தன. ஊதியத்தை நம்பி வாழாமால் அவர்களது சொந்த வருமானத்தில் கெளரவமான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்திருந்தது. அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒரே ஒரு கையெழுத்தால் வெளியே தூக்கி எறியப்பட்டு விட்டனர். புதிது புதிதாக தாலுகா அலுவலகத்துக்கு ஆள்களை நியமிப்பது போல புதிய ஆள்களை கிராம அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். இது ஆர்.எம்.வீரப்பன் என்பவரின் மூளையில் உதித்த புதிய சிந்தனை என்பாரும் உண்டு. எது எப்படியோ, வழிவழி வந்த பாரம்பரியத் தொண்டு, செல்வத்தை அள்ளிக் குவிக்க ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்து விட்டது.
அன்றைய கணக்குப் பிள்ளைக்கு ஊரில் எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் உண்டு; அவை எத்தனை ஏக்கர்; கோயில் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு என்று அவைகளைப் பிரித்தும் அவை இருக்கும் இடங்களையும் தெரிந்து வைத்திருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல் யாரும் ஒரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமித்துவிட முடியாது. தன் வீட்டில் வறுமை இருந்தாலும் பொதுச்சொத்தை எவரும் அபகரித்துவிடக் கூடாது என்ற ராஜவிசுவாசம் அவர்களிடம் இருந்தது. இன்று லஞ்ச ஊழல் தடுப்புத் துறையால் அதிக அளவில் கைது செய்யப்பட்டவர்கள் கிராம அதிகாரிகள் என்ற செய்தி நம் நெஞ்சங்களை வாட்டுகிறது. காரணம் இந்த லஞ்ச ஊழல்களால் 
பாதிக்கப்படுவோர் சாதாரண ஏழை விவசாயி, உழைப்பாளிகள்தான். வசதியற்ற மக்களுக்குப் பல சலுகைகளை அரசு அறிவிக்கிறது. அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்குப் பல சான்றிதழ்கள், குறிப்பாகச் சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவை தேவைப் படுகின்றன. இவற்றைச் சர்வ சாதாரணமாக மக்களால் வாங்க முடிகின்றதா? ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ரேட்’ உண்டு. நியாயமாகக் கிடைப்பதானால் பல நாள்கள், வாரங்கள், மாதங்கள் கூட தாமதம் ஆகும். ஆனால் கொடுப்பதைக் கொடுத்தால் வாங்குவது சுலபம். இந்த நிலை யாருக்கு? மேல் தட்டு மக்களுக்கா? அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அன்றாடம் காய்ச்சிகளுக்குத்தான் இந்த அவல நிலை. அவர்கள் கொடுக்க எங்கே போவார்கள். ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி சாப்பிட வசதி படைத்த, நல்ல வருமானம் உள்ளவர்கள் நினைப்பது சரியா? அல்லது அப்படி வாங்காமல் கொடுத்தால் இவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டு விடுமா? இல்லை, வெறி; மேலும் மேலும் பணம் காசு தேவை என்ற வெறி. ஆடம்பரம் தேவை என்பதால்தான் இதெல்லாம் நடக்கின்றன. லஞ்சம் வாங்குபவன் ஏழை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
1965-இல், எனது 27-ஆவது வயதில் எனக்குப் பிறப்புச் சான்றிதழ் தேவைப் பட்டது. அப்போது திருச்சி மாவட்டத்தில் ஒரு ஊரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் பிறந்த, இப்போதைய நாகை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக் கர்ணம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். மூன்றாவது நாள் எனக்குத் தபாலில் அந்தச் சான்றிதழ் வந்தது. தபால் செலவு கூட அவருடையது என்பதை கவனிக்க வேண்டும். இது சாத்தியப்பட்டது எங்கே? இங்கேதான், நமது தமிழ்த்திரு நாட்டில்தான். அன்று முடிந்தது, இன்று முடியுமா?
லஞ்சம் எனும் பேயை விரட்ட, அடியோடு ஒழிக்க நாமும் என்னென்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம். லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒரு வாரம் கொண்டாடி லஞ்சத்தை எதிர்ப்பதாக வானை எட்டுமளவுக்கு உரத்த குரல் எழுப்புகிறோம். அதன் பயன் எங்காவது ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?

