Monday, April 25, 2011

கேள்விக்கு எதிர்கேள்வி.


“ஈழத் தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்“ என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் ஒரு சம்பவம்....

1985 மே மாதத்தில் ஒருநாள் ..கருணாநிதியை சந்திக்க நெடுமாறனும் வீரமணியும் சென்றிருந்தார்களாம். வைகோவின் தூண்டுதலால் இந்தசந்திப்பு நடந்துள்ளது. வீரமணியுடன்“விடுதலை “   சம்பந்தமும் சென்றுள்ளார். இவர் கருணாநிதியின் இளமைக் காலத் தோழர்களுள் ஒருவர். “ ஈழப்போராளி இயக்கங்களுக்குள் சகோதரச் சண்டை நடப்பதால் இனி இந்தப் பிரச்சனையில் நான் தலையிடப்போவது  இல்லை!“ என்று அறிவித்து அமைதியாக இருந்த காலகட்டம் அது.

“ பிரபாகரன் என்னை மதிக்கவில்லை  மதியாதார் தலை வாயிலை மிதிப்பது தமிழ்ப்பண்பா? “ என்று கருணாநிதி கோபமாகக்  கேட்க....

“பாலஸ்தீன விடுதலை ப் போராட்டத்தை ஆதரித்து எழுதுகிறீர்கள்...பேசுகிறீர்கள். யாசர் அராஃபத் என்றைக்காவது உங்களை  மதித்துச் சந்தித்தாரா? கடிதமாவது எழுதி இருக்கிறாரா?“ என்று கேட்டாராம் “விடுதலை “ சம்பந்தம்.


நன்றி ஜீ.வி.

8 comments:

ராஜ நடராஜன் said...

இன்றைக்கு நிருபர்கள் கேள்விகளுக்கும் கூட கருணாநிதி சொன்னதின் ஒரு பகுதி...

//விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு தி.மு.கழகத்தைப் பொறுத்த வரையில் தீவிரமான ஆதரவு என்றைக்கும் உண்டு. ஆனால் அவர்கள் தான் எங்களை விட்டு விட்டு வேறு ஆதரவைத் தேடிப் போய் அதனால் நஷ்டம் அடைந்தார்கள். அதற்காக நாங்கள் அவர்களை கை விட்டு விட முடியாது.//

வேறு ஆதரவு என்ற உள்குத்து புரிகிறதா?

தமிழ் உதயம் said...

ஈழ விவகாரத்தில், பல நேரங்களில் - அவரது சொல்லும், செயலும் வருத்தமளிக்கும் விதமாக தான் இருந்தது.

ஹேமா said...

சும்மா சும்மா அவரைத் திட்டாதீங்க.உண்ணாவிரதம் இருக்கலியா.தந்தி தந்தியா அனுப்பலியா !

http://thavaru.blogspot.com/ said...

கணக்கு வழக்கு பாத்து கழுத்து அறுப்பவர் ராஜநடராஜன் அது லட்சம் தமிழர்களாய் இருந்தாலும் கூட...

http://thavaru.blogspot.com/ said...

இதாங்க அரசியல் தமிழ்..

http://thavaru.blogspot.com/ said...

எல்லாம் யாருக்காக ஹேமா....

எண்ணங்கள் 13189034291840215795 said...

ராஜ தந்திரி என்றால் சும்மாவா?..

http://thavaru.blogspot.com/ said...

ஆமாங்க உண்மையே அவரு ராஜதந்திரிதாய் பயணமும் எண்ணங்களும்.

LinkWithin

Related Posts with Thumbnails