Friday, February 08, 2013

ஆபாசத்துக்கு ஆஸ்கார் விருதாமே…


அரைகுறையாவாது ஆபாச காட்சிகள் இருந்தால்தான்ஆஸ்கர் விருதாமே நெல்லை சு.முத்து சொல்லும் புள்ளிவிபரங்கள் இதோ…




ஆஸ்கார் விருது வெறும் மாயை. தம் நாட்டுக் கலைஞர்களுக்கு அமெரிக்க அகாதமி வழங்கும் அங்கீகாரம் நமக்கு ஏன்? அதற்கு ஆலாய்ப் பறப்பவரிடம் ஒரு சொல். ஆஸ்கார் தகுதி பற்றி இன்று மேனாட்டு ஊடகங்களில் இப்போதுதான் சர்ச்சை அடிபடுகிறது. வேறு ஒன்றுமில்லை. அரைகுறையாகவேனும் ஆபாசக் காட்சிகள் இருந்தால் போதும் என்கிறது ஒரு பகுப்பாய்வு.
அமெரிக்காவின் "சலனத் திரைப்படக் கலைகள் மற்றும் அறிவியல் அகாதமி' தணிக்கை வரையறைகள் முன்பு எல்லாம் நெருக்கடி ஆனவை. திறந்த மார்புடன் தோன்றிய நாயகியரை அகாதமி தன் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கவே செய்யாது.
இன்று காலம் மாறிப் போயிற்று. அப்படி எல்லாம் கடினத் தோல் எருதுபோல் வந்து நின்று காட்டினால்தான் விருது. அந்த ஆஸ்காருக்குத்தான் எத்தனை ஆடம்பர விளம்பரங்கள்.
ஜேம்ஸ் காரோனின் "டைட்டானிக்' (1977) தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரின் உழைப்பு என்றாலும், அதில் அந்நாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் அரைகுறை உடையில் அவதரித்தார் நிர்வாண நாயகி கேத் வின்ஸ்லெட். விடாப்பிடியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு "த ரீடர்' (2008) திரைப்படத்திற்கு ஆஸ்கார் வாங்கியே விட்டாராமே!
பால் தாமஸ் ஆண்டர்சனின் "பூக்கி நைட்ஸ்' (கும்தலக்கடி இரவுகள், 1997) நாயகன் பர்ட் ரேனால்ட்ஸிற்கு அகாதமி அங்கீகாரம் வாய்த்தது. இந்தப் படத்தில் பூரண நாயகி நினா ஹார்ட்லி நடித்தது இருக்கட்டும். இன்றைக்கு 52 வயதாகும் ஜூலியன் மூர் தமது 27-ஆம் வயதில் இந்தப் படத்துக்காக ஆஸ்கார் பட்டியலில் ஏறினார் என்றால் வேறு சொல்வானேன்? இவரது தகப்பனார் ராணுவ நீதிபதி. தாயார் உளவியல் நிபுணர். இந்த நடிகையோ சிறந்த குழந்தை எழுத்தாளராமே. நாடு உருப்பட்டால் போலத்தான்.
ஜெனிஃபர் எஸ்பொசித்தா ("கிராஷ்' - முட்டி மோதல், 2004), ஜோபக் ("மிட்நைட் கௌபாய்' - நடுராத்திரி மாடு மேய்ப்போன், 1969), டஸ்டின் ஹாஃப்மானின் காதலி (கிராமர் வி. கிராமர், 1979), கேத் வின்ஸ்லெட் (டைட்டானிக், 1997), மேனா சுவரி மற்றும் தோரா பர்ச் ("அமெரிக்கன் பியூட்டி', 1999), சிமோனத்தா ஸ்டீஃபனல்லி ("த காட்ஃபாதர்', 1972), க்வைனத் பால்த்ரோ ("ஷேக்ஸ்பியர் இன் லவ்', 1998), ஜூலியத் பினோச்சி மற்றும் கிறிஸ்டின் ஸ்காட் தாமஸ் ("த இங்கிலிஷ் பேட்டன்ட்', 1996), எம்பெத் டேவிட்ஸ் மற்றும் மக்தலேனா கோர்மோர்னிக்கா ("ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்', 1993), கிளாரா பௌ ("விங்க்ஸ்', 1927 - 1928) ஆகியோர் ஆஸ்கார் விருதுபெற்ற "டாப் டென்' ஆபாச நாயகியர் என்கிறது மேனாட்டுப் புள்ளிவிவரக் கணிப்பு.
ஆடை இன்றிப் பிறந்தோம் என்பதற்காக ஆடை இன்றி வாழ்வோமோ? இந்தக் கலைஞர்கள் தங்கள் "கட்டணத்தை' உயர்த்துவதற்காக விருதுபெற மல்லுக் கட்டுகிறார்கள். துணிச்சலாக "முதலீடு'ம் செய்கிறார்கள் என்பதே உண்மை.
இந்த ஊடக உலகம் ஓர் அரைக்கோளம் மாதிரி. அடிமட்டத்தில் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்துவதே நம் கலைஞர்கள் கவலை. அவர்தம் அறிவு அல்லது கலைநுட்ப மட்டத்தை உயர்த்துவது பற்றிய அக்கறை எல்லாம் கிடையவே கிடையாது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails