Monday, June 06, 2011

பழசு


சிங்கத்தினுடைய   மாட்டு வண்டி வருகிறதென்றால் மற்ற  மாட்டுவண்டி ஓட்டிகளுக்கு பயம். ஒதுங்கி வழி கொடுத்துவிடுவார்கள். 

பூரணி காளைகள் பூட்டிய வைக்கோல் வண்டிதான் அ வனுடைய ஆயுதம் .  மற்றவர்கள் வைக்கோல் வண்டியை பள்ளம் பார்த்து இறக்கிவிடுவதில் இந்த சிங்கம் என்கிற சின்னைய்யன் மிகசாமர்த்தன்.

எதிர்ப்பவர்களை   உண்டு இல்லை என்று சொல்லக்கூடிய உடல்வாகு  வைக்கோல் வண்டியை  அவ னது காளையை ஓட்டும் அழகே..அய்யோ..இன்னும் கண்ணில் நிற்கிறது என்று அவனுடைய சமகாலத்து பெரியவர்பெருமூச்செறிந்தார்.

இன்றைக்கெல்லாம் அதுமாதிரியான மனுசங்க கெடையாது. வேளைக்கு பெரிய பித்தள  சட்டியில் ஒருபடி அரிசி  வடிச்சசாதம் சாப்பிடுவார்கள்.  கறி எடுத்த ஒரு சப்பை தான்  எவ்வளோ மீனு…எப்பாடி….அவங்க பாத்த வேலையும் அந்தமாதிரி…

கடைசில பயலுக்கு குஷ்டரோகம் வந்திருச்சி…எத்தன  பேரு வயித்தெரிச்சலோ…  ஆமா  இவன் போற வழி ல  எத்தன வைக்கோல் வண்டி போனாலும்  அத்தனையும் குடசாச்சு விட்டுறுவான்.
பொண்டாட்டி வேறு ஆம்படையான் பாத்தாள்…இவனுக்கு தெரிஞ்சு போச்சு வெண்ணாத்துல கொண்டுவந்து ஆள  காலிப்பண்ணி தூக்கிபோட்டுட்டு போயிட்டான்.

நாடு சுதந்திதரத்துக்கு முன்  பிறந்த தற்பொழுது வாழும் பெரியவர் ஒருவரின் கதையாடல் தான் மேற்சொன்னது.

பொம்பள பொறுக்கிய இருந்திருப்பாரு அதனால  குஷ்டரோகம் வந்திருக்கும் என்று கேட்க…

என்னன்னு தெரியல….
கும்பகோணத்துல அப்ப நிறைய தேவடியா வீடுகள் உண்டு பிரியப்பட்டவங்க தெரியாம  போயிட்டு வந்துருவானுங்க…
இன்னொருத்தன் பொண்டாட்டிய  பாக்கறதெல்லாம் அப்பரொம்பகம்மி…சமுதாயத்துல அசிங்கம் சொல்லிட்டு  அத செய்யவே மாட்டானுங்க…

என் கம்மாணாட்டி வீட்டுல இருக்கற பொஞ்சாதி பாக்கமுல்லயாம் …இவருக்கு இன்னொரு வீடாம்.. என்று திட்டுவார்களாம்.

அப்போ எல்லா பொருளும் வெல ரொம்பவும் கம்மி..சுதந்திரம் அடைஞ்சுது ரெண்ட அனா வித்த ஆட்டுகறி இன்னிக்கு கிலோ இருநூற்றி அம்பது ம்ம்ம்….என்ன செய்ய….



2 comments:

ஹேமா said...

எனக்கென்னமோ கொஞ்சம்தான் விளங்கிச்சு.ஆனா நல்லா தெரியுது...இறைச்சி விலை கூடிப்போச்சுன்னு சரியான கோவம் மட்டும் இருக்கு !

http://thavaru.blogspot.com/ said...

எனக்கும் கொஞ்சம்தான் புரிஞ்சுதுங்க ஹேமா...

LinkWithin

Related Posts with Thumbnails