Wednesday, March 30, 2011

கோடை


அக்கினி நட்சத்திரம் ஆ ரம்பிக்கும் முன்னே ஆ ரம்பித்த கோ டை.

காலை  பனியின் ஈரம், வயல் ஈரம் நம்பி பயிர் செய்த தானிய வகை செடிகள் வெம்மை  தாளாது வாட தொ டங்கின.

தர்பூசணி வண்டிகளின் நடமாட்டம் தெருக்களில் அதிகமாகியது. எலுமிச்சை பழ பயன்பாட்டினால் ரூபாய்க்கு மூன்று விற்ற எலுமிச்சை    ஒன்றுக்கு ரூபாய் ஐந்தனாது.

ரூபாய் ஐந்திற்க்கு விற்றும் அவசரத்திற்கு கிடைக்காத நிலைமை.   தினமும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தயாரிக்கப்பட்ட  நீர் மோ ரின் சுவை   திடீரென்று கிடைக்காத எலுமிச்சை பழத்தினால் ” சப்”  என்றாகியது.

தாறுமாறாய் ஓட தொ டங்கிய எண்ணங்களில் இறந்தகாலமும் எதிர்காலமும் நிறையவே இருக்க அடைந்த பாதிப்புகளும் அடையாத குறிகோள்களும் அதிகமாய் வாட்டி வதைத்தது.

குளுமை  தேவை  நீர் தேவை  நீர் இருக்கும்பொழுது வராத பொ றுப்பு  இப்பொழுது வந்தது கூட  கோபமும் வந்தது. தடைப்பட்ட மின்சாரத்தினால் விசிறிகளின் தேடல் தொடங்க இருந்த  விசிறிகளின் இயக்கம் தொடங்கியது.

வ ளமை  முக்கியமென்றால் கோடை  முக்கியம்.

கோடையை  வரவேற்று வெப்பத்தில் இளை ப்பாறுவோ ம்.

2 comments:

ஹேமா said...

இங்க இப்ப 2-3 நாளாத்தான் சூரியன் கொஞ்சம் வெளில எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கார்.நீங்க கோடையை வரவேற்கத் தொடங்கிட்டீங்க.
கோபமும் வேணும்...
கோடையும் வேணும் !

http://thavaru.blogspot.com/ said...

பளீரென்று வெண்மையாய் பார்க்கவே கண் கூச கதிரவன் வீச்சு ஹேமா..

LinkWithin

Related Posts with Thumbnails