Tuesday, April 19, 2011

குழிதோண்டல்களும் உயிர்பழிவாங்கல்களும்


கட்டங்களுக்குள் நகரும் வாழ்வு. பரந்து விரியும் யோ சிப்புகளுக்கு நடுவே  சில  எல்லைகளை   தாண்டமுடியாத வாழ்வு.

யாரும் எவரும் அவரவர்களின் மன விரிவாக்கத்திற்கு தகுந்த மாதிரி தான் யோ சிப்பும் வெளிப்பாடுகளும்எல்லாமும் வாழ்வில் நடந்தவை  சிலவாகவும் நடக்காதவை  பலவாகவும் இருப்பது உண்மை.


நம்குடும்பத்தில் நமக்கு சரியாக தெரியும் ஒன்றை   நடைமுறை படுத்திவிடலாம் என்று யோ சிக்கையில்  ஒரு குடும்ப நபரின்  முரண்பாடு மொ  த்தகாரியத்தையும் சிதைத்துவிடும்.

சமுதாயம் என்று வரும்போது  அதிகாரத்தில் உள்ளதனிமனித   விருப்புகளும் வெறுப்புகளும் முக்கிய பங்காற்றும் அது ஆதரவோ   அ ல்லது உயிர்பழிவாங்கலோ   எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்.

எத்தனை விதமான  பார்வை களை    அ வர்கள் தெரிந்து வைத்திருந்தாலும்  அ த்தனையும் சரியாய் சமுதாயத்திலும்கையாளப்படுகிறதா என்பது சந்தேகம் தான்.

கோடிகளை  அமுக்கும் அரசியல்வாதிகளாகட்டும் இனவதை  செய்யும் அதிபராகட்டும் அவனுடைய   முதல்தகுதி தனி மனிதன்  இதில்  தன்னுடைய   குழுமம் தான் பிரதானம்அதற்கு பிறகு தன்னை  சார்ந்தவர்கள் என்றே விரிவடைகிறது. மற்றவையெல்லாம் சாதாரணம் தான்.

இதன் அடிப்படையிலேயே  குழிதோண்டல்களும் உயிர்பழிவாங்கல்களும் சொத்து சேர்ப்புகளும் மற்றஎல்லாவிதமான  நல்ல கெட்ட செயல்களை  யும் வரலாறு பதிவு செய்கிறது. 

ஏதோ   நம்மால் இயன்றவரை நம்மளவில் நாம்.....

நமக்காக
நம்மை  சேர்ந்தவருக்காக முடிந்தால் செய்து முடித்து நம்மை  சேராதவருக்காகவும் நாம் விரிவடைய  வேண்டியது தான்.  


13 comments:

தமிழ் உதயம் said...

நன்றாக எழுதி உள்ளீர்கள். சிந்திக்க வைக்கும் பதிவு.

ஹேமா said...

ஆசைகள் இல்லாமல் போகும் சமயத்தில்தான் பொதுநலப்பார்வை வரும்.அதுவரை குருடர்கள்தான்.மனமும் பக்குவப்படாது !

தவறு said...

நன்றிங்க தமிழ்.

தவறு said...

ஆசைகள் இல்லாமல் போகுமா ஹேமா..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நமக்காக
நம்மை சேர்ந்தவருக்காக முடிந்தால் செய்து முடித்து நம்மை சேராதவருக்காகவும் நாம் விரிவடைய வேண்டியது தான். //

நான் அடிக்கடி சொல்வதும் நினைப்பதும் இதுவே..

ஒரு வயது வரை நமக்காக வாழ்ந்துவிட்டு மிச்ச வாழ்வை சமூகத்துக்காக வாழ பழக்கப்படுத்தணும் ஒரு கலாச்சாரமாகவே..

நல்ல சிந்தனை தவறு.

ஹேமா said...

நிச்சயம் மனம் பக்குவப் படும் நேரம் ஆசைகள் இல்லாமல் போகும்.அடுத்தவர்களின் நலனைப் பெரிதாய் நினைக்கும் !

தவறு said...

நன்றிங்க பயணமும் எண்ணங்களும்.

தவறு said...

மனதின் பக்குவபடும் காலம் எது ஹேமா ?

ஜோதிஜி said...

மனதின் பக்குவபடும் காலம் எது ஹேமா ?

தவறு.

அட உங்க பேரு இல்லைங்கோ?

உண்மைதாங்க. நாம் செய்யும் தவறுகள் நமக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள். அதுவே தான் பரிட்சை என்ற பெயரில் பக்குவபடுத்துதலையும் செய்து கொண்டே வருகின்றது.

ஹேமா said...

நன்றி ஜோதிஜி.சொல்லத் தெரியாம தடுமாறிச் சொன்னதைச் சரியாச் சொல்லீட்டீங்க.என் மனசு பக்குவப்பட்டிருக்கு.அதாவது அனுபவப்பட்டிருக்கு.அதிர்ச்சி,பயம் எல்லாம் தாண்டி உண்மையை உணருது.இதுதான் பக்குவம் !

ரதியின் பதிவிலயும் இப்பிடித்தான் சரியா சொல்லத் தெரியாம முழுசுறேன் !

தவறு said...

எல்லோருக்கும் நீங்கள் சொல்லும் பதில் பொருந்துமா அன்பின் ஜோதிஜி.

உதாரணம் மது குடிப்பது தவறு.அதனாலயே தனிமையின் சிலநேரங்களில் குடிப்பது தவறு என்று தெரிந்தும் அதைநாடியே...ஏன்?

இதுபோன்ற வாழ்க்கை நிகழ்வுகள் பல..

அன்பின்ஜோதிஜி & ஹேமா.

ஜோதிஜி said...

பொதுவா மது சூது மாது போன்ற பழக்கங்கள் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் இப்போதுள்ள சமூக சூழ்நிலையில் படித்தவர்கள் கூட அதை விட்டு மீண்டு வர விரும்புவதில்லை

பொருளாதார ரீதியாக தாழ்வு உருவான போதிலும் கூட தங்களை இது போன்ற நிலைகளில் இருந்து எவரும் மீட்டு எடுத்துக் கொளவதில்லை. உடல் ரீதியாக மன ரீதியாக பாதிப்படைந்து பரலோகம் செல்ல தயாராக இருக்கிறார்கள். சிலர் தான் திருந்தி மீண்டு வாழ முயற்சிக்கிறார்கள்.

நடிகர் ஆனந்தராஜ் கதை உங்களுக்கு தெரிந்தது தானே.

தங்களுடைய அனுபவங்களை தங்களுக்குரிய பாடங்களாக மாற்றிக் கொள்ள விரும்புவர்களுக்கு நினைத்த அளவிற்கு பண பொருளாதாரம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அமைதியான குடும்ப வாழ்க்கை அமைவது உறுதி.

என்னைப் பற்றி தான் நிறைய தெரிந்து வைத்துள்ளீர்களே? மீதி நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்க.

தவறு said...

"தங்களுடைய அனுபவங்களை தங்களுக்குரிய பாடங்களாக மாற்றிக் கொள்ள விரும்புவர்களுக்கு நினைத்த அளவிற்கு பண பொருளாதாரம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அமைதியான குடும்ப வாழ்க்கை அமைவது உறுதி."

மனதார ஏற்றுகொள்கிறேன் அன்பின் ஜோதிஜி.

LinkWithin

Related Posts with Thumbnails