Sunday, February 10, 2013

தஞ்சாவூரும் தண்ணீர்பஞ்சமும்


தமிழகஅரசு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15000  இழப்பீடு அறிவித்துள்ளது. நல்ல செய்தி.

போர்செட் விவசாயிகள் அனைவரும்  இந்த ஆண்டு விளைச்சலில் நல்ல லாபத்தை கண்டுள்ளார்கள்.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ 37500 லிருந்து ரூ 45000 வரை சன்ன நெல்ரகத்தை தனியார்வியாபாரிகளிடம் விற்றுள்ளார்கள். மோட்டா நெல்ரகம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25000 லிருந்து ரூ 35000 வரை  விற்றுள்ளார்கள்.

அரசு அதிகாரிகள் திறமையாக செயல்பட்டால் லாபம் சம்பாதித்தபோர்செட் விவசாயிகள் நிவாரணம் வாங்குவதை கட்டுபடுத்தலாம்.

வாய்க்கால் பாசனத்தை நம்பியவர்கள் பாதி நெல் பாதி பதர் என்கிறப்படி தான் நெற்பயிர்கள் பலன் அளித்துள்ளது. பெரும்பகுதி விளைச்சல் நிலங்களின் நிலைமை இது தான்.

காலம் பிந்திநடவான வயல்கள் முழுவதும் காய்ந்தவையும் உண்டு.


தமிழக அரசு என்ன செய்கிறது என்று பார்க்கலாம். 

முந்தைய பதிவுகள்

http://thavaru.blogspot.in/2013/01/blog-post_24.html
http://thavaru.blogspot.in/2012/12/blog-post_25.html 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails