Wednesday, August 10, 2011

ஆசிரியர்கள தேர்வு எழுத சொல்லுங்க...


இன்று தினமணி செய்திதாளின் தலையங்கத்தில்எது சமச்சீர் கல்வி?  என்ற தலைப்பில் ஆசிரியர்களையுடைய தரத்தை   பரிசோதனை செய்ய  யோசனை  சொல்லி உள்ளார்கள்.



“பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்.”

செய்தியின் சுட்டி இங்கே…


இந்த அரசு செய்யவேண்டிய மிகமுக்கியமான   மிக அவசரமான காரியமும் கூட….

இதையெல்லாம் இந்த அரசுக்கு  எடுத்துரைப்பவர்கள் எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும்.

தமிழக ஆசிரியர்களில் நிறையபேருக்கு கற்பித்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் எந்தவிதத்திலும் தங்களை அப்டேட் செய்து கொள்வதே கிடையாது.

தமிழக  அரசு உடனடியாக அமுல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.

செய்வார்களா…..???!!!

2 comments:

Bibiliobibuli said...

தவறு, நானும் எத்தனையோ தடவை வந்து பார்த்துவிட்டேன். இந்த விடயம் குறித்து யாராவது தங்கள் கருத்தை பர்கிர்வார்கள் என்று. ம்ஹீம், ஒருவரையும் காணோம். சரி விடுங்க.

நான் எனக்கு ஓரளவுகுத்தெரிந்த கனேடிய கல்வி முறையில் ஆசிரியர்களும் அப்பப்போ (ஒவ்வொரு வருடமும் என்பதாய் ஞாபகம்) பரீட்சை எழுதி, சில அரசின் நியமங்களை அப்பப்போ தங்கள் தகமைகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

ஒருமுறை ஒரு ஆசிரியர் சொன்னார் இப்போவெல்லாம் தங்களை விட மாணவர்கள் புத்திசாலிகளாய் இருக்கிறார்கள். அதனால், தங்களை தாங்களே மிகத் தெளிவாக தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று.

இதை நான் இங்கே சொல்லத் தயங்கிய காரணம் வெளிநாட்டில் இருந்து கொண்டே ஏதாவது புலம்புகிறேன் என்கிற தேவையற்ற விமர்சனம் வேண்டாமே என்று தான் :))

http://thavaru.blogspot.com/ said...

எதிர்பார்த்து ஏமாந்தேன் ரதி....:))

இன்னும் இன்னும் நல்லா எழுதுனுமங்கோஃஃஃ

LinkWithin

Related Posts with Thumbnails