Friday, July 08, 2011

குலதெய்வமும் கணிதமேதையும்


கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறுப்பற்றி தெரிந்த நண்பரிடம் கேட்டேன். அவர் கேள்விபட்டதாக சொன்ன கதை இது.

அவர் கும்பகோணத்தில் வாழ்ந்தார். படுக்கும் போது சிலேட்டை வைத்துக்கொண்டே படுப்பாராம். திடீரென்று கண்விழித்து சிலேட்டில் கணிதத்தை போட்டு பார்ப்பாராம்.

எப்படி போடுகிறாய் என்று அவரிடம் கேட்டால் தன்னுடைய குலதெய்வத்தின் பெயரைச்சொல்லி அது  சொல்லிக்கொடுப்பதாக சொல்வாராம்.  

அவருக்கு காசநோய் பீடித்து 32 வயதில் இறந்து விட்டார்.

அவர் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் படித்தவர் என்றும் அவருடைய பேராசிரியர் பெயர் ஹா ர்டி எ ன்றும் குறிப்பிட்டார்.

ராமானுஜம் எண்  ஒன்று உள்ளது என்றும் குறிப்பிட்டார்.


அவரைப்பற்றிய வரலாறு எனக்கும் தெரியாது. கீழ்கண்ட சுட்டியில் சென்று நான் அறியும் வரையில்…

ஐரோப்பிய கணித அறிஞர்கள் சிலரின் வாழ்க்கையை விவரிக்க ஆரம்பித்த தொடர் இது. ஆனால் அதற்குள்ளாக இந்தியா உருவாக்கிய ஒரே மாபெரும் கணித மேதையைப் பற்றிச் சொல்லிவிட ஆசை. ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வசித்த ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கையை இன்றுவரை இந்தியர்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர்கள் அறிந்தாரில்லை.

ராமானுஜன் ஒரு கணித மேதை என்று நாமும் தபால் தலைகள் வெளியிட்டுச் சிறப்பித்துவிட்டோம். பாடப் புத்தகங்களில் ஒருவேளை அவரது பெயர் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் என்னதான் செய்தார், ஏன் அவருக்கு இத்தனை பேரும் புகழும் உலக அளவில் இருக்கிறது என்பதைக் கணிதம் அறிந்த பெரும்பாலானோர்கூடப் புரிந்துகொள்வதில்லை. இன்று இந்தியாவில் மிகச் சில கணித விற்பன்னர்கள் மட்டுமே ராமானுஜனின் பெருமையை முழுதாக உணர்ந்துள்ளனர்.

மேலும் அதிகமாகஅவரைப்பற்றி இச்சுட்டியில் காண்க…


அவர் வாழ்க்கை வரலாறுபற்றி இன்னோரு சுட்டியில் காண்க..


இரண்டு சுட்டிகளுக்கும் சிலவித்தியாசங்கள் உள்ளது.

மேலும் அவரைப்பற்றி...

3 comments:

ஹேமா said...

32 வயதில் இத்தனை அறிவாளியாக இருந்திருக்கிறார்.இன்னும் வாழ்ந்திருந்தால் மிகப்பெரிய அறிவாளியாகவும் கல்விக்குப் பெரும் உதவியாகவும் இருந்திருப்பார் !

கடவுளுக்கும் கணக்குப்போட ஆள் வேணுமாக்கும் !

http://thavaru.blogspot.com/ said...

பெரிய அறிவாளி ..பல பெரிய அறிவாளிங்கள உருவாக்கி விட்டுகிறார் ஹேமா அவரது திறமையினால்...

ராஜ நடராஜன் said...

படத்தைப் பார்த்தா ராமானுஜம்தான் ரகுமானாய் மறுபிறவி எடுத்து வந்து விட்டாரோ!

LinkWithin

Related Posts with Thumbnails