Monday, June 20, 2011

மரணம்


மரணங்கள் எவ்வளவு விரைவாய் சம்பவித்து விடுகிறது.
இறக்கும் முதல் நாள் வரை   தன் பிள்ளைகளை  பள்ளிக்கு அனுப்பி பிள்ளைகள் சென்று மறையும் வரை வாசலில் நின்று தன்னை  வீட்டிற்குள் மறைத்து கொள்வது. மறுநாள் இறக்கபோகிறோம் என்பது தெரியுமா???

நம்முடைய உள்உணர்வுகள் நமக்கு காட்டும்  என்பது ஒரு சிலரின் கருத்து. நாம் நம்மை   உள்நோக்கினால் நம்முடைய எதிர்காலத்தை  கோடிட்டு காட்டும் என்பது அவர்களின் வாதமாய் உள்ளது.

நம்பிக்கையுடன் வாழ பல  காரணங்கள் இருந்தாலும் மரணம் நிகழ ஏதோ  ஒன்று வலுவான காரணமாய் அமைந்துவிடுகிறது.தன் எதிர்பார்ப்பு நிறைவேறா சூழலில்  தற்கொலையும் பிறர் எதிர்பார்ப்புகள் நிறைவேறா சூழலில் கொலையும் நிகழ்ந்துவிடுகிறது.

ஓடுகின்ற உடல் இயந்திர உறுப்புகள் ஓய்வெடுத்து கொள்ள அல்லது பழுது பட்டு  போதலில் தான் இயற்கை மரணம் நிகழும் போல் உள்ளது.

எதிர்பாராத திடீர் விபத்து அல்லது நோயினால் ஏற்படும் இறப்பு துர்மரணமாய் வாழ்வின் போக்கை மாற்றிவிடும் .

குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியத்தில் இருக்கும் நபரது மரணம்  பெரிய அளவிலான தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

பெரிய அள வு சோகத்தை உண்டுபண்ணுவது இளம்வயதினர் மரண ம் தான்.

இன்னொருவரை சார்ந்து வாழ்வு வரும்போது இருந்து கஷ் டப் படுத்துவதை விட போய் சேர்ந்தால் நலம் என்று நினைப்பவர்களும் உண்டு.

மரணம் நம்முடைய எதிர்பார்த்தலில் நிகழுமா?  எதிர்பார்க்காத மரணங்கள் அதிகம் …எதிர்பார்த்த மரணங்களும் உண்டு.

6 comments:

சமுத்ரா said...

unmai dhaan..

தமிழ் உதயம் said...

உண்மை. ////

குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியத்தில் இருக்கும் நபரது மரணம் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. ////

ஈடுசெய்ய முடியாத இழப்பாக

ஹேமா said...

மரணம் என்பதே பேரிழப்பு.அதுவும் சார்ந்திருக்கும் ஒருவருடைய இழப்பு கல்வி முதல் தொடரும் எத்தனையோ இழப்புக்களின் அஸ்திவாரம் !

ஆனால் இப்போதெல்லாம் மரணம் என் மனதைப்பொறுத்தமட்டில் மரத்துப்போய்விட்டது !

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க சமுத்ரா...

http://thavaru.blogspot.com/ said...

சார்ந்திருப்பவர்களின் இழப்பு தாங்க பெரிய இழப்பு தமிழ்...

http://thavaru.blogspot.com/ said...

மரணங்கள் மரத்தது உண்மை தான் ஹேமா....

LinkWithin

Related Posts with Thumbnails