Tuesday, September 06, 2011

இவை மனித இ யல்பா


என்னுடைய  காலைப்பயணத்தில் முதியவர் ஒருவர் ஒட்டிக்கொண்டார். வண்டியில் ஏறியவுடன்  நான் அவன  சும்மாவிட போறதில்ல … என்றார்.

நான் புரியாமல் …யார சொல்லிறீங்க என்று கேட்க..

அதாங்க அந்த அங்காடிகாரப் பயல..

ஏன்..என்னாச்சு?

எனக்கு தந்துகொண்டிருந்த மண் னணெய் இவன் வந்தோடன்ன இல்லேன்னு சொல்லிபுட்டான் என்றார்.

என்ன காரணம் ? கேட்டால்  உங்க வீட்டுல ரெண்டு கேஸ் சிலிண்டர் அதனால உங்களுக்கு எண்ணெய் கெடையாதுகிறாங்க  என்றார்.

அவரு செய்யிற தப்புகளா நான்  காட்டிக்கொடுக்க போறேன் என்றார்.

உங்களுக்கு அவரு   ஆவாததால் அவர தப்பு சொல்லிறீயலோ  என்று கேட்க...

அட ஆமாங்க....எனக்கு ஆவ  லேன்னா நான் அப்படி தான் செய்வேன்.

என்ன மனிதர்கள் இவர்கள்.

தனக்கு காரியம் ஆகும்வரையில் அவர்களின் தப்பைஅனுமதிப்பது…தனக்கு காரியம் ஆகாதபோது அவர்களின் இருண்ட பக்கங்களைப்பார்த்து அவர்களை அடிப்பது.

இவை   மனித  இ  யல்பா அல்லது சமூகத்தில் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் நிகழ்வா தெரியவில்லை.

தான் வாழ எப்படியும் இருக்கலாம் என்பது சித்தாந்தமோ …

சுயத்தில் தான் வாழ்வு…ஆனால் இதுபோன்ற சுயத்திலும் வாழ்வு இருக்கதான் செய்கிறது.


1 comment:

ஹேமா said...

தவறு...எப்பிடி இருக்கீங்க சுகம்தானே !

சமூகம்,பெற்றவர்கள்,பிறந்தவர்கள் உட்பட இப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது சிலசமயங்களில்.உலகம் இப்படித்தான் என எம் வழியில் நல்லது செய்தபடி நகர்வது மட்டுமே நல்லது.கேட்கப்போனால் உதை விழும்.கவனம் !

LinkWithin

Related Posts with Thumbnails