Tuesday, March 08, 2011

வழித்தேடிய வண்ணத்துப்பூச்சி



வெட்ட வெளியில்
சுற்றி திரிந்த
வண்ண  த்துப்பூச்சி
தப்பி தவறி
சன்னல் வழியே
மண்டபத்தில்
உட்கார இடம்தேடி
ஓர் கிளை  தேட
மரம் அழித்த
மனித தலை களால்
நிரம்பிய மண்டபம்
மாலை நேர
செயற்கை வெளிச்சம்
வழி தெரியாது
வண்ண  த்துப்பூச்சியின்
பறத்தலில்
நிரம்பிய மண்டபம்
தன்னந்தனியாக
சுற்றி திரித்தலில்
தவித்த மனதும்
லயித்த கண்களும்
வழித் தேடி…
அமர இடம் தேடி…
இன்னமும் அலை ந்தது        
வண்ண  த்துப்பூச்சி

2 comments:

ஹேமா said...

மரங்களை அழிக்கும் மரத்த மனிதப் பண்பைப் பாடுகிறது பட்டாம்பூச்சி !

தவறு said...

ஆமாங்க ஹேமா..!!

LinkWithin

Related Posts with Thumbnails