வறுமையின் காரணமாக ஒரு வேளை உணவுக்காகத் திருடியவனைப் பிடித்து அடித்து உதைத்து சிறையில் தள்ளி, வாழ்நாள் முழுவதும் அவனை திருடன் என்ற பெயர் சூட்டி சமுதாயத்தில் ஒரு புதிய சாதியை உருவாக்கும் நமக்கு, நமக்கு முன்னால், எல்லா வசதிகளோடும், நல்ல பதவியிலும், நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு லஞ்சம் வாங்கி நாய்ப்பிழைப்புப் பிழைக்கும் சிலரை நாம் அப்படி இழிவாகப் பார்ப்பதில்லை. வாங்கும் லஞ்சத்தில், செய்யும் ஊழலில் எல்லை என்பதே இல்லை. கோடி ரூபாய் என்பதை ஒரு ரூபாயாக மாற்றிக் கொடுத்தால் எண்ணக்கூடத் தெரியாத சில தற்குறிகள் பெரிய பதவிகளில் உட்கார்ந்துகொண்டு பல லட்சம் கோடிகளைச் சுருட்டிக் கொள்வதை, பொறுமையாக, எந்தவித எதிர்ப்புமின்றி இந்தச் சமுதாயம் பார்த்துக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்ல, அந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு மதிப்பு, மரியாதை கொடுத்து மாலை போட்டு பாராட்டிக் கொண்டிருக்கும் அசிங்கம் இந்த நாட்டில் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி மக்களைச் சுரண்டும் சுதந்திரத்துக்காகவா மகாத்மா முதல் அடிமட்ட தொண்டன் வரை அனைத்தையும் இழந்து தியாகம் செய்தார்கள்? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கும் மற்றொரு காரணம் மக்களிடையே பிரிவுகள், விரோதம், எதிர்ப்பு ஆகியவைகளாகும். இவற்றுக்கு யார் காரணம்? மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விட்டால் கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களை ஒன்றுபட்டு எதிர்ப்பார்கள். ஆனால் அவர்களைப் பல்வேறு காரணங்களைச் சொல்லி பிரித்து விட்டால் ஒற்றுமை ஏற்படாதே! அவர்களால் எந்த ஆபத்தும் எவருக்கும் ஏற்படாதே! இது பிரிட்டிஷார் கடைப்பிடித்து வந்த தந்திரம். வேறு எதைக் காப்பி அடித்தார்களோ இல்லையோ, இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியை நம்மவர்கள் நன்றாகக் கடைப்பிடித்து கொண்டு வருகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சாதிகளுக்குள் விரோதம் இல்லை, வெறுப்பு இல்லை, சண்டை இல்லை. அப்படி இருந்தால் சரிவராது என்றோ என்னவோ, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து சாதிப் பிரிவினைகளைச் சொல்லி பிளவுகள், விரோதங்கள், சண்டைகள். நல்ல பிள்ளை போல் சமத்துவம் பேசிக் கொண்டே பிரிவினைகளுக்குத் தூபம் போட்டுக் கொண்டு வருவது ஒரு சாமர்த்தியம். இரண்டு பூனைகளுக்குள் ரொட்டியைப் பிரித்துக் கொடுப்பதாக வந்த குரங்கு எப்படி அவற்றை ஏமாற்றி அனைத்தையும் தானே சாப்பிட்டதோ அது போல இன்றைக்கு மக்களைப் பிரித்து வைத்து ஆதாயங்களைத் தானே அனுபவிக்கும் மொள்ளைமாறித்தனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கும் விடிவு இல்லையா?
ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் தோண்டித் துருவி ஆராய்ச்சிகள் நடத்தும் இந்திய நாட்டின் பெரும் அறிவாளிகளுக்கு இமயமலை போல வளர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஊழல்கள் பற்றித் தெரியவில்லையா, அல்லது இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா? சரி, அறிவாளிகளுக்குத் தான் சிந்தனை இல்லை என்றால், இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய இடத்திலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இவைகளெல்லாம் கவனத்துக்கு வரவில்லையா? வராமல் இருக்குமா! சரிதான் ‘இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா’ என்று கவுண்டமணி பாணியில் கண்டும் காணாமல் போய்விடுகிறார்களா? தெரியவில்லை.
தங்களது ஆடம்பரத் தேவைகளுக்காக, குறுக்கு வழியில் சம்பாதிக்க லஞ்சம் வாங்குகிறார்களா அல்லது வசதி பெருகப் பெருக மேலும் ஆடம்பரங்களை அதிகரித்துக் கொள்ளவும் தனக்கு மேலுள்ளவர்களுக்குக் கொடுப்பதற்காகவும் லஞ்சம் வாங்குகிறார்களா? இரண்டாவதாகச் சொன்ன வழிமுறைதான் லஞ்சத்துக்கு வழிவகுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நேரம் கடந்தும் தங்களது பணிகளைச் செய்து முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில்தான் வீட்டில் மனைவி வாங்கி வரச்சொன்ன அரிசி அல்லது முக்கிய சாமான்களின் நினைவு வரும். அப்போது அருகிலுள்ள மற்ற நண்பர்களிடம் ஒரு பத்து ரூபாய் கடன் கேட்பார்கள். அவர்களிடமும் இருக்காது. யாரிடம் இருக்கிறதோ அவரிடம் போய் கேட்டு வாங்கி மறுநாள் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்ட அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட நிலைமை இருந்ததற்குக் காரணம் அன்று லஞ்சம் வாங்குவோர் காளான் போலப் பெருகி இருக்கவில்லை. இன்று என்ன ஆயிற்று?

சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட ஒரு லஞ்சப் புகார். DRO என்ற கெசடெட் பதவியில் இருந்தவர். விரைவில் IAS அளிக்கப்படவிருந்தவர், லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார். இவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கும் இவருக்கு ஏன் இந்தக் கீழ்மையான புத்தி? இவருக்கு வசதி குறைவா? சாப்பாட்டுக்கு இல்லையா? அரசாங்கம் இவருக்கு ஊதியம் வழங்கவில்லையா?
மற்றொரு நிகழ்ச்சி. மருந்துகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் ஒரு அரசாங்க அதிகாரி. இவர் லஞ்சம் வாங்குகையில் பிடிபட்டார். இவருக்குச் சென்னையில் பல மாளிகைகள், கோடிக்கணக்கில் சொத்து, இவையெல்லாம் எப்படிக் கிடைத்தது? இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன என்பதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்களுக்கு இருக்கும் சொத்து அன்றைய டாட்டா, பிர்லாக்களுக்கோ, நமது மாநிலத்தில் உயர்ந்த அந்தஸ்த்திலிருந்த பல நிலப்பிரபுக்களுக்கோ கூட கிடையாது.
இப்படி ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு அன்று முகங்களை மூடிக்கொண்டு போலீஸ் வண்டியில் ஏறிப் போனார்களே, அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள், சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்களா? அவர்கள் லஞ்சத்தில் சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா? ஒன்றும் தெரியவில்லையே. மக்களும் அன்றைய பரபரப்பை அன்றோடு மறந்து விடுகிறார்கள். இதையெல்லாம் நினைவுப்படுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லயா என்ன? இவ்வளவு ஆன பின்பும் அந்த ஊழல் பெருச்சாளிகள் சமூகத்தில் வெள்ளையும் சள்ளையுமாக நடமாடுவதைக் கண்டு நாம் தலை குனிவதா? அவமானப்படுவதா? தெரியவில்லை.
அரசியல்வாதிகள் மேடை ஏறிப் பேசும்போது நமக்கு மனமெல்லாம் பால் பொங்குவது போல மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இனி நமக்கு எந்தக் குறையுமில்லை. பாலும் தேனும் நாட்டில் பெருக்கெடுத்தோடப் போகிறது. தொழில் வளம் பெருகப் போகிறது. வேலையில்லா நிலை என்பதற்கு இனி வேலையே இல்லை. அவரவர்க்குச் சொந்தமாக வீடு, நிலம், வருமானம், கலர் டி.வி., காஸ் அடுப்பு, வீட்டு வாயிலில் மாப்பிள்ளைத் திண்டில் சாய்ந்து கொண்டு நிம்மதியான வாழ்க்கை என்று வண்ண வண்ணக் கனவுகளில் ஆழ்ந்து போகிறோம். அத்தனையும் கிடைத்து விடுகிறது. மக்களுக்கு அல்ல. வாய் கிழியப் பேசுபவர்களுக்கு. இத்தனைக்கும் இவர்கள் பதவிக்குப் போகும்முன்புவரை அன்றாடம் காய்ச்சிகள். இன்று பணம் காய்ச்சிகள். ஜனநாயகம் என்பது இதுதானா?
இவ்வளவு நடந்தும் எங்காவது ஒரு சிறு முணுமுணுப்பு.. அந்த ஊழல் பெருச்சாளிகள் வரும்போது ஒரு அலட்சியம். ஊகூம். கிடையாது. அவர்களுக்குத்தான் ராஜ மரியாதை. ஊர்வலம், மாலை மரியாதைகள். அட என்ன இது கேவலம்! அநீதி கோலோச்சினால், நேர்மையும் நியாயமும் சவக் குழிக்குள் படுக்க வேண்டியதுதானா? மக்களுக்கு மனச்சாட்சி இல்லாமல் போனது ஏன்? ஊழலைக் கண்டு கொதிக்க முடியாமல் போனது ஏன்? எதிர்ப்புத் தெரிவிக்க அச்சப்படுவது ஏன்? சிந்தித்துப் பாருங்கள். எதிர்ப்பைத் தெரிவிக்கவும் ஒரு தார்மிக உணர்வு வேண்டும். நாமே தப்பு செய்பவராக இருந்தால் யாருடைய தப்பை எதிர்த்துத் தட்டிக் கேட்க முடியும்?

