Tuesday, June 28, 2011

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்



தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊர்களில் பழைய  கோவில்களும் உண்டு.  தெருவுக்கு ஒரு கோவில்என புதிததாய் முளைத்த பலகோவில்கள் உண்டு.

கிராம அய்யர்கள்நகரங்களுக்கு  தேவையான வருமானம் கருதி இடம்பெயர்ந்து விடுவதால் கிராமங்களில் பெரிய கோவில்கள் தவிர அய்யர்கள் தட்டுபாட்டினால்சிறு கோவில் தெய்வங்கள்   வாரம்  ஒரு முறை குளிக்கும பூ வைத்து பொட்டு வைத்து கொள்ளும்.

அய்யர்கள் தட்டுபாட்டினால் ஒரு கிராம அய்யர் குறைந்தது சிறு சிறு பத்துகோவில்கள்  தன்கட்டபாட்டில் வைத்திருப்பார்கள். அங்கு அவர் வருகை தினசரி என்றெல்லாம் இருக்காது.

அப்படி அவர்  தினசரி வருகை புரிந்து கோவில் தெய்வத்தை குளிபாட்ட வேண்டுமென்றால்  மாதம் இவ்வளவு என்று சம்பளம் பேசிக்கொடுத்துகோவில்  விசேசநாட்களில் அவர் ஏற்பாடு செய்யும்சிறப்பு பூசைகள் யாகங்களுக்கு அந்தபகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்துநடத்தினால் அந்தகோவில் கோவிலாக இருக்கும் இல்லாவிடில்  இருண்ட கோவில் தான் அது.

இன்றைக்கு தமிழகத்தின் நிறையகிராமங்களில்  உள்ள சிறு சிறு கோவில்கள் அழிந்தும் புதிததாய் முளைத்து கொண்டும் தான் இருக்கின்றன.

அய்யர் ஒருவர் பிடித்து வைத்துள்ள பத்துகோவில்களில் அதுவும் ஒன்று. சிறிய சிவன் கோவில் அது. அர்ச்சனை செய்ய நிறையமக்கள்  கோவிலுக்கு வெளியே நின்றிருந்தார்கள். மாலை ஆறு மணியாகியும் கோவில் திறக்கப்படவில்லை.

கோவில் சாவி வைத்துள்ள பெரியவர் விரைந்து வந்தார்  இன்றைக்கு அய்யர் வரமாட்டார் என்று சொல்ல
விளக்கு மட்டும் போடவந்தவர்கள் விளக்கு ஏற்றிச்செல்ல அர்ச்சனை அந்தபெரியவரே செய்தார்.
கருவறைக்கு வெளியிலே நின்றுகொண்டே பூவை  கருவறையின் உள்ளே இருக்கும் தெய்வத்தின் மீது தூக்கி எறிந்தார்.
ஏற்கனவே காய்ந்த பூக்கள் சிதறிகிடந்தது. வெளியில் இருந்தவாறே தேங்காய் உடைத்து சூடம் காட்டினார்.
மந்திரங்கள் கிடையாதுஅர்ச்சனை முடிந்தது.

அய்யர் கட்டுபாட்டில் உள்ளகோவில்களில் வருமானம் அதிகம் உள்ள தெய்வங்களுக்கு சிறப்புகவனம் செலுத்தப்படும். வருமானம் வராத கோவில்களின் தெய்வங்களுக்கு அய்யர்களின் பராமுகம் நிரந்தரம்

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்.

3 comments:

ஹேமா said...

பாக்கிற இடமெல்லாம் கல்லு வச்சு சாமின்னா இதுதான் நிலைமை !

http://thavaru.blogspot.com/ said...

நிலைமை நீங்க சொல்றமாதிரி தான் இருக்கு ஹேமா..

Ramachandranwrites said...

பத்து கோவிலை பார்க்க வேண்டிய ஆள் வேறு என்ன செய்ய முடியும் ? கோவில் சொத்தான வயல்களின் வருமானம் கோவிலுக்கு வருவது இல்லை
அவர்களின் வாழ்கைக்கு என்ன செய்ய முடியும். சரி, எல்லா ஜாதி மக்களும் அர்ச்சகர்கள் ஆனாலும் , இது போன்ற வருமானம் குறைவாக உள்ள கோவிலுக்கு வருவார்களா ? எல்லோரும் வருமானம் வரும் வழியை மட்டுமே தான் பார்ப்பார்கள்

LinkWithin

Related Posts with Thumbnails