Tuesday, July 05, 2011

வாழ்க்கை ஓடி கொண்டுதான்...



மனதளவில் நொறுங்கி போயிருந்த அவன் மனதை  சரிசெய்யவது என்பது கடினமாகத்தான் இருந்தது. அவனுடைய   பார்வையில் அவன் உலகத்தில் அவன் ராஜாவாய் இருந்ததால்  முழுமையாக
தன்னுடைய வழி சரியென்று பொருந்திப்போனான்.

தன்னம்பிக்கை புத்தகங்களின் மேற்கோள்கள் நண்பர்களின் கவுன்சிலிங் என அவனுடைய  பிரச்சனைக்களுக்கு தீர்வு காண  ப்பட்டாலும் அவன் பிரச்சனை தீர்ந்துபோய் விடவில்லை.

கேட்கும் நேரங்களில் கவனமாய் கேட்பான் . செயல் படும் விதம் என்னவோ அவன் மனஇயல்பு படி தான் செய்துமுடிப்பான்.

வாழ்க்கை ஓடிகொண்டுதான் உள்ளது.

நீ இதை செய்தால் என்னுடைய சக்திக்கு தகுந்த மாதிரி நானும் அதை உனக்கு  செய்வேன்.

அவசியம் கருதி அவர்களிடம் சொல்லாமல்  ஒரு செயல் இவன் நிகழ்த்திவிட்டால் பதிலுக்கு பதில் செயல்களின் திட்டங்கள் போடப்படும். பதில் செயல்கள் செய்யும் காலங்கள் எதிர்நோக்கப்படும்.  பதிலுக்கு செய்து முடித்தால்  தான் நிம்மதி.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

எதிராளி அவர்களுக்கு செய்யவேண்டும் ஆனால் எதிராளிக்கு அவர்களைப்  பற்றி எந்தகவலையும் கிடையாது. தன்னுடைய முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாய்…

எதிராளி யின்  பயன் தரும் செயல் பாதிக்கப்பட்
டால் எத்தனைவருடம் பக்கதில் இருந்தும்  தூசி  தான் அவர்கள்.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

செயல்களுக்காய் முகம்  பூத்து கிடக்கும் செயல்கள் முடிந்தவுடன் ரயில் பயணத்து நட்புகளாய் உறவுகளும் நட்புகளும் …

வாழ்க்கை ஓடி கொண்டு தான் உள்ளது.

வாழ்வின் நகருதல்கள்  இதுபோல் பல்வேறு கரைகள் தொட்டே ஓடி  கொண்டு தான் உள்ளது.


13 comments:

தமிழ் உதயம் said...

சொல்லப்பட்டது வேதாந்தம் போல தோன்றினாலும் ஏற்று கொள்ள வேண்டிய கருத்தே.

Bibiliobibuli said...

சரிதான்! தமிழ் உதயம் சொல்வது போல் ஏதோ வேதாந்தம் தான், தவறு.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நேற்று நான் படித்த மேற்கோள் நியாபகம் வந்தது..

Helen Keller
"Many persons have a wrong idea of what constitutes true happiness. It is not attained through self-gratification but through fidelity to a worthy purpose."

எப்படியும் வாழ்க்கை ஓடும். பதிவில் சொல்வது போல..

ஆனால் அது மகிழ்ச்சியாக அமையுணுமென்றால் தன்னலமற்ற ஏதோ ஒரு சேவையே மகிழ்ச்சி தரும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

உங்க பதிவை ச்ப்ஸ்க்ரைப் செய்ய பொத்தான் அமைக்கலாமே.. உங்க பதிவு வந்தால் தெரியப்படுத்துங்கள்..

தவற விடுகிறேன்..:(

http://thavaru.blogspot.com/ said...

தமிழ் , ரதி எதார்த்தங்க இது. தினசரி வாழ்க்கையில் இதுபோன்ற பலவிதமான குணாம்சம் உடைய மனிதர்களை தொட்டு செல்லதான் வேண்டியிருக்கிறது.

http://thavaru.blogspot.com/ said...

தன்னலமற்ற சேவை என்று வந்தால் மகி்ழ்ச்சி பயணமும் எண்ணங்களும்.

ஹேமா said...

இதுதான் வாழ்க்கை.ஓட்டுகிறோமா இல்லை ஓடுவதன் பின்னால் ஓடுகிறோமா என்று நான் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு !

Ragavachari B said...
This comment has been removed by the author.
Ragavachari B said...

சந்தோசமோ அல்லது துக்கமோ எதுவுமே நிரந்தரமில்லை. நதியின் பாதையானது சில இடங்களில் சீராகவும், சில இடங்களில் மேடு பள்ளங்களாகவும் இருக்கும். ஆனாலும், நதி நிற்காமல் ஓடி கொண்டே இருக்கும். அது போல் வாழ்க்கையும் ஓடி கொண்டேதான் இருக்கும். நீங்கள் மிகச் சரியாக சொன்னீர்கள்.

http://thavaru.blogspot.com/ said...

ஓடுவதன் பின்னால் ஓடுகிறோம் என்பது என் எண்ணம் ஹேமா...

http://thavaru.blogspot.com/ said...

வாங்க ராகவன் எப்படி இருக்கீங்க...

Ragavachari B said...

நல்லா இருக்கேன் ராஜா, நீங்க எப்படி இருக்கீங்க?

ஜோதிஜி said...

ஆகா ஆச்சரியம். தவறு என்ற ராஜா ராகவனுடன் உரையாடியிருப்பது ஆச்சரியமே.

LinkWithin

Related Posts with Thumbnails