Tuesday, February 05, 2013

அறியாமையால் நிகழ்ந்த இறப்பு


அறுவடைக்காலம் அதுஅவ்வப்போது இருசக்கரவாகனங்கள் வந்துபோகும் ஏரிக்கரை பாதையில் நெற்கதிர்களை ஏற்றிசெல்லும் வண்டிகளின் வேகத்தில் நெற்மணிகள் அப்பாதை முழுவதும் இறைந்து கிடக்கும்.

ஆள் அரவமற்ற வேளைகளில் அணில்கள் நெற்மணிகளை பொறுக்கிக் கொண்டிருக்கும். ஏதாவது இருசக்கரவாகனங்கள் பாதையில் வந்தால் வாகனங்களின் இரைச்சலில் ஒரேதாவில் ஓடி மறைந்துவிடும்.


அன்றும் காலையில்வேகம் குறைவாய்ஓர் இருசக்கரவாகனம் பாதையில்பயணித்தது பாதையின் நடுவே அணில் ஒன்று இரைப்பொறுக்கியப்படி நின்றது.

இருசக்கரவாகனம் நெருங்கியது பதறி ஓடவில்லை நெருங்கிய வாகனம் வேகம் குறைத்து நின்றது இந்த பக்கம் அந்த பக்கம் திரும்பி ஒரு பக்கமாய் ஓடி மறைந்தது.

பிறந்த சில மாதங்களேஆன  அணிலுக்கு இந்த சூழல் புதியது போலும் அதன் ஓட்டத்தில் குழப்பமும் தெளிவின்மையும் தெரிந்தது. 

வழி நடத்தவேண்டிய பெரியவர்கள் பகத்தில் இல்லை.

அன்று மாலை ,  காலையில் இரைப்பொறுக்கிய  அதே இடத்தில் நாக்கு வெளித்தள்ளி இரைகுடல் பிதுங்கி இறந்துகிடந்தது.

ஏதோ  ஒரு இருசக்கரவாகனத்தில் அடிப்பட்டுதான் இறந்திருக்க வேண்டும். அறியாமையால் நிகழ்ந்த அணிலின் இறப்பில் மௌனம் சூழ்ந்திருக்க  முகம் தெரியாத அணிலின் கீச்சு குரல் தொடர்ச்சியாக அந்த பகுதியில் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் தாயாக கூட இருக்கலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails