Saturday, January 08, 2011

நன்கொடையும் பிச்சையும்



கோவில் புண  ரமைக்கும் பணி அந்த கிராமத்தில் தொட ங்கியது. பெரிய தொகை  செலவாகும் நிகழ்வு அது. நிதி வேண்டி கை நீட்டப்பட்டது.  தனிமனிதன் கை நீட்டினால் அது பிச்சை   குழு  கை   நீட்டினால் அது நன்கொ டை.

அரசாங்க அ திகாரி யும் அலுவல ர்களும் கை நீட்டுவது அது கௌ  ரவ பிச்சை.
அதாங்க லஞ்சம். …

பொ துமக்கள் தாராள மாய் நிதி வழங்கும் பொ ருட்டு கவர்ச்சி அறிவிப்பு ஒ ன்றும் வெளியிடப்பட்டது. ரூ 10000   க்கு  மேல் நன்கொ டையாக தருபவர்களின் பெயர்கள் கல்வெட்டில்  பெய ர் பொ றிக்கப்படும் என்பது தான் அ றிவிப்பு.

ஊ  ரில் வாழும்பெரும் பண  க்காரர்கள் பிழை ப்புக்காய் வெளிநாடு சென்றவர்கள் தங்களால் இயன்றவரை   கொ டுத்து தங்களுடைய  பெயர்கள் கல்வெட்டில்வர நிச்சயப்படுத்தி கொ  ண்டார்கள்.

இ ப்படியாக  நிதி கொ டுத்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்குஅருகில் வாழும் சுற்றத்தார்களுடைய   குழந்தைகளின் கல்வி   பொ  ருளாதார இடர்பாட்டினால் கேள்வியாய் நிற்கும்.   ஏழ்மையினால்  மட்டுமே சமுதாயத்தில் விலை   போ  காத முதிர்கன்னிகள் நிறை யவே இருப்பார்கள்.

இதை விடவும் கொ டுமையாக  தன்னை   பெற்றவர்களுக்கும்   தன்னுடன் உடன்பிறந்த வர்களுக்கும் பயன்தராத  இந்தபணம் இது போ ன்ற கோ வில் காரியங்களுக்கு பயன்தரும்

 "கவிக்கோ' அப்துல் ரகுமான் அ வ ர்களின் கவிதை வரிகள் மிகவும்  சிந்தனை க்குரியது.


சகோதரா
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்
நீ நூல் பல கற்றபோது
நூலால் உயரும் பட்டம்போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்து கொண்டேயிருக்கிறாய்
மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கிவிட்டது
பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றுடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா?

8 comments:

Thekkikattan|தெகா said...

நல்ல சிந்தனை...

//அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா?//

அழகா போட்டுருக்கார், கவிக்கோ!

கடின உழைப்பின் பேரில் வெளிநாடு சென்று ஈட்டிய பணத்தில் அதன் வலி உணராது அதனை அனுபவிக்கும் தன் மக்களை பொருத்தான எனது பார்வை...

உறவறியும் மெக்சிகன்

நீங்க இணைச்சிருக்கிற புகைப்படம் என்னுள் பல சிந்தனைகளை கிளறிவிடுகிறது.

ஜோதிஜி said...

ஒரு படம் ஓராயிரம் சிந்தனைகள்.

தமிழ் உதயம் said...

கவிதை உண்மையை சொல்கிறது.

http://thavaru.blogspot.com/ said...

தெகா , அன்பின் ஜோதிஜி இருவருக்கும் தோன்றிய சிந்தனைகள் சிலது எழுதி வைக்கலாமா ....

http://thavaru.blogspot.com/ said...

தெகா உறவறியும் மெக்சிகன் எதார்த்தம்.

http://thavaru.blogspot.com/ said...

ஆமாங்க தமிழ்உதயம் நன்றிங்க.

arasan said...

உங்களின் பதிவு சிறப்பான மற்றும் ஒரு தரமான பதிவும் கூட ..
புகழ் தேடுபவன் இருக்கும் வரைக்கும் இந்நிலை மாறாது....

http://thavaru.blogspot.com/ said...

உண்மைதாங்க அரசன்.

LinkWithin

Related Posts with Thumbnails