Thursday, April 28, 2011

வெப்பசலனமும் எண்ண சலனமும்.


வெப்பசலனத்தால் ஏற்பட்ட கோடைமழை இரண்டு மூன்று நாட்களாய் சில  மணிநேரங்கள் பெய்தாலும் தரை குளிர கொ ட்டி தீர்த்தது. கோ டை வெப்பம் கொ ஞ்சமாய் குறைந்திருந்தாலும்  நிறைய  விவசாயிகளின் லாப கண  க்கை பொய்யாக்கியது.

சித்திரை பட்டம் விதைத்த உளுந்து வகை தானியங்களில் முளை த்தலில் பெரும்சேதத்தை  விளை வித்தது எதிர்பாராது  எதிர்பார்க்காத நேரத்தில்  பெய்த கோடை மழை.

மாலை  நேரங்களில் வீசிய குளிர்ந்த காற்றில்  லேசான மனது.

அவன் குரல் வழக்கத்தை விட கடுமையாயிருந்தது.  படித்தான்   மனதின் போக்கு வேறு திசையில் பயணித்தப்படியே இருக்ககைகளில் செய்திதாள்வைத்திருக்க கண்கள் ஒரு திசையில் உற்றுநோக்கி திரும்பவும் செய்திதாளின் செய்திகளில் படிந்தது. அடிக்கடி நடக்கும் செயலாய் இது.


அவனுடைய வாழ்வில் நடந்து முடியவேண்டிய செயல்களின் காலம் இன்னும் ஆறு மாதங்களே இருக்க அதற்கான முன் திட்டவரைவு ஏதும் இல்லாது  நாட்கள் நெருங்கவும் பொருள் வரும்வழி தெரியாததால் ஏற்பட்ட நெருக்கடியும் அவனுடைய  மனதை  எரிமலை யாய் எண்ணங்களின் குழப்பத்தில் இருந்தான்.

மனதின் வெளிப்படாய் முகம் கடுமை கூட்டியிருக்க  வார்த்தைகளில் கோபம் தென்பட்டது.

சமாதானங்கள் தெரிவித்து பேசினாலும் அவனுடைய  குமுறல் அவனுக்கு சரியானதாகவேப்பட  அவனுள் ஏற்பட்ட எண்ணசலத்தினால் அவன்   அவ்வப்பொழுது தன்னிலை மறப்பவனாக உள்ளான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails