Sunday, March 10, 2013

ஹெய்டி - உண்மை நிலவரம்


ஜனவரி 12 , 2010  அன்று ஏற்ப்பட்ட பூகம்பத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.0  என்று பதிவானது.

அன்றைய தினம் 316000 கொல்லப்பட்டு 1.5 மில்லியன் மக்கள் வீடு இழந்தார்கள்.







இன்று

350000 மக்கள்இன்றும் கூடாரங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

வறுமையும் வன்முறைகும்பல் தான் இன்று ஹெய்டியை ஆட்சி செய்கின்றன.

சர்வதேச சமூகத்தால் செய்யப்பட்ட உதவிகள் செய்யப்படும் உதவிகள் நேரடியாக ஹெய்டி அரசாங்கத்துக்கு செல்ல வீண் செலவுகள் செய்யப்பட்டும் அல்லது அரசாங்க அதிகாரிகளும் வன்முறையாளர்களும் பங்கு போட்டுகொள்கிறார்கள்.

வாழ்க்கையை ஓட்டுவதே அங்குள்ள மக்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக அமைய  வன்முறை கும்பல்களின் வன்முறையே தலைவிரித்தாடுகிறது.

மூன்றாவது வருட பூகம்பநாளில் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்காக அங்குள்ள சர்ச் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த 250 பேர் கூடியிருக்க  3 டசன் ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்கள்
ஆலயத்தில் உட்புகுந்து கூடியிருந்தவர்களை வன்முறைக்கு  உள்ளாக்கி பெண்களை  கற்பழித்தார்கள் இது ஒரு சம்பவம்.

வீடு இழந்து கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களில் உள்ள பெண்களும் பெண்குழந்தைகளும் தொடர்ச்சியாக வன்முறை கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள்.

11000 ஐ.நா.படைவீரர்கள்  சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பயன்படுத்த படுகிறார்கள்.

அமைதிபணிக்காக அங்கு சென்ற நேபாள் நாட்டு படைவீரர்களால் காலரா நோய் பரப்பிவிட இன்று ஹெய்டியில் 8000 பேர் காலரா நோயால் இறந்தும் 65000 அந் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இயற்கை தொடங்கி வைத்த அழிவை கட்டுபாடில்லாத வன்முறையாளர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இன்றைய உண்மை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails