Monday, January 02, 2012

வருட தொடக்கமும் வாழ்வும்


இருள்விலகாத பனி  சில நூறுகாக்கைகளி்ன் பறத்தலில் தொடங்கிய காலை யை   ரசித்தப்படி தொடங்கிய புத்தாண்டு.

சபதங்கள் போட்டு குறிக்கோள்கள் வைத்து இலக்கை   அடைய
முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எங்காயாவது இறைவனை தரிசிக்கும் நடைமுறை என்னவோ சிலவருடங்களுக்கு முன்னால் தவிர்க்கப்படாத ஒன்று.



சிலவருடங்களாய் முக்கியம் பெறாதபுதுவருட தொடக்கம். நாளெல்லாம் திருநாளே சிந்தனையாய் கழியும் நாட்கள்.

குடும்ப நிர்வாகம் காசுக்கான அலைதலில் கரையும்வாழ்வில் செக்குமாட்டு சிந்தனை களை  தவிர்க்க முடியாத நேரங்களில்நொந்தவாழ்வாய்  எண்ணங்களின் பின்னடைவு.

தனி ஆளாய் இயற்கையை   ரசிக்கையில்நமக்கு மட்டும் ஏன் இப்படி ? வினாவினை தவிர்க்க முடியாத மனது.



நிறையவே அறிய ஆவலாய்.....

6 comments:

Ragavachari B said...

நாட்களில் நமக்கு இல்லாத நம்பிக்கை, ஆண்டில் இருக்கிறதா ? ஆம் என்றால், அதற்க்குத்தான் புத்தாண்டு கொண்டாடுகிறோமா?
ஆகட்டும், தினந்தோறும் நாம் வாழ்த்து சொல்லாவிடினும் வருடத்திருக்கு ஒருமுறை சொல்வோம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் எண்ணங்கள் செயல்களாய் மாற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.

Ragavachari B said...

எல்லாம் வல்ல இறையை(???)

Ragavachari B said...

கடவுள்(?) இருந்தா நல்லா இருக்கும்

ஹேமா said...

உங்களின் இயற்கையின் ரசிப்பும் அதை அணைத்துக்கொள்ளும் அன்புமே போதும்.ஒவ்வொரு கணமும் சந்தோஷமாய் அமையும் உங்களுக்கு.கடவுளோ புத்தாண்டோ தேவையில்லை !

ஜோதிஜி said...

எத்தனை அலங்கார வார்த்தைகளில் சொன்னாலும் நீங்க சொல்லியிருப்பது தான் எதார்த்தம்.

Bibiliobibuli said...

வருடங்கள் நாட்களாய் நகர்ந்தாலும் நாட்கள் நரகமாய் இல்லாதிருந்தால் போதாதா என்றும் ஆகிப்போகும் சில நாட்களில்.

வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஒட்டிக்கொண்டும், முரண்பட்டும் ஓடிக்கொண்டும் போது இயற்கையும், இயற்கையாய் சில நல்ல மனிதர்களும் எதிர்ப்படவே செய்கிறார்கள். பிறகு, கடவுள் குறித்த தேடல் தேவையில்லாமல் போகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails