Monday, August 08, 2011

மயிலின் நாட்டியம்


காலை 7.30  மிதமான காலைவெயில்  மெல்லியதாய்  குளு குளு காற்று வீசி கொண்டிருந்தது.

ஐந்தரை அல்லது ஆறடி தோகையுள்ள ஆண்மயில்கள் இரண்டு விளையாடி கொண்டிருந்தது.

மயில்கள் என் அனுபவத்தில் திருச்சி விராலி மலைபக்கம் அ திகம் இருக்கும் என்றும் சொல்ல கேள்விபட்டுள்ளேன். தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். நேரடியாக தஞ்சை  சிவகங்கை பூங்காவில் தோகை இல்லாத மயில்களை பார்த்தது.

வானாந்திர அழிப்பினால் மயில்கள் தங்க இடம் இல்லாது
கும்பலாய்எங்கள் ஊர் பகுதிகளில் சகஜமாய் நடமாடுவதை பார்க்கமுடியும்.

மயில்கள் நாட்டியம் நான் நேரில் பார்த்தது இல்லை. இன்றைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய ஐந்தரைஅடி தோகையை விரித்து அதுஆடிய ஆட்டமும் அதன் தோகையில் இருந்த அதன் கலர்கண்கள் காலை வெயில்பட்டுஎதிரொலித்தஅதனுடைய ஜொலிப்பு....அய்யோ...என்ன தவம் செய்துவிட்டேன்  இதை கண்டு மகிழ என்றிருந்தது.

மெதுவாக தன்னுடைய தோகையை  விரிக்க விரிக்க என்னுடைய  கைகள் தனாக கைகூப்பி இயற்கையை வண  ங்கதான் தோன்றியது.

9 comments:

தமிழ் உதயம் said...

மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்ததுக்குரியது. அழகான மயில் படத்துடன் ஒரு நல்ல பதிவு.குரியது. அழகான மயில் படத்துடன் ஒரு நல்ல பதிவு.

ஹேமா said...

பெருமைதான் உங்களுக்கு.ஆண் மயிலுக்குத்தான் ஆடத்தெரியுமாம்.அழகுதான் !

Bibiliobibuli said...

//பெருமைதான் உங்களுக்கு.ஆண் மயிலுக்குத்தான் ஆடத்தெரியுமாம்.அழகுதான் //

:))))))))

Bibiliobibuli said...

ஹேமா, காலையில ஏழு முப்பதுக்கு இவுக மயில ரசிப்பினமாம். வீட்டுக்காரம்மா அடுப்படியில இட்டலிக்குண்டான், தோசைக்கல்லு எதோடையாவது மாரடிச்சுக்கொண்டு இருந்துருப்பாங்க. இதை அவங்கள கூப்பிட்டு காட்டியிருப்பாங்களா எண்டும் கேளுங்கோ ஹேமா :))

தவறு, just joking.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க தமிழ்..

http://thavaru.blogspot.com/ said...

பெருமை கெடையாதுங்க ஹேமா எல்லாம் கவரதான் இந்த ஆட்டமெல்லாம்...

http://thavaru.blogspot.com/ said...

ரதி...அவங்க தான் கோயிலுக்கு போறப்ப நாட்டியத்த அரைமணிநேரம் பாத்துட்டு வந்து மெய்சிலிர்த்து சொன்னாங்க..

எனக்கு ஆசை..இரண்டு நாளிக்கு அப்புறம் நேற்றுதான் பார்த்தேன்.உண்மையே மறக்கமுடியா நிகழ்வுதான்.

ஹேமா said...

ரதி...சரி சரி நம்பி வைப்பம்.அப்பத்தான் அடுத்த
ஆட்டப் படம் வரும் !

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்குப் பிடித்த பறவை மயில், ஆனால் இதுவரை அதன் ஆட்டம் நேரே பார்த்ததில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails