Wednesday, August 31, 2011

சுயம்







உள்ளிழுத்து கொள்கிறேன்

என்சுயம் ஒவ்வாத

நடக்கமுடியாசெயல்களில்

மௌனமாய் விலகுகிறேன்

நீ வாழ்

நானும் வாழ்கிறேன்

எதிர்ப்பதில் வாழ்வா..!?

என் சுயம்

உடைக்கப்படுகிறது

உணர்வுகள்சிதைக்க

எனது வாழ்வில்பூக்களா…

முடியாத நேரங்கள்

நாளை கிடைத்துவிடும்

நம்பிக்கையில்

பொறுக்கிறேன்

சுயம் அழிகிறது

நான்

என்குடும்பம்

என்பிள்ளை என்று

காலங்கள்

நீண்டு கொண்டே யிருக்கிறது

சக்கையாய் வாழ்வும்

நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.

இறந்துபோன காவலர்கள்


சமுதாயத்தில் தன்னைநிலைநிறுத்தபொருள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் எடுத்து கொண்ட வேடத்தில் நடித்தால்தான் தன் நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம். வேடத்தில்நடிக்கதன்னை தகுதி ஆக்கிகொள்ளாதவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

சிலவாரங்களுக்கு முன் உத்ரபிரதேசத்தில் காவலர்கள்  தலைமைகாவலர்களாக பதவி உயர்வு பெற  நடைப்பெற்ற உடல்தகுதி தேர்வில் ஓடும் போது மயங்கி விழுந்து ஐந்து காவலர்கள் பலி என்ற செய்தி


சுட்டி இங்கே…


சகமனிதன் இறந்ததற்காக வருத்தபடவேண்டிய விசயம் இது. ஆனால் இச்செய்தியைப்படித்தவுடன்  சிரிப்பு தான் வந்தது.

தான் எடுத்து கொண்ட வேடம் காவலர் என்றால் அதற்குரிய தகுதியில் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டியது தானே  காவலரின் கடமை. அதைவிடுத்து  வேலை யில் சேர்ந்துவிட்டோம் என்று இயந்திரதனமான வாழ்க்கை தான் இவர்களை இந்தஅவலத்துக்கு தள்ளிவிட்டிருக்கிறது.

இவர்களை  வழிநடத்தும் தலைமையும் இதற்கு ஒரு முக்கியகாரணம் அவர்களும் கண்டிக்கதக்கவர்களே…

என்மனதில்  சமீபத்தில் பாதித்த செய்தி இது.


Wednesday, August 10, 2011

ஆசிரியர்கள தேர்வு எழுத சொல்லுங்க...


இன்று தினமணி செய்திதாளின் தலையங்கத்தில்எது சமச்சீர் கல்வி?  என்ற தலைப்பில் ஆசிரியர்களையுடைய தரத்தை   பரிசோதனை செய்ய  யோசனை  சொல்லி உள்ளார்கள்.



“பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்.”

செய்தியின் சுட்டி இங்கே…


இந்த அரசு செய்யவேண்டிய மிகமுக்கியமான   மிக அவசரமான காரியமும் கூட….

இதையெல்லாம் இந்த அரசுக்கு  எடுத்துரைப்பவர்கள் எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும்.

தமிழக ஆசிரியர்களில் நிறையபேருக்கு கற்பித்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் எந்தவிதத்திலும் தங்களை அப்டேட் செய்து கொள்வதே கிடையாது.

தமிழக  அரசு உடனடியாக அமுல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.

செய்வார்களா…..???!!!

Monday, August 08, 2011

மயிலின் நாட்டியம்


காலை 7.30  மிதமான காலைவெயில்  மெல்லியதாய்  குளு குளு காற்று வீசி கொண்டிருந்தது.

ஐந்தரை அல்லது ஆறடி தோகையுள்ள ஆண்மயில்கள் இரண்டு விளையாடி கொண்டிருந்தது.

மயில்கள் என் அனுபவத்தில் திருச்சி விராலி மலைபக்கம் அ திகம் இருக்கும் என்றும் சொல்ல கேள்விபட்டுள்ளேன். தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். நேரடியாக தஞ்சை  சிவகங்கை பூங்காவில் தோகை இல்லாத மயில்களை பார்த்தது.

வானாந்திர அழிப்பினால் மயில்கள் தங்க இடம் இல்லாது
கும்பலாய்எங்கள் ஊர் பகுதிகளில் சகஜமாய் நடமாடுவதை பார்க்கமுடியும்.

மயில்கள் நாட்டியம் நான் நேரில் பார்த்தது இல்லை. இன்றைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய ஐந்தரைஅடி தோகையை விரித்து அதுஆடிய ஆட்டமும் அதன் தோகையில் இருந்த அதன் கலர்கண்கள் காலை வெயில்பட்டுஎதிரொலித்தஅதனுடைய ஜொலிப்பு....அய்யோ...என்ன தவம் செய்துவிட்டேன்  இதை கண்டு மகிழ என்றிருந்தது.

மெதுவாக தன்னுடைய தோகையை  விரிக்க விரிக்க என்னுடைய  கைகள் தனாக கைகூப்பி இயற்கையை வண  ங்கதான் தோன்றியது.

Saturday, August 06, 2011

காட்சியும் காட்சிபிழையும்


பெரிய ஆண்சிங்கம்ஒன்று வேட்டையாடியது. அதன் இலக்குக்கு  உள்ளான மிருகம் எதுவென்று தெரியவில்லை.
அதற்கு முன் இருந்த உருவத்தை அனுமானிக்கையில்  அது காட்டெருமையாக இருக்கலாம் போல் தோன்றியது.

எல்லாம் சில வினாடிகளில் தோன்றி மறைந்தது.

உருவ அமைப்புகள் தனிதனியாக சிதலமடைந்து வேறொரு விளங்காத அமைப்புக்குள் தன்னை  உட்படுத்தி கொண்டே இருந்தது.

இப்படிதான் சில உருவங்கள் சிலபொழுதுகளில் உருப்பெற்று கணப்பொழுதில் மறைந்துகாட்சிபிழையாகிவிடும்.


கருமை மேகங்களின் கூட்டம் அடர்வு மிகுந்த வெள்ளைமேகங்களின் கூட்டம்இம்மாதிரியான உருவங்கள்
அபூர்வமாக தோன்றி மறையும்.

பரந்து விரிந்தவெட்டவெளியின் தனிமையில் தலைக்கு மேல் உள்ளவானத்தை பார்க்கையில்நகரும் மேகங்களின் காட்சியும் காட்சிபிழைகளையும் உருவாகி கொண்டும் செல்லும் அழகே தனிதான்.

தடுக்க முடியவி்ல்லை



வருவதை தடுக்கத்தான்

முடியவில்லை

பலவீனத்தின் மீது

வரும் கோபம்

துடித்தெழும்

ஆவல்கள்

பிரச்சனையில்

உண்டாகும் எண்ண ங்கள்

இயற்கையாய்தோன்றும்

துன்பம்

உடைந்த ஒன்றில்

வெளிப்படும் ஆற்றல்

கரு மேகங்கள் குளிர

பெய்த மழை என.....

Monday, August 01, 2011

கண்டு தெளிய..

மேகங்கள் அற்ற

வானம்

குழம்பல்அற்று

ஓடும் சிறுஓடை

குழப்பம் தான்

இல்லை

கண்டு தெளிய…

மழிக்காத முகம்

அழக்கு ஆடை

தெருவோர பிச்சை

குழப்பம் தான்

இல்லை

கண்டு தெளிய..

தோய்த்தஆடை

விலைஉயர்ந்த

பொருட்கள்

மன கசங்கலாய்

தோய்த்த ஆடையின்

சுருக்கங்கள்

நிறையவே குழப்பம்

செய்ய..

யார் தான் யார்?

மகிழ்ச்சியும் நிறைவும்


வயலில் வேலை  செய்யும் தன்னுடைய தாயைப்பார்க்க வந்த பிள்ளைகள்  எனைப்பார்த்தவுடன் 

எங்க... எங்கள போட்டோ எடுங்கிறீங்களா.. என்று ஆவலாய் கேட்க...

சில மதிய ,மாலை வேலைகளில்குளப்பக்கம் உள்ள செடிக்கொடிகளில் பிடித்ததை கேமராவில் பதிவு செய்யும் பொழுது வேடிக்கைப்பார்க்கும் எங்கள் ஊர் பெரிய மனிதர்கள் இவர்கள்.

ஹாய்....


நாங்க தான் பெரிய மனுசங்க..


வெட்கம்


நானும் வர்றேன்


நானும் தான்..


இது எப்படி...



தன் முகத்தை கேமராவில் உள்ள திரையில் பார்த்தவுடன்அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிபசித்த நேரத்தில் கிடைத்த நல்லஉண  வினால் வயிறு நிறைந்தவுடன் ஏற்படும் திருப்தியைப் போல....

LinkWithin

Related Posts with Thumbnails