நம்மைச் சுற்றி நடக்கும் ஊழலுக்கும், தவறுகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாக ஆகிப் போகிறோம். இலவசமாக ஏதாவது ஒரு மிட்டாய் பொட்டலத்தைக் கொடுத்தால் வாய் நிறைய பல்லாக அதனை வாங்கித் தின்று மகிழ்கிறோம். இலவசம் என்பது இழிவு என்ற உணர்வு இல்லை. பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரும் உரிமை எல்லோருக்கும் கிடையாது. யார் ஒருவர் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்வதில்லையோ, யார் ஒருவர் பிறருக்காகவே அனவரதமும் இறைவனை வேண்டிப் பிரார்த்தனை நடத்திக் கொண்டு தன் வயிற்றுப் பாட்டைப் பற்றிக் கவலைப் படாமல் பிறருக்காக மட்டும் வாழ்கிறார்களோ, அத்தகைய உத்தமர்களுக்குத்தான் யாசகம்/இனாம்/இலவசம் வாங்கிக் கொள்ளும் உரிமை உண்டு.
மாற்றான் உழைப்பில் வயிறு வளர்க்கும் எத்தர்கள், தன் தவற்றை மறைக்க இனாம் கொடுக்க முன்வரும்போது, அதனை வேண்டாம் என்று மறுக்கும் மனத் திண்மை நமக்கு வேண்டும். அது இல்லாமல் கொடுக்கும் இனாமுக்காக அலையோ அலையென்று அலைந்து, அவர் இவர் என்று எவர் காலிலும் விழுந்து, வாங்கும் போதே நாம் நம் சுயமரியாதையை இழந்து விடுகிறோம். எல்லாவற்றிலும் மேலான இழிவு ஜனநாயகம் நமக்களித்திருக்கும் மிகப் பெரும் உரிமையான “வாக்களித்தல்” எனும் உரிமைக்குப் பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளித்தல். இது போல ஒரு கேவலமான போக்கு வேறு எதுவும் கிடையாது. இதற்கு என்னதான் வழி? முரசொலி மாறன் ஒரு திரைப்படத்தில் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது. அதில் புத்த பிட்சு ஒருவர் அசோகச் சக்கரவர்த்தியிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்…
அசோகர் சொல்கிறார். “தெளிந்த நீரோடை போன்ற என் மனத்தை அறிவு எனும் கல்லெறிந்து கெடுத்துவிடாதீர் பிட்சுவே,” என்று.
அதற்கு பிட்சு சொல்கிறார், “உலகில் கெடுக்க முடியாத நபர்களே இல்லையப்பா. கேவலம், வெள்ளிப் பணத்துக்காக உடலின்பத்தை அள்ளி அள்ளி வீசும் ஒரு விலைமாதைக் கூடக் கெடுத்து விடலாம், ஒருவன் நல்ல உள்ளத்தோடு அவளைத் திருமணம் செய்து கொள்வதால்” என்று.
இது ஒரு புதிய பார்வை. கெடுத்தல் என்பது நல்லவனைத் தீயவனாகக் கெடுப்பது மட்டுமல்ல. தீயவனை நன்மை செய்து நல்லவனாக மாற்றுவதும், அவன் போக்கிலிருந்து கெடுப்பதும்தான். இன்று நமக்குத் தேவை இந்த உணர்வுதான். தீமையே வாழ்க்கை, தவறுகளே தங்கள் வழி என்று இருக்கும் மக்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டு நல்லவர்களாக நேர்மையாளர்களாக மாறி நல்ல வழி நடப்பதுதான் நாட்டின் கேடுகளுக்கெல்லாம் அருமருந்து.

