Sunday, March 13, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையானது வளரவேண்டிய வகையில் வளரமுடிவதில்லை . ஏனென்றால் பெரியவர்கள் அவனை   ஒடு்க்குகின்றனர். ” பெரியவர்கள்” என்பது உருவமற்ற பொ துப் பண்புப்பெயர். குழந்தையானது சமுதாயத்தில் ஓர் தனியன் . பெரியவ ர்கள் குழந்தையை    மாற்றுகின்றனர் என்னும்போது பெரியவர்கள்  என்பது குழந்தையைச் சூழ்ந்திருக்கும் பெரியவர்களையே குறிக்கும் .

முதல் பெரியவர் தாய். பிறகு தந்தை. பிறகு ஆ சிரியர் ஆ வர். குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து முன்னேறச் செய்யவேண்டிய ஒரு பெரும் பொ றுப்பைச் சமூகம் பெரியவர்களுக்குக் கொ டுத்திருக்கிறது.

பெரியவர்கள் என்ன  செய்கினறார்கள்?  தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து நல்வழியில் முன்னேற்ற எவ்வளவோ   முயற்சி செய்கின்றனர். இப்படி முயற்சி செய்யும்போது பெரியசிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன்? தாங்கள் தமக்குள்ளே அடைத்து வைத்திருக்கின்ற பல குற்றங்களை த் தாமே அறியாததனால் தான். 


குழந்தையிடம் தற்காலம்   நாம் நடந்துகொ ள்ளும் முறையை விட்டுவிட்டு  வேறுவிதமாக நடந்துகொ ள்ள வேண்டும். இதற்கு முதலில் செய்யவேண்டியது பெரியவர்களின் மாறுதல்  ஆகும்.

குழந்தையிடம் கூட நமக்குத் தெரியாதது எவ்வளவோ   இருக்கிறது. அதை நாம் அறியவேண்டும்.  குழந்தயை  உள்ளது உள்ள படி காணமுடியாத ஒருகுறை தன்னுள் இதுவரை இருந்து வருவதை  உணரவேண்டும்.

குழந்தையைப் பொறுத்தமட்டில் பெரியவனாவன் தன்னை  வைத்தே பிறரை மதிப்பவன் ஆ கிவிடுகிறான். குழந்தை  உள்ளத்தைப்  பாதிக்கும்  ஒவ்வொ  ன்றையும் தன்னை  அது  எவ்வாறு பாதிக்கிறதென்றே கவனித்து வருகிறான்.  இந்தக் கொ ள்கையால் தான் குழந்தையை ஓர் வெற்றுப்பொருள் என்று கருதி தான் நல்லதுஎன்று கருதுவதை எல்லாம் குழந்தையிடம் நிறைத்து வைக்கமுயல்கிறான்.

பெரியவர்கள் தான்  நன்மை  தீமைக்கு உரைகல். பெரியவர் குற்றமே   செய்யமுடியாதவர். குழந்தை அவரைப்பார்த்துத் தான் தன்னை நல்லவனாக்கிக்கொ ள்ளவேண்டும் என்ற  இத்தகைய  மனப்பான்மையைக் கொ ள்ளும்போது  நம்மை அறியாமலே நாம் குழந்தையின் தன்மையை   அழித்துவிடுகிறோ ம்.  

4 comments:

ஹேமா said...

ம்...பதிவை அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.குழந்தையைப் பாதுகாக்கிறோம் நல்வழிப்படுத்துகிறோம் என்று சொல்லிச் சொல்லியே பயந்தாங்கோழியாக மாற்றிவிடுகிறோம்.ஆனால் இங்கு அப்படியே மாறிக்கிடக்கிறது குழந்தை வளர்ப்பு.ஆனால் இந்தக் குழந்தைகளின் குணமும் வித்தியாசம்தான் !

http://thavaru.blogspot.com/ said...

ஆமாம் ஹேமா..அங்குள்ள குழந்தை வளர்ப்பை கவிதையா தரலாமா ...

எண்ணங்கள் 13189034291840215795 said...

இதற்கு முதலில் செய்யவேண்டியது பெரியவர்களின் மாறுதல் ஆகும். //

ஆமா. சரியா சொன்னீங்க..

நாமே இன்னும் கற்கும் நிலைதான்.. நமக்கெல்லாம் தெரியும் என்ற நினைப்பே முதல் தோல்வி..

குழந்தையை நாம் மட்டும் வளர்க்கவில்லை.. சமூகமும்..

நல்ல சமூகம் அமைப்பதும் நம் முதல் கடமை..

நல்ல பதிவு வாழ்த்துகள்

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க பயணமும் எண்ணங்களும்.

LinkWithin

Related Posts with Thumbnails