Saturday, February 02, 2013

காட்டி கொடுத்த காற்று


பேருந்து நகர ஆரம்பித்தது. சிவப்பு சேலை கட்டிய வயதான பெண்மணி இரண்டு பைகளுடன் பேருந்தை  நோக்கி வர நடத்துனர் பேருந்தை நிப்பாட்டி ஏற்றி கொள்ள  பேருந்து ஓட ஆரம்பித்தது.

வயதான பெண்மணி தன் இரண்டு பைகளுடன் பேருந்தின் கடைசி இருக்கையின் கீழ் பையை  வைத்துவிட்டு இருக்கையில் அடைக்கலமானர்.

பேருந்து நிறுத்தத்தை தாண்ட சுற்றி செல்ல ஆரம்பித்தது.  கடைசியில் ஒரு பக்கமாக டிக்கெட் கிழிக்க நினைத்துகடைசி இருக்கையில் அமர்திருந்த வயதான பெண்மணியிடம் வந்தார்.

எங்கம்மா போறே…என்னது பையில….

திருவாரூர் போறேன். இந்தாங்க டிக்கெட் கொடுங்க என பணத்தை நீட்டினார் பெண்மணி.

என்னம்மா பையில…

இந்தாங்க டிக்கெட் கொடுங்க என திரும்பவும் அவசரப்படுத்த..

பணத்தை சரி பார்க்கையில்…

காற்றில் கரைந்த வாசம்  அந்த பகுதி முழுவதும் நிறைந்தது.

முகம் சுளித்தவாறே .. என்னம்மா அது பையில கருவாடா…

ஆமாங்க…டிக்கெட் கொடுங்க…

பணத்தை கையில் கொடுத்து விட்டு விசில் வேகமாய் ஊதி..

எறங்கும்மா..மொதல்லா…

நீங்க டிக்கெட் கொடுங்கன்னா…

நீ ..எறங்க மாட்டியாஎன்றவாறே ஒரு பையை ரோட்டில் இறக்கி போட்டுவிட..

மற்றொரு பையுடன் இறங்க ஆரம்பித்தார் அந்த வயதான பெண்மணி.

கடுமையானவசவுகளுக்கு இலக்கானார் நடத்துனர்… பஸ் ஓட ஆரம்பித்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails