Monday, July 18, 2011

வெறிநாய் கடியும் மரணபயமும்


சென்னை வாசி அவர் புதுக்கோட்டை காரைக்குடி  சொந்தஊ ர்.சில நாட்கள்  சொந்த அலுவலின்  காரணமாக  தன் ஊ  ர் வந்து தங்கினார்.

ஒரு நாள் காலை  நடைப்பயில வீட்டை விட்டிறங்கி கொஞ்சதூரம் சென்றிருப்பார் பின்னால்  திடீரென்றுவந்து ஒரு நாய்  கெண்டைக்காலை கடித்துவிட்டு ஓடத் தொடங்கியது.

அவருக்கு தெரிந்த ஒருவர் அது வெறிநாய் உங்களையும் கடிச்சிடுச்சா…இப்பதான் அங்க ஒருத்தர கடிச்சிது.

போங்க..போங்க…சீக்கரம் போயி டாக்டர பாருங்க என்றார்.

அங்குள்ள லோக்கல் டாக்டரிடம் காண்பிக்க  அவரிடம் வெறிநாய் கடி என்றதுமே..

நீங்க போயி திருச்சியில காண்பித்து விடுங்கள் என்று சொல்லி அவரும் அனுப்பிவிட…

திருச்சி வந்துஊசி போட்டு கொண்டு சென்னை வந்து சேர்ந்துள்ளார்.

நண்பர் இணை    த்தின் வாயிலாக தேடி அதனுடைய தீவிரத்தை அறிந்தவுடன் பயப்பட ஆ ரம்பித்துவிட்டார்.

தன்னுடைய எதிர்காலம் தன்பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும கவலைப்பட்டு நண்பர் ஒருவரிடம் கொட்டி தீர்த்துவிட்டார்.

நான் என்ன பாவம் செய்தேன்?  எனக்கு ஏன் இவ்வாறு நடக்கிறது?

என்னுடைய பிள்ளை ஜாதகம் என்ன சொல்கிறது? நான் இல்லாட்டியும் எதிர்காலத்தில்அவன்  நன்றாக இருப்பானா ???

எனக்குஏதோ ஆகப்போகிறது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர் ஒருவரிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அவருடைய நண்பர் ஆறுதல் கூறியும் டேய்..வெப்சைட்ல ரொம்ப ரிஸ்கா  போட்டிருக்காண்டா..

என்ன செய்யுறுதுன்னே தெரியல என்று  சொல்ல..

அவருடைய பயத்தை  தீர்ப்பவர் யார்???

வெறிநாய் கடிப்பற்றி இச்சுட்டியில் காண்க…14 comments:

ப.ராகவாச்சாரி said...
This comment has been removed by the author.
ப.ராகவாச்சாரி said...

நீங்கள் கொடுத்த சுட்டியை படித்தேன், ராபீஸ் மிகவும் கொடுமையான வியாதியாக உள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நண்பரை பற்றி நினைக்கும் பொது மிகவும் வருத்தமாக உள்ளது. இனிமே அவரு சொந்த ஊருக்கு வரவே பயப்படுவாரு. மேல்தட்டு மக்கள் எந்த வேலையும் இல்லாது பொது நல சேவை என்று இது போல் தெருவில் சுற்றும் நாய்களுக்காக அவற்றை கொல்வதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருகின்றனர். ஆகையால், முன்பு போல் தெருவில் சுற்றும் நாய்களை நகராட்சி பிடிப்பதில்லை. ஆனால், எந்த மேல்தட்டு மக்களும் இது போல் நாய்க்கடிக்கு ஆளாவதில்லை. அவங்க தான் கார்ல போறங்களே, அப்புறம் எப்படி அவங்களுக்கு இந்த மரண பயம் தரும் ராபீஸ் பற்றி தெரியபோவுது ? "சாவுற காலம் தெரிஞ்சிபோச்சின்ன வாழ்ல்ற காலம் நரகம் ஆயிடும்" ரஜினி சொன்ன டயலாக் ஞாபகம் வருது.

சே.குமார் said...

பாதிக்கப்பட்ட அந்த நண்பரை பற்றி நினைக்கும் பொது மிகவும் வருத்தமாக உள்ளது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இந்த நாய்களுக்கு ஒரு விடிவு இல்லையா?..

எத்தனை குடும்பம் அநியாயமா பாதிக்கப்படுது..

இப்ப நவீன மருந்துகள் வந்ததாய் கேள்விப்பட்டேன்.. பயப்பட தேவையில்லைன்னு நினைக்கிறேன்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

என் அனுதாபங்கள் அந்த நபருக்கு..:(

ஹேமா said...

இணையத்தைப்பார்த்துப் பயந்துகொண்டிருக்காமல் முதலில் அதற்குண்டான வைத்தியரிடம் போகச்சொல்லுங்கள்.இதைவிட மிகத்தீவிரமான நோய்களுக்கெல்லாம் மருத்துவம் கிடக்கும்போது இதென்ன பெரிய விஷயம்.அவரை அமைதிப்படுத்தி தைரியம் சொல்லுங்கள்.அதுவே பெரிய பலம் !

தவறு said...

வாங்க ராகவன்...டயலாக் நல்லாதான் இருக்கு எதார்த்தம் கொடுமை தான...

தவறு said...

என்ன செய்ய குமார்...வருத்தம் தான்.

தவறு said...

பயப்பட தேவையில்லைதான் பயணமும்
எண்ணங்களும் படித்ததை நினைத்தே மிகவும் குழம்பிய நிலையில் அவர்.

தவறு said...

சிகிச்சை எடுத்தும் பயம் ...பயம் ..ஹேமா.

ஹேமா said...

பயந்தாங்கோழி...பயந்தா பயந்தா கனவிலயும் நாய் வந்து கடிக்கும்ன்னு சொல்லுங்க !

! # ஸ்பார்க் கார்த்தி # ! said...

இப்போது எப்படி இருக்கார் அந்த நண்பர், பத்திரமாக இருக்க சொல்லுங்கள்

தவறு said...

என்ன பண்றது ஹேமா...சில பேரு வளர்ந்தவிதம் அதாங்க...

தவறு said...

நன்றிங்க கார்த்திக்..இப்போது அவரு நல்ல இருக்கார்.

LinkWithin

Related Posts with Thumbnails