Sunday, December 05, 2010

காலத்தின் சக்கைகள்



காலசக்கரத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாது தன்னை விடுவித்து கொண்டவர்கள். செயல்களின் போக்கு தெரியும். காலத்தின் சக்கைகள் அவர்கள். பின்வருபவர்களின் வேகஓட்டத்தை நிதானப்படுத்தும் சக்கைகள் அவர்கள்.

தான் விதைத்ததை அறுவடை செய்து பலன் அனுபவிப்பவர்கள்.
நல்லதோ கெட்டதோ  அவர்களின்மனகுமுறல்கள் அவர்கடகுள்ளே உணர்ந்து அழிந்துபோனவர்களும் உண்டு
மனகுமுறல்களை   வெளியிட்டு ஆதரவு தேடியவர்களும் உண்டு.

பின்வருபவர்கள் பின்பற்ற நடந்தவர்களும் உண்டு .பின்வருபவர்கள் முகம் சுழிக்க செயல்பட்டவர்களும் உண்டு.

சங்கீதா     சீனிவாசன் கவிதை   ஒன்று

        முதியோர் இல்லத்தில்
        ஒரு தாயின் கண்ணீர்
       
        மகனே
        நீ இருக்க ஒரு
        கருவறை இருந்தது
        என்வயிற்றில்!
        
        ஆனால்
        நானிருக்க ஒரு
        இருட்டறை  கூடவா
        இல்லை
        உனது  வீட்டில்!           

Saturday, December 04, 2010

இருள் விடியல்


வாழ்வின் நிலையாமை
நிர்ணயிக்கும் தேடல்களில்
தட்டுபடாத
எனது நம்பிக்கைகள்
எதிர்கால நினைவுகளுடன்
இரவின் தூக்கம்
நிகழ்காலத்தில்
நான்  வாழ்ந்திராத
வாழ்வை   வாழ்ந்து
முடிக்க
இரவின் முடிவு
பகல் வெளிச்சமாய்
விடியலில்
எனது நம்பிக்கைகள்
நோக்கிய  
எனது பயணத்தில்
இருளும்
விடியலுமாய்...

Wednesday, December 01, 2010

அருளாசியை நான் தேடவில்லை

பல்வேறு திசைகளில் எனக்குள்ள பல்வேறு முனைப்புகளையும் பல்வேறு நபர்களுக்கு இடையில்
உள்ள இறுக்கங்களையும்  என்றாவது ஒரு நாள் என்னால் சரி செய்ய முடியும் என்று நான் எண்ணியதுண்டு . இப்போது
நானே அவையாகத்தான் இருக்கிறேன் என்பதை  நான் உண  ர்ந்து கொண்டுவிட்டேன். எனது தலைக்குள் இருக்கும் பாடலுக்கு மேலும் அருகில் நெருங்கி வருகிறேன் என்று நான் நிஜமாகவே உண  ர்கிறேன். அருளாசியை    நான் தேடவில்லை. அருளாசி என்னை த் தேடிக் கொண்டிருக்கிறது.

(போனோ  ,U2 வின்தலைமைப்பாடகர்)

வாழ்க்கை வெகுதூய்மையான   வீரசாகசமாகும். இதை எவ்வளவு முன்னதாக நாம் உணர்ந்து கொள்கிறோமோ   அவ்வளவு விரைவாக வாழ்க்கையை  ஒரு கலையாக நம்மால் பாவிக்க முடியும்.

(மாயா ஆ ஞ்சலோ   )

LinkWithin

Related Posts with Thumbnails