Sunday, January 20, 2013

ஊ னம் ஓர் பொருட்டல்ல…


சரியான வழிகாட்டுதலில் ஊ னம் ஓ ரு பொ ருட்டல்ல வாழும் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துகொள்ளமுடியும் .

அவர்களின் எண்ணங்களை சரியானமுறையில் மாற்றியமைக்க கூடிய ஓர் நபர் இருந்தாலே ஊ னம்முற்றேருடைய வாழ்க்கை மாறத்தொடங்கிவிடும்.


அப்துல்கலாம் உரை வருமாறு: நாம் மின் விளக்கைப் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். விமானத்தைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், தொலைபேசியைப் பார்த்தால் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் எப்போதோ வாழ்ந்து மறைந்தாலும் இப்போதும் அவர்களை நம் நினைவில் வைத்துப் போற்றுகிறோம். அவர்கள் அவ்வாறு போற்றப்பட அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த தனித்துவத் திறமைதான் காரணம்.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்துவத் திறமை உள்ளது. நாம் அந்த தனித்துவத் திறமையைக் கண்டறிந்து நம்மில் அத்திறமையை வளர்த்துக் கொள்ளப் போகிறோமா அல்லது எல்லோரையும் போல நாமும் சாதாரண மனிதர்களாக ஆகப் போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.
நாமும் வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால் நமக்கான தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ச்சியான அறிவுத் தேடலும், கடின உழைப்பும் இருப்பது அவசியம். எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும் தளராத மனம் வேண்டும். இந்த நான்கு குணங்களும் நமது வெற்றிக்கு மிகவும் அடிப்படையானவை.
எல்லோராலும் வெற்றி பெற முடியும்: நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையில் தினமும் ஏராளமான மாணவர்களைச் சந்திப்பது வழக்கம். ஒருநாள் ஆந்திரத்திலிருந்து மலைவாழ் மாணவர்கள் குழுவாக வந்திருந்தனர். அவர்களிடம் உங்கள் லட்சியம் என்னவென்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியத்தைக் கூறினர். அவர்களுடன் வந்திருந்த ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற மாணவர், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வருவதே என் லட்சியம் என்று கூறினார். உயர்ந்த லட்சியம் இருந்தால் உனது இலக்கை அடையலாம் என்று அந்த மாணவனை நான் வாழ்த்தினேன்.

 10-ஆம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண்களும் பெற்ற அந்த மாணவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள எம்.ஐ.டி. நிறுவனத்தில் கணினி தொழில்நுட்ப படிப்பு பயின்று வருகிறார். அந்த நிறுவனத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், சர்வதேச அளவில் நடந்த போட்டித் தேர்வில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதன் மூலமே அங்கு படிப்பில் சேர முடிந்தது.
அமெரிக்காவில் படிப்பு முடித்ததுமே இந்தியாவில் வேலை தயாராக இருப்பதாக அந்த மாணவரின் படிப்புக்கு உதவிய கம்பெனியின் மேலதிகாரி அந்த மாணவருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இந்தியாவின் பார்வையற்ற முதல் குடியரசுத் தலைவர் என்ற இடத்துக்கு வர இயலாவிட்டால் உங்கள் நிறுவனம் அளிக்கும் வேலைவாய்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அந்த மாணவர் பதில் எழுதினார். 
ஆந்திர மாநிலத்தில் மலைவாழ் குடும்பத்தில் பிறந்த, அறவே பார்வையற்ற ஒரு மாணவரால் இத்தகைய உயர்ந்த நிலைக்கு உயர முடிகிறது என்றால் அந்த மாணவர் கொண்டிருக்கும் உயர்ந்த லட்சியமே அதற்குக் காரணம். ஆகவே, உயர்ந்த லட்சியமும், கடும் உழைப்பும் இருந்தால் நாம் யாராக இருந்தாலும் நம்மால் நிச்சயம் வெற்றி பெற இயலும். 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails