Wednesday, March 09, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையின் உள்ளமானது தன்பிறப்பிலிருந்து சூழ்நிலை யின் பல முரண்பாடுகளுக்கு இடையில் வள ர்ந்து வருகிறது.


குழந்தைகளின் சுயேச்சைத் தொழில்களின் மீது பெரியவர்கள் தம்அதிகாரத்தைச் செலுத்திவருகின்றனர். இந்த அடக்குமுறைகளின்  காரணமாக குழந்தையின் சுயேச்சை நடத்தை   தடைபட்டு குழந்தை   உள்ளத்தில் மன நோ ய்க்குரிய வித்துகள் தோ ன்றுகின்றன . 

குழந்தையை ச் சுற்றிலும் உள்ள பெரியவர்களில் குழந்தையினிடம் அதிக ஆதிக்கம் செலுத்த உரிமையுடையவர் தாயார்தான்.

குழந்தையின்  ஞாபகங்கள் . அந்த  ஞாபகங்களில் அடங்கியிருப்பவை  என்ன? மனிதனுக்கும் , தற்காலச்சமூகச் சூழ்நிலை க்கும் ஏற்படும் முரண்களா? இல்லை . குழந்தைக்கும் , தாயாருக்கும் - பொதுவாகக் குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்படும் முரண்கள் என்றே கூறவேண்டும். இந்த முரண்கள் தீரா நோயை  உண்டாக்கலாம். உடல் நோ யாகட்டும்,  மன நோயாகட்டும், மழலை  பிராயத்தில்நடந்த விஷ  யங்களின் முக்கியத்தைப் பொறுத்திருக்கிறது.

குழந்தையின் உள்ளத்தைப் பகுத்தறியக் கூடாது. அதை நாம் கவனிக்க வேண்டும். கூர்ந்து நோக்கவேண்டும். உள த்தன்மை  நோக்கோடு கவனித்து , எவ்வாறு குழந்தையானவன் பெரியவர்களிடத்திலும் சூழ்நிலை யிடத்திலும்  நடந்துகொள்கிறான் ,  என்னென்ன இன்பதுன்பங்களை  அனுபவிக்கிறான்  என்றெல்லாம்  யூகிக்க வேண்டும்.


பருவமடைந்த  மக்கள் வாழ்க்கையின் போக்கு குழந்தையின் உளவாழ்வையே  ஒட்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினை யில் பிறப்பிலிருந்து இறப்புவரையுள்ள சகல வாழ்க்கை அம்சங்களும் அடங்கும். 

பெரியவ ர்கள் தங்கள் அதிகார தோரணையைக் கொ ண்டுகுழந்தைக்குப் பற்பல இடையூறுகள் விளை விக்கின்றார்கள். இதைக் குழந்தை தன் புலன்களால் அறிந்துகொள்கிறான்.

பெரியவர்களின் செயலால் குழந்தைகளின் கட்டமைப்பு சின்னாபின்னப்பட்டு உருக்குலை கிறது. இதன் காரணமாக குழந்தையின் நடுமனதில் உயர்ந்தவனாக்குவதற்கு பதிலாக தாழ்ந்தவனாக்குவதற்குரிய  இடையூறுகள் தோன்றுகின்றன.


(தொடரும்)


3 comments:

தமிழ் உதயம் said...

குழந்தைகள் குறித்த எந்த விஷயமும் அழகானதாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும். குழந்தைகள் குறித்த இந்த பதிவும் பிடித்துள்ளது - அழகான படத்துடன்.

ஹேமா said...

நிறைவான தகவல்கள் வருமென எதிர்பார்க்கிறேன் !

தவறு said...

நன்றிங்க தமிழ் & ஹேமா..

LinkWithin

Related Posts with Thumbnails