Wednesday, July 13, 2011

வற்ற தொடங்கிய குளம்


குளம் வற்றதொடங்கியது. பக்கத்தில்  உள்ளகிராமங்களில் மீன்பிடித்து முடித்தபிறகே கடைசியில் எங்கள் ஊ ர் கிராமத்தில் மீன்பிடிப்பார்கள்.

பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக ஆள் போட்டு கண்காணித்து மீன்களைப்பிடித்து விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.

அந்த பதினைந்து நாட்களும் சிறுவர் சிறுமியர்களுக்கு கொண்டாட்டம் தான்.   சேற்றில் புதையுண்டு கிடக்கும் மீன்களை  குளம் காவல் காப்பவரை ஏமாற்றி பிடித்து செல்வதில் அவர்களுக்குமிகப்பெரிய சந்தோசம் .




காவலாளி முதுமையடைந்து  கண்பார்வை மங்கியது இவருடைய பலவீனமாகவும் சிறுவர்களுடைய பலமாகவும் மாறி அன்றைக்கு அவர் அவர்கள் வீட்டுக்குரிய குழம்பிற்கு தேவையான  மீன்களை பிடித்து செல்வதில் தான்அவர்களுடைய வெற்றி .

காவலாளியும் பெண்களை  முன்னிலைப்படுத்தி தனக்கு தெரிந்த  அத்துனை  கெட்டவார்த்தைகளை திட்டியும் அதையெல்லாம் துச்சமென மதித்து அவர்களுடைய ஈடுப்பாடு மீன் பிடித்தலில் இருக்கும்.

காவலாளி யின் இளம் வயது மகன்கள் வந்து யாராவது ஒரு சிறுவனை  நையப்புடைக்கையில் மற்ற சிறுவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள்.

இது வருடந்தோறும் நடக்கும் ஒரு திருவிழா நிகழ்வு.

இரைக்காக வட்டமிடும் கழுகு

இதுத்தவிர குறிப்பிட்ட அளவு கழுகுகளும் கொக்குகளும் குளத்தை ஆக்ரமித்து கொள்ளும். பத்து தடவை முயற்சித்து  ஒரு மீனை தூக்கி செல்லும் சில கழுகுகள். மெதுவாய் நடந்தே சிறு சிறு மீன்களை தனக்கு விருந்தாக்கி கொள்ளும் கொக்குகள்.

எல்லா கழுகுகளும் மீனை தூக்குமா என்பதும் சந்தேகமே….


7 comments:

தமிழ் உதயம் said...

ஒரு கிராமத்து காட்சி... அழகிய நினைவுகளாக, அழகாக பகிரப்பட்டுள்ளது.

ஹேமா said...

இளைச்சவனுக்கு மேல ஏறிச் சவாரி செய்றது மனுச இயல்பாகித்தானே போச்சு.பாவம் புண்ணியம் எல்லாம் பொய் !

தவறு said...

நன்றிங்க தமிழ்...

தவறு said...

பாவம் கிடையாது புண்ணியம் கிடையாது
நாம மட்டும் பொழைக்கனும் என்கிற எண்ணம் தான் ஹேமா...

Unknown said...

ரஜினி இந்தியா எதிர்கொள்ளும் என்று adversities பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இங்கே அவர் வரவிருக்கும் ஆண்டில் அமல்படுத்துவது என்று நடவடிக்கைகள் சில உள்ளன.
http://bit.ly/n9GwsR

ராஜ நடராஜன் said...

எல்லா கழுகும் மீனைக்கொத்துகிறதோ என்னவோ மீனைக்கவ்வும் தருணத்தை நேஷனல் ஜியோகிரபியெல்லாம் பொறுமையா கொத்துவது மட்டும் உண்மை:)

ஹேமா!பாவம் மீனுக்கு கூட பரிதாபப்படுகிற மாதிரி தெரியுதே!

http://thavaru.blogspot.com/ said...

வாங்க ராஜநட...நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது எந்த ஒன்றையும் பெறுவதற்கு..

LinkWithin

Related Posts with Thumbnails