Monday, May 09, 2011

போதும் பொண்ணு



பணம் தான் வாழ்வு  என்ற சூழலில்இயற்கையை  நாம் எவ்வளவு மோசமாக கையாள்கிறோம் என்பதை நாலு வரிகளில்  அழகாக எடுதுரைத்தது  பிடித்தது.

"தாமிரபரணி'யின் நல்லகண்ணு பாராட்டு விழா அழைப்பிதழில்………

 "இயற்கையை மாற்றினால்' என்றொரு கவிதை இருந்தது.

அது மனதைத் தொட்டது; மனசாட்சியைச் சுட்டது.


கடைசி மரமும் வெட்டி உண்டு

கடைசி நதியும் விஷம் ஏறிக்

கடைசி மீனும் பிடிபட

அப்போதுதான் உறைக்கும்

பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!

(நன்றி  தினமணி)

நகை  கடையில் ஒரு பெண்ணை   பார்த்து முகவரிக்காக பெயர்கேட்டார்கள்.

அந்த பெண்..போதும் பொண்ணு என்றது.

கடைக்காரர்க்கு ஆச்சரியம் திரும்பவும் கேட்டார்.

அட..ஆமாங்க  எம் பேரு போதும் பொண்ணு தான் என்று சொ ல்ல…

திரும்பவும் அவரே விளக்கம் தரும் பாணியில் எங்க  வீட்டுல  நான் நாலாவது பொண்ணுங்க இதோட பெண்பிள்ளை  போதும்  என்பதற்காக   எம்பேர போதும் பொண்ணு  வைச்சாங்க…

அதற்கு பிறகு பொறந்த புள்ள ஆம்பள   புள்ளங்க…
என்றார்.

கேட்க ஆச்சரியமாய் இருந்தது. எல்லாம் நம்பிக்கை  தான்.



6 comments:

தமிழ் உதயம் said...

போதும் பொண்ணு.

நானும் கேள்விப்பட்ட தகவல்.

ஹேமா said...

கவிதை வரிகள் மனச்சாட்சிக்கு ஒரு அடி !

போதும் பையன்ன்னு அப்புறம் வச்சிருப்பாரோ !

எண்ணங்கள் 13189034291840215795 said...

பாவம் தானே போதும் பொண்ணு.?

இப்ப பாருங்க பொண்ணுங்க கம்மியாம் நம் நாட்டில்.. அனுபவிப்போம்,..

http://thavaru.blogspot.com/ said...

நான் இப்பதான் கேள்விபடுகிறேன் தமிழ் நன்றிங்க..

http://thavaru.blogspot.com/ said...

அது என்னன்னு தெரியலையே ஹேமா..நன்றிங்க...

http://thavaru.blogspot.com/ said...

நீங்க சொல்றது உண்மைதான் பயணமும் எண்ணங்களும் நன்றிங்க...

LinkWithin

Related Posts with Thumbnails