Thursday, April 28, 2011

வெப்பசலனமும் எண்ண சலனமும்.


வெப்பசலனத்தால் ஏற்பட்ட கோடைமழை இரண்டு மூன்று நாட்களாய் சில  மணிநேரங்கள் பெய்தாலும் தரை குளிர கொ ட்டி தீர்த்தது. கோ டை வெப்பம் கொ ஞ்சமாய் குறைந்திருந்தாலும்  நிறைய  விவசாயிகளின் லாப கண  க்கை பொய்யாக்கியது.

சித்திரை பட்டம் விதைத்த உளுந்து வகை தானியங்களில் முளை த்தலில் பெரும்சேதத்தை  விளை வித்தது எதிர்பாராது  எதிர்பார்க்காத நேரத்தில்  பெய்த கோடை மழை.

மாலை  நேரங்களில் வீசிய குளிர்ந்த காற்றில்  லேசான மனது.

அவன் குரல் வழக்கத்தை விட கடுமையாயிருந்தது.  படித்தான்   மனதின் போக்கு வேறு திசையில் பயணித்தப்படியே இருக்ககைகளில் செய்திதாள்வைத்திருக்க கண்கள் ஒரு திசையில் உற்றுநோக்கி திரும்பவும் செய்திதாளின் செய்திகளில் படிந்தது. அடிக்கடி நடக்கும் செயலாய் இது.


அவனுடைய வாழ்வில் நடந்து முடியவேண்டிய செயல்களின் காலம் இன்னும் ஆறு மாதங்களே இருக்க அதற்கான முன் திட்டவரைவு ஏதும் இல்லாது  நாட்கள் நெருங்கவும் பொருள் வரும்வழி தெரியாததால் ஏற்பட்ட நெருக்கடியும் அவனுடைய  மனதை  எரிமலை யாய் எண்ணங்களின் குழப்பத்தில் இருந்தான்.

மனதின் வெளிப்படாய் முகம் கடுமை கூட்டியிருக்க  வார்த்தைகளில் கோபம் தென்பட்டது.

சமாதானங்கள் தெரிவித்து பேசினாலும் அவனுடைய  குமுறல் அவனுக்கு சரியானதாகவேப்பட  அவனுள் ஏற்பட்ட எண்ணசலத்தினால் அவன்   அவ்வப்பொழுது தன்னிலை மறப்பவனாக உள்ளான்.

Wednesday, April 27, 2011

பிள்ளைகள் அல்ல



லட்சங்கள் கொட்டி
கட்டப்படும் வீடு
கௌ   ரவ அடையாளம்
சினிமா வீட்டில்
காட்டப்படும்
அலங்கார பொருட்கள்
வீட்டினுள்
வீட்டுகார அம்மா
சத்தம் போடுவாள்
குழந்தையை….
ஆயிரம் கொட்டி
வாங்கிய பொருள்
உடைத்து விடாதே..
பொருளிடம்பயந்து
நகரும் பிள்ளை
வீட்டினுள் இருந்த
பொருள்
மிரட்டியது பையனை
காசு  உலகத்தில்
பொருள்தான் வாழ்க்கையாக
பிள்ளை கள் அல்ல…

Monday, April 25, 2011

கேள்விக்கு எதிர்கேள்வி.


“ஈழத் தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்“ என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் ஒரு சம்பவம்....

1985 மே மாதத்தில் ஒருநாள் ..கருணாநிதியை சந்திக்க நெடுமாறனும் வீரமணியும் சென்றிருந்தார்களாம். வைகோவின் தூண்டுதலால் இந்தசந்திப்பு நடந்துள்ளது. வீரமணியுடன்“விடுதலை “   சம்பந்தமும் சென்றுள்ளார். இவர் கருணாநிதியின் இளமைக் காலத் தோழர்களுள் ஒருவர். “ ஈழப்போராளி இயக்கங்களுக்குள் சகோதரச் சண்டை நடப்பதால் இனி இந்தப் பிரச்சனையில் நான் தலையிடப்போவது  இல்லை!“ என்று அறிவித்து அமைதியாக இருந்த காலகட்டம் அது.

“ பிரபாகரன் என்னை மதிக்கவில்லை  மதியாதார் தலை வாயிலை மிதிப்பது தமிழ்ப்பண்பா? “ என்று கருணாநிதி கோபமாகக்  கேட்க....

“பாலஸ்தீன விடுதலை ப் போராட்டத்தை ஆதரித்து எழுதுகிறீர்கள்...பேசுகிறீர்கள். யாசர் அராஃபத் என்றைக்காவது உங்களை  மதித்துச் சந்தித்தாரா? கடிதமாவது எழுதி இருக்கிறாரா?“ என்று கேட்டாராம் “விடுதலை “ சம்பந்தம்.


நன்றி ஜீ.வி.

Saturday, April 23, 2011

மாறும் காலங்கள்



வாதங்களும்
பிரதிவாதங்களும்
நடத்தி முடிக்கபட்ட
செயல்களின்
நியாய
அநியாயங்கள்
நண்மை  தீமை
கருத்துகளின்
ஊடே பயண  ம்
செயல்முடித்தவர்கள்
இருபுறமும்
பாதிப்பு களுக்கு
உட்பட்டவர்களாய்
அல்லது
பாராட்டுகளுக்கு
உட்பட்டவர்களாய்
பின்னாளில்
பாதிக்கப்பட்டவர்கள்
பாராட்டு கள் பெற
பாராட்டப்பட்டவர்கள்
கண்டிக்கப்படுவதும்
உண்டு
மாறும் காலங்கள்
மாறும் சூழல்கள்
என 
மாறி கொண்டேயிருப்பதுதான்
மாற்றமோ...

Tuesday, April 19, 2011

குழிதோண்டல்களும் உயிர்பழிவாங்கல்களும்


கட்டங்களுக்குள் நகரும் வாழ்வு. பரந்து விரியும் யோ சிப்புகளுக்கு நடுவே  சில  எல்லைகளை   தாண்டமுடியாத வாழ்வு.

யாரும் எவரும் அவரவர்களின் மன விரிவாக்கத்திற்கு தகுந்த மாதிரி தான் யோ சிப்பும் வெளிப்பாடுகளும்எல்லாமும் வாழ்வில் நடந்தவை  சிலவாகவும் நடக்காதவை  பலவாகவும் இருப்பது உண்மை.


நம்குடும்பத்தில் நமக்கு சரியாக தெரியும் ஒன்றை   நடைமுறை படுத்திவிடலாம் என்று யோ சிக்கையில்  ஒரு குடும்ப நபரின்  முரண்பாடு மொ  த்தகாரியத்தையும் சிதைத்துவிடும்.

சமுதாயம் என்று வரும்போது  அதிகாரத்தில் உள்ளதனிமனித   விருப்புகளும் வெறுப்புகளும் முக்கிய பங்காற்றும் அது ஆதரவோ   அ ல்லது உயிர்பழிவாங்கலோ   எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்.

எத்தனை விதமான  பார்வை களை    அ வர்கள் தெரிந்து வைத்திருந்தாலும்  அ த்தனையும் சரியாய் சமுதாயத்திலும்கையாளப்படுகிறதா என்பது சந்தேகம் தான்.

கோடிகளை  அமுக்கும் அரசியல்வாதிகளாகட்டும் இனவதை  செய்யும் அதிபராகட்டும் அவனுடைய   முதல்தகுதி தனி மனிதன்  இதில்  தன்னுடைய   குழுமம் தான் பிரதானம்அதற்கு பிறகு தன்னை  சார்ந்தவர்கள் என்றே விரிவடைகிறது. மற்றவையெல்லாம் சாதாரணம் தான்.

இதன் அடிப்படையிலேயே  குழிதோண்டல்களும் உயிர்பழிவாங்கல்களும் சொத்து சேர்ப்புகளும் மற்றஎல்லாவிதமான  நல்ல கெட்ட செயல்களை  யும் வரலாறு பதிவு செய்கிறது. 

ஏதோ   நம்மால் இயன்றவரை நம்மளவில் நாம்.....

நமக்காக
நம்மை  சேர்ந்தவருக்காக முடிந்தால் செய்து முடித்து நம்மை  சேராதவருக்காகவும் நாம் விரிவடைய  வேண்டியது தான்.  


Tuesday, April 12, 2011

கிராமங்களில் மனிதர்கள்.


பொழுது சாயும் முன்னே வீட்டை  அடைந்துவிட வேண்டும் என்ற வேகம் தெரிந்தது அவனுடைய வண்டி ஓட்டுதலில்சமமான பாதை  யிலும் குண்டு குழியுமான  பாதையில் வண்டி பயணித்தது.

பெண்ணுடன் பயண  ம் என்பதால் சீரான வேகத்தில் தான் வண்டி சென்றது.  காலை யிலிருந்து  கல்யாண ம் ,  கோவில் என்று செல்ல இருட்டு முன்னே ஊ ர் திரும்பிவிடவேண்டும் என்ற அவசரம்.


கிராமங்களின் இடையே செல்லும் பாதை   அ வசர தேவை என்றால் நான்கு கிலோ மீட்டருக்கு  அ ப்பால் ஏதாவது கிடைக்கலாம்.
பெண்ணுடன் பேசியப்படியே  வண்டி ஊ ர் நோக்கி பயணித்தது.

புதிததாக  தார் சாலைப் போடுவதற்காக  கருங்கல் சாலை அமைந்திருந்த சாலை யில் வண்டி அ லை ந்தது.

என்னடா ..இது அலைகிறது என்று வண்டியை  நிப்பாட்டினான். வண்டி பின்சக்கரம் காற்று இறங்கி  தாரையோ டு ஒட்டியிருக்க …இங்கேயும் அ ல்லாது அங்கேயும் அ ல்லாது நடுவில் மாட்டிக்கொ ள்ள….

வ ண்டியை தள்ளினால் குத்தியிருக்கும் ஆ னியினால் டியூப் பயன்படுத்த முடியாமல் ஆகிவிடும்.  அப்படியே வண்டியை   நிப்பாட்டினான்.

அ வனும் பெ ண்ணும் இறங்கி நின்றார்கள். பெண்ணை    உற்றுபார்த்தார்கள் அவனை   உற்றுபார்த்தார்கள் தன்வழியே சென்றார்கள். 

மோ ட்டார் சைக்கிளில் வந்த நடுவய துகாரர்கள் தன்னுடைய வண்டியை  நிப்பாட்டி  ஏன்?  என்ன விசாரிக்க…

அவனுக்கு நிம்மதி வந்தது. வண்டி பஞ்சர்என்று சொல்ல..

இருங்க தம்பி ஒன்னும் கவல படாதீங்க இதோ  நான் பையன வர சொல்றேன் என்று அ ங்கிருந்தப்படியே  கைப்பேசியில் தொடர்பு கொ ண்டு  மெக்கானிக் பையனை  அழைத்தார்.

எப்பா…அவங்க லேடீஸ்  கூட நிக்கிறாங்க சீக்கிரம் வாப்பா என்று சொல்லி…

ஒட்டிட்டு பாத்து போங்கப்பா  என்று தன் வழியே சென்றார்.

சிறு நன்றியை  கூட  எதிர்பார்க்கவில்லை .

அவர் சொ ல்லிய பையன் விரைவாய் தன் செயல் முடித்துகொ டுக்க…. இவன் நிம்மதியடைந்தான்.

பத்துக்கு  ஆ றுபேர் பார்த்தப்படியே  செல்ல இருவர் கேட்டால் செய்யலாம் என்ற  ரீதியில் பார்க்க இருவர் மட்டுமே தனாய் உதவ முன்வந்தார்கள்.

பொழுது சாயும் முன்னே  அவன் ஊ ர்போய் சேர்ந்திருப்பான்.





சருகும் உடலும்….



மரமொ ன்றில்
உதிர்ந்த சருகு
காற்றடித்த திசையெல்லாம்
பறந்தது
எண்ண  ங்கள் இல்லாது
உண  ர்வுகள்சுவை 
இல்லாது
கால்கள்பயணித்த
திசையெங்கும்
பயண ம்
உறவில் ஒட்டிய
மரத்தின்
கடமைகள் முடித்து
தன் சாரம் இழந்து
நிறம்மாறி
காற்றின் போக்கில்
தொடர்பு அறுத்து
சுதந்திரமாய்
தன்போக்கில்
சருகும்
உடலும்….

Saturday, April 02, 2011

இன்றைக்கு...


அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரியின் பாதுகாவல் வாபஸ் பெறப்பட்டது  இன்றைய 
ஹா ட்.  

தேர்தலுக்கான  சுவடே தெரியவில்லை .   ஒரு ஆ ட்டோவில் தி. மு.க. வின் சாதனை களை ச் சொல்லி ஒதுக்கப்பட்ட கூட்டணி கட்சிக்கு வாக்குகள் கேட்டார்கள். 

வாழ்க தேர்தல் கமிசன்.  நிறைய நடைமுறை தொ ந்தரவுகளில் இருந்து பொதுமக்கள் விடுதலை  .

இன்று உலககோப்பை கிரிக்கெட் இறுதி ஆ ட்டம். சம உரிமை கொடுத்து பாதுகாக்க படவேண்டியவர்களாலேயே பந்தாடப்படும் தன் சக உயிர்ப்புகளுக்காக  வானம் வெளித்த பின்னும் ஹே  மா உலகக் கிண்ண க்கிரிக்கெட்2011….
என்ற தலைப்பில் கவிதை  இந்தியாவே வெல்லட்டும்  சிங்களர்கள் வெல்லவேண்டாம் என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

கோடை வெயில் தெருவழியே தினசரி ஐஸ்வண்டிகாரன் பிள்ளை களுக்கு தான் குதுக்கலம். அய்…பால் ஐஸ் …பால் ஐஸ்… வெயிலில் தின்றால் சளிப்பிடிக்கும் வேணாம் பாப்பா என்று அம்மாவின் குரலை  அலட்சியம் பிள்ளை கள் ஐஸ் விற்பவனை   ஓடி போய் கூப்பிடும்.

சில வீடுகளில் பிள்ளைகளுக்கு விழும் தர்ம அடிக்கு ஐஸ்காரன் தான் பொறுப்பு.

இன்னும் சில பெற்றோ ர்கள்  ஐஸ்காரனை  மிரட்டிவிடுவார்கள்.   தினமும் இந்த தெருவழியே வரக்கூடாது என்று தடைப்போடுவார்கள். 

முனகி கொண்டே நகரும் ஐஸ் வண்டிக்காரன்.    

இன்றைய  பொழுது இப்படியாய் இருந்தது.   

LinkWithin

Related Posts with Thumbnails