Thursday, July 28, 2011

மாற்றம் வேண்டி....


இரண்டுநாள் குற்றாலம் போய் வர வாய்ப்பு கிடைத்தது.  வருடம் முழுவதும் ஒரே இடம்  . மாற்றம் வேண்டி மனது நினைக்கும் ,சூழல்கள் அமையாவிடில் இரண்டுநாட்கள்  அதே இடம் அதே மனிதர்கள்.

பொம்மை கடையில்...


மலையும் மலைச்சார்ந்த இடமும்


மனிதர்கள் இல்லா மலையும் மலைச்சார்ந்த இடமும் பார்க்கும் பொழுது எண்ணங்கள் அவ்வளவு இல்லாத மனதில் உட்கார்ந்த அமைதி.



பறத்தலில் ஓய்வு


மழையும் மழைசாரலுமாய் பயணம்.

கொட்டும் அருவி மழைமுகட்டில் தங்கியிருந்த மேகங்கள் மழையில் நனைந்த  மரங்களின் பசுமைஅழகாய் தான் இருந்தது.



கொட்டும் அருவியில் தலை நனைத்து உடலும் நனை கையில்சிலிர்த்த உடலும் மனமும், முண்டியடித்த கூட்டம் அருவிக்குள்  எனை தள்ள மூச்சு முட்டி எதிர்மனிதர்களை பலம் கொண்டு தள்ளி கொண்டே வெளியில் வந்துமூச்சை இயல்பாக்கியப்பொழுது எழுந்த நிம்மதி.

நடைமுறை வாழ்க்கைக்கு தினந்தோறும் கடமைகள் வருடம் முழுவதும் தேவை என்றாலும் வருடத்தில் சிலநாட்கள் அதையெல்லாம் தவிர்த்து செல்லும் மாற்றம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையாகவே ப்பட்டது.

10 comments:

தமிழ் உதயம் said...

அழகை வாரி இறைத்தன படங்கள், பயண அனுபவ பகிர்வு மகிழ்ச்சியை தந்தன.

ஹேமா said...

இயற்கை எழில் குளிர்ச்சியா அழகா இருக்கு.நீங்களும் இருட்டில ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க !

Bibiliobibuli said...

அழகோ அழகு!!! நீர்வீழ்ச்சி, மலை முகடு, பொம்மை மற்றும் மயில்களை சொன்னேன்...... :))

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க தமிழ்..

http://thavaru.blogspot.com/ said...

நக்கலு...ஹேமா...:))..நக்கலு...

http://thavaru.blogspot.com/ said...

ரதி...நான் அவன் இல்லை..:))

அம்பாளடியாள் said...

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வண்ணப் படங்கள் .அத்துடன் உங்கள் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்
மென்மேலும் சிறப்புறவே!........ நன்றி சகோ பகிர்வுக்கு

Ragavachari B said...

அருவி, மயில், மலை அருமையான படங்கள். நல்ல பதிவு. நானும் இந்த வாரம் குற்றாலம் போகலாம்னு இருக்கேன். எனக்கும் ஒரு மாற்றம் வேண்டி...

http://thavaru.blogspot.com/ said...

வாழ்த்துகள் அம்பாளடியாள்..

http://thavaru.blogspot.com/ said...

போயிட்டு வாங்க ராகவன்....மாற்றம் அவசியம்...

LinkWithin

Related Posts with Thumbnails