Friday, December 09, 2011

சுயமே சொர்க்கமாகி



நீர் நிரம்பி உடைந்து போன  என் வயல்வரப்புகளை  சரிசெய்யவே   நேரம் சரியாய் போனது.

பெரியாறு  அணை   ப்பற்றி  அறியமுடிந்தது.  அதனைப்பற்றிய செய்திகளில் ஆர்வம் இல்லாமலசொந்த பிரச்சனைகளில்மூழ்கியே   வெளிவர வழிதேடுகையில் கழிந்தகாலங்கள்.

ஓர் ஆறுதல் நமக்காக பேசதானே நாம் நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் அவர்கள் பார்த்துகொள்வார்கள் இவ்விசயங்களை என்று சற்றே நிம்மதி அடைகையில்அவர் வாங்கிய சொத்துகளில்  தன்னை தற்காத்து வழிதேட நம் பிரச்சனை பின்னுக்கு போனது.

நம்மில் சிறந்தவர்கள் குரல் கொடுக்க இவர்கள் கண்விழிப்பது இயல்பாக போய்விட்டது.

வாழ்வே சுமையாகி ஆகிப்போனதால் வந்தவினை.

சுயமே சொர்க்கமாகிப் போக    நாம் என்பதே  தேடக்கூடிய   ஒன்றாகி விட கட்டுகள் அவிழ்த்த ஓர் தனி மனித சுதந்திரம் எப்பொழுது...????

5 comments:

ஹேமா said...

ஆதங்கமும் அரற்றலும்தான் எங்கள் பொழுதாகிறது.கேட்பதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை !

Bibiliobibuli said...

ம்ம்.. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் பிரதநிதித்துவமும், ஜனநாயகமும் சமவீத பங்கு கொள்ளும் போது என்று உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது சுலபம். ஆனால், அதை அடையும் வழிவகை தான் கல்லில் நார் உரிப்பது போன்றது.

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா கேட்டால் தீர்வு சொல்லவேண்டுமே அதனால் தான்..

http://thavaru.blogspot.com/ said...

சமவீத பங்கா அதெல்லாம் கானல் நீர் போல ரதி.

ஜோதிஜி said...

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

LinkWithin

Related Posts with Thumbnails