Saturday, June 25, 2011

ஜென்னும் கபீரும் உங்கள் புரிதலுக்கு...



பாசிபடர்ந்த பாறைப்பிளவினூடே
தன்னுடைய வழியைத் தேர்ந்துகொள்ளும்
சிற்றோடைபோல்
அமைதியாகத் தெளிகிறேன்; துல்லியமாகிறேன்.
                                                      
                                                           (ஜென் கவிஞர்)


என் இறைவன்
என்னவிதமானவரென்று தெரியவில்லை.

அவரிடம்
உரக்கக் கத்தி வேண்டுகிறார் முல்லா?

சிறுபூச்சி நகரும்போது
அதன்மெல்லிய கணுக்கால் ஓசையைக்கூட
அவரால் கேட்கமுடியுமே..

உனது ஜபமாலையை உருட்டி
மந்திரத்தை உச்சாடனம் செய்
உனது இறைவனின் சின்னத்தை
நெற்றியில் தரித்துக்கொள்
சடைமுடியை
நீட்டிவளர்த்துக்கொள்

எனினும்
உன் இதயத்துக்குள்ளிருக்கிறது கொடூர ஆயுதம்
உனக்குள்
எப்படியிருப்பார் இறைவன்?

                                                                     ( கபீர்)

4 comments:

ஹேமா said...

மனம் தூய்மையாய் இருந்தால் நமக்கு நாமே கடவுள்தானே !

Bibiliobibuli said...

"கபீர்" கேள்வியின் பதில் "ஜென்" கவிதையின் கடைசி இரண்டு வரிகளில்.

http://thavaru.blogspot.com/ said...

மன தூய்மை அவசியம் ஹேமா நம்மை நாம் அறிய...

http://thavaru.blogspot.com/ said...

ரதி நீங்க ..நீங்கதான்..

LinkWithin

Related Posts with Thumbnails