Friday, July 22, 2011

வித்தியாசமான மியாவ் - சுந்தர ராமசாமி




எனக்கு தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள்  அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
“ இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்…

என்ன சொல்லவர்றார் …?! சிந்திக்காத செம்மறியாட்டு கூட்டமுன்னு சொல்லவர்றாரா  சுந்தரராமசாமி.

7 comments:

ஹேமா said...

என்ன ஒரே...நாய் பூனையாக் கிடக்கு இங்க !

இறந்தவர்க்கு இரங்கற்பாக்கள்.எதையோ சொல்லிவைக்கத்தானே வேண்டியிருக்கிறது.
அதுவாத்தான் இருக்கும்
கவிதையின் உள் அர்த்தம் !

Bibiliobibuli said...

ஹேமா, எனக்கும் சுந்தர-ராமசாமியின் எண்ணம் அப்பப்போ தோன்றுவதுண்டு.

வாழும்போதே மனிதனை மனிதனாக மட்டுமே மதிக்க கற்றுக்கொண்டால் இந்து போன்ற "வித்தியாசமான மியாவ்" களுக்கு தேவையே இருக்காது.

http://thavaru.blogspot.com/ said...

ரதி சொன்னது தான் கரெக்டா இருக்குமோ ஹேமா...

http://thavaru.blogspot.com/ said...

ரதி நாம நமக்காக வாழ ஆரம்பித்தால் இதுப்போன்ற தேவையில்லாதவற்றை தவிர்த்து விடலாமா...!!

Bibiliobibuli said...

தவறு, நிச்சயம் நான் சொன்னதன் அர்த்தம் அதுவல்ல.

எல்லா ஜீவராசிகளும் தமக்காக மட்டுமே வாழ்வதென்பது இயற்கையின் விதி. அதிலிருந்து கொஞ்சம் உயர்ந்து அடுத்தவர்களுக்காக வாழும் போது தான் வாழ்க்கை இன்னும் அர்த்தப்படும். அடுத்தவர்கள் என்பது உங்கள் குடும்பமாக கூட இருக்கலாம். ரொம்ப ஆழமாவெல்லாம் யோசிச்சு புதிதாய் அர்த்தம் தேடாதீர்கள் :)

நான் அங்கே சொன்னது simple and basic courtesy for your fellow humanbeings!!

http://thavaru.blogspot.com/ said...

"நான் என் தனித்தன்மையை பேண விரும்பும் அதேநேரம் இந்த உலகத்துடனும் இயைந்துவாழவே ஆசைப்படுகிறேன். அங்கேயும் நான் உள்வாங்கப்படவேண்டும்." -இது யாருங்க சொன்னது...!!

ரதி என் தனித்தன்மையை பேணிணால் இது போன்ற அநாவசியங்களை தவிர்த்துவிடலாம் என்ற எண்ணத்திலேயே அப்படி நான் சொன்னேன்..:))

ஹேமா said...

கவிதையைவிட நீங்க இரண்டுபேரும் பூனைகளாய் மாறி சத்தம்போட்டுச் சொல்றது கவிதையைவிட நிறைய விஷயங்களைச் சொல்லுது !

LinkWithin

Related Posts with Thumbnails