Thursday, June 16, 2011

கோபத்துக்கு கோபம்


கோபத்துக்கு கோபம் என்றால் என்னதான் செய்வது? யாரோ ஒருவர் விட்டுகொடுப்பதில் சச்சரவுகளை  கடந்துவிடும் நிலைமை.


பலம் உள்ளவர்கள் பலவீனமானவர்களின் பலவீனம் அறிந்து விட்டுகொடுத்தல் பெருதன்மை.

பலவீனமானவர்கள் பலம் உள்ளவர்களுக்கு கீழ்படிதல் சச்சரவுகளில் இருந்து காப்பாற்றும்.   தன்னால் ஏற்றுகொள்ளமுடியாத நேரத்தில் அந்த  செயலையோ    ல்லது அ  ந்த இடத்தையோ தவிர்த்தல் நலம். நமக்கான காலங்களின் திசைகள் திரும்பவும்  வரையில் அல்லது நாம் பலம் பெறும் வரையில் காத்திருத்தல் மிகஅவசியம். அதுவரையில் நிறைய  கசப்புகளை   நாம் சந்திக்கவேண்டிவரும்.

பலம் உள்ளவர்களின் விட்டுகொடுத்தலையே பலவீனமாக பயன்படுத்த தொடங்கினால்   எப்பொழுதாவது கோபம் கொண்டே தீர வேண்டும் என்கிற   கட்டாயத்துக்கு ஆ ளாக நேரும்.

எடுத்துகாட்டாக தன்பிள்ளைகளின் தவறுகளை  பொறுத்து கொண்டேவரும் பெற்றோ ர்கள் என்றைக்காவது ஒரு நாள் கோபம் கொள்வது.

அதுவும் தவிர்க்க முடியா  உறவுகளில் கோபம் கொள்ளாமல்இருக்கமுடியாது.

ஏன்? எதற்கு? என்றுஇரு வினாக்களை உள்நோக்கி திருப்பினாலே  கோபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து களைந்துவிடலாம்.

எனக்கு என்னவோ அடிப்படை புரிதல்கள் இல்லாத மனங்களில் தான் கோபம் அடிக்கடி வரும் போல….


7 comments:

தமிழ் உதயம் said...

எனக்கு என்னவோ அடிப்படை புரிதல்கள் இல்லாத மனங்களில் தான் கோபம் அடிக்கடி வரும் போல…. ///

மிக உண்மை சார்.

ஹேமா said...

என்னதான் தத்துவங்கள் பேசி உணர்ந்துகொண்டாலும் கோபம் வந்த நேரத்தில் எல்லாம் போச்சு !

கோபம் வரக் காரணம் கனக்க இருக்கே.இப்போ எங்கள் குடும்பத்தில் ஒரு பிரச்சனையால் நல்ல கோபமாகவே நான் இருக்கிறேன்.

ஏதோ கோபத்தில் அல்லது தன் நெருங்கிய உறவு தன்னை விட்டு விலகும் ஆதங்கத்தில் சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டார் ஒருவர்.இப்போ அது பெரும் பிரச்சனையாகி சில உறவுகள் விலகுமளவிற்கு வந்தாகிவிட்டது.ஆனால் இன்னும் அப்படி தான் சொல்லவில்லை யென்று இல்லாத சத்தியம் எல்லாம் செய்கிறார்.ஆனால் அவர் உள்மனதிற்குத் தெரிகிறது உண்மை.சொன்னால் இன்னும் பிரச்சனை கூடுமென்று பயப்படுகிறார்.அப்போ காதால் கேட்ட அத்தனை பேரும் மடையர்கள் பொய்யர்கள்.

கோபம் வருமா வராதா ?இந்தக் கோபத்திற்கு எனக்குத் தெரிந்த வழி அவரை விட்டு ஒதுங்கிக் கொள்வதுதான் !

எண்ணங்கள் 13189034291840215795 said...

பலம் உள்ளவர்களின் விட்டுகொடுத்தலையே பலவீனமாக பயன்படுத்த தொடங்கினால் எப்பொழுதாவது கோபம் கொண்டே தீர வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஆ ளாக நேரும்.//

இதுதான் எனக்கு அடிக்கடி நேர்வது.. சரி போகுது னு விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பதில் இளக்காரமாய் ஆகிவிடுவதும்.. பின் தொடர்ந்து எரிச்சலூட்டுவதும்..

கோபத்தை சில நேரம் அடக்கி வைப்பதும் ஆபத்தே.. தகுந்த நேரத்தில் தெளிவோடு பதட்டமடையாமல் வார்த்தைகளை கொட்டிவிடாமல் கோபப்படவும் பழகிடத்தான் வேண்டும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சமூக கோபமே மாற்றத்துக்கும் வழி..

http://thavaru.blogspot.com/ said...

நான் மற்றவர்களால் பாதிக்கப்படுவது அடிப்படை புரிதல் இல்லாததனால் தமிழ்...

http://thavaru.blogspot.com/ said...

நிறைய ஒதுங்கியுமே சில நேரங்களில் ரொம்ப சங்கடங்கள் ஆயிருது ஹேமா கோபத்தினால்...

http://thavaru.blogspot.com/ said...

நிறைய விசயங்களில் என்னை இதுபோல் இளக்கரமாய் ஆக்கிவிட்டார்கள் பயணமும் எண்ணங்களும்...

LinkWithin

Related Posts with Thumbnails