Wednesday, June 08, 2011

நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்



நடப்பதும் தானாய் நடக்கும்  என்ற தத்துவார்த்தமனது தைரியம் சொல்ல இயல்பு மனதோ  எப்படி நடக்கும் ?  என்ற கேள்வியை தூக்கி போட  எண்ணகுழப்பம் தான்.

நடக்கும் வழி இருந்தால் அல்லது அதை நடத்தும் சக்தி இருந்தால் இயல்பு மனதிற்கு பதில் சொல்லி அதன் வாயை அடைத்துவிடலாம்.

நடக்ககூடிய சாத்தியங்கள் தெரியாமல் இருக்கும் வரை மனதின் இருதலைபட்சமான எண்ணங்களின் அல்லாடல்கள் தொடர்ந்து கொண்டே  இருக்கின்றன.  விளைவாய் செயல்குழப்பங்கள் நம்முடைய நிகழ்வுகளில் தெரியும்.

தத்துவார்த்தமான மனதின் போக்கு அதனுடைய போக்கில்வாதங்களை தோற்றுவித்தே கொண்டிருக்க  இயல்பு மனமோ   இன்றைக்கு என்ன என்பதை எடுத்துரைக்கஎண்ணகுழப்பம் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமல் போய்விடும்.

நிச்சயமற்ற எதிர்காலத்தினை  நினைத்து அதற்கு தேவையான பாதுகாப்பு வழிகளைதேட  அதற்குண்டான வழிகள் இல்லையென்றால் எல்லாம் தலையெழுத்து என்ற ஒற்றைச்சொல்லோடு விரக்தியான மனப்போக்கில் இன்றையவாழ்வு.

மேற்சொன்ன அத்துனை விளை வுகளையும் மாறத்துடிக்கும் மனதுக்கு நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்  கொண்டுவரும்.

பொருள் வரும்வழி சரியில்லை யென்றால் எந்தவொ ரு தனிமனித  சமுதாயவாழ்க்கை என்பது மிகதுன்பத்திற்கு உட்பட்டதே….



4 comments:

தமிழ் உதயம் said...

தங்களின் சில கருத்துகள் நிஜங்களின் வெளிப்பாடு.

http://thavaru.blogspot.com/ said...

அப்படியாங்க தமிழ் நன்றிங்க...

ஹேமா said...

உண்மைதான் பொருளாதாரமும் எம்மைச் சில இடங்களில் தடுக்கி விழ வைக்கிறது.ஆனாலும் விழுந்தே கிடக்காமல் எழுவது நாம்தானே !

http://thavaru.blogspot.com/ said...

கட்டாயம் நாம்தான் எழவேண்டும் ஹேமா...

LinkWithin

Related Posts with Thumbnails