Saturday, August 06, 2011

காட்சியும் காட்சிபிழையும்


பெரிய ஆண்சிங்கம்ஒன்று வேட்டையாடியது. அதன் இலக்குக்கு  உள்ளான மிருகம் எதுவென்று தெரியவில்லை.
அதற்கு முன் இருந்த உருவத்தை அனுமானிக்கையில்  அது காட்டெருமையாக இருக்கலாம் போல் தோன்றியது.

எல்லாம் சில வினாடிகளில் தோன்றி மறைந்தது.

உருவ அமைப்புகள் தனிதனியாக சிதலமடைந்து வேறொரு விளங்காத அமைப்புக்குள் தன்னை  உட்படுத்தி கொண்டே இருந்தது.

இப்படிதான் சில உருவங்கள் சிலபொழுதுகளில் உருப்பெற்று கணப்பொழுதில் மறைந்துகாட்சிபிழையாகிவிடும்.


கருமை மேகங்களின் கூட்டம் அடர்வு மிகுந்த வெள்ளைமேகங்களின் கூட்டம்இம்மாதிரியான உருவங்கள்
அபூர்வமாக தோன்றி மறையும்.

பரந்து விரிந்தவெட்டவெளியின் தனிமையில் தலைக்கு மேல் உள்ளவானத்தை பார்க்கையில்நகரும் மேகங்களின் காட்சியும் காட்சிபிழைகளையும் உருவாகி கொண்டும் செல்லும் அழகே தனிதான்.

7 comments:

Thekkikattan|தெகா said...

வானம் எப்பொழுதுமே பல விசித்திரங்களை உள்ளடக்கியே. அன்னார்ந்து பார்ப்பவன் பாக்கியசாலி!

உங்க இந்த பதிவு கவிதை கவிதை... இந்தாங்க பிடிங்க ஒரு கவிதையை :)) இந்த மேகங்களையொட்டி...

வானப்பலகை

Thekkikattan|தெகா said...

சொல்ல விட்டுப்போனது-

புகைப்படம் அருமை. எங்க ஊரு ஊருணிக் கரை மாதிரியே இருக்கு. அதோஓஓ அடிவானம் பக்கமா டவராத் தெரியுதே அதெல்லாம் செல்ஃபோன் டவரா இல்ல பவர்லைனா ;)?

Bibiliobibuli said...

மேகக் கூட்டத்தின் சின்னச், சின்ன காட்சிப்பிழைகளை நானும் ரசிப்பதுண்டு.

ஹேமா said...

ரதி காட்சிப்பிழை சொன்னபிறகு என் கற்பனையிலும் காட்சிப்பிழையாய் ஒரு கவிதை.பாருங்களேன்...!

என் தளத்தில் இன்னும் பதியவில்லை !

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4587

http://thavaru.blogspot.com/ said...

தெகா வானத்தை அன்னாத்து பார்ப்பவன் உண்மையிலே பாக்கியசாலி தான்.

வானப்பலகை கவிதை படித்தேன் . நன்று காட்டுக்குள்ளதான் போறீங்கன்னா வானத்தையும் விடுவதாயில்லை போலும்...

அடிவானம் பக்கமா டவராத் தெரியுறுதெல்லாம் செல்போன் டவருங்க தெகா..

http://thavaru.blogspot.com/ said...

ரதிக்கு அந்தளவுக்கு நேரம் இருக்கா என்ன?...:))

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா கவிதையின் வார்த்தைகள் வழமைப்போலவே...

LinkWithin

Related Posts with Thumbnails