Friday, June 17, 2011

காற்று



திரை சீலை
ஒதுக்கிவிட்டு
நுழையும்காற்றினால்
நிரம்பும் அறை
மூச்சு விடுகிறது
கருப்பையிலிருந்து
வெளிவந்தஉயிர்ப்பின்
முதல் சுவாசத்தினால்
துவங்கும்வாழ்வு
துளைகளின் வழியே
புகுந்து செல்லும்
காற்றின்வெளிபாடு
நாதமாய்
அடிக்கும் திசையில்
படும் பொருளில்
காற்றின் வெளிப்பாடு
தென்றலாய் ஆக்கமும்
புயலாய் அழிவும்
காற்று உள்நுழைகிறது
சுவாசிக்கிறேன்
”நான்”
உருவகம் பெறுகிறேன்.

2 comments:

ஹேமா said...

கவிதை...ஒவ்வொரு வரியிலும் நின்று ரசிக்கிறேன்.ஆயிரம் அர்த்தங்கள் காற்றாய் தென்றலாய்.கரு நுழைந்த கருவிலும்கூட மூச்சாய் !

தவறு said...

ஹேமா ..நின்னிங்களா..அப்ப என் எழுத்து சீர்பெறுதுன்னு சொல்லுங்க ...

LinkWithin

Related Posts with Thumbnails