Wednesday, April 17, 2013

உழவர் பெருவிழாவும தமிழகஅரசின் கண்துடைப்பும்


நடுவில் முதல்வர்  படம் போட்டு காடிகார சுற்றில் மா தென்னை மரங்கள் நெற்பயிர்  தானியவகை பயிர்களின் படங்கள் போட்ட விளம்பர ரதம் நின்றுகொண்டிருந்தது.

உழவர் பெருவிழா விளைச்சலை மும்மடங்கு பெருக்குவோம் வேளாண் தொழிலை காப்போம் என்ற வாசகங்கள இடம் பெற்றிருந்தன்.

அ.இ.அ.திமுக வேட்டி கட்சி புள்ளிகள் அந்த பக்கம் செல்பவர்களையெல்லாம் சாப்பிட அழைத்தார்கள்.
சாப்பாடு போட்டார்கள்.

இந்த விழாவினுடைய நோக்கம் என்ன?

விவசாயத்திற்காகவும் விவசாயிகளுக்கும் அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் என்ன என்பதை சொல்லதான் 
இந்த உழவர் பெருவிழா.

நடப்பது என்ன?


ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள வேளாண்விரிவாக்க மையத்திற்கு எப்பொழுது பொருட்கள் வருகிறது வந்த பொருட்கள்எப்பொழுது விற்பனையானது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

வேளாண் விரிவாக்கமைய அதிகாரி யை ஒரு சாதாரண விவசாயி நான்கைந்து நாட்களுக்கு அப்புறம் தான் சந்திக்கலாம். 

அப்படி சந்தித்தாலும் அவர்கள் கேட்கும் பொருட்கள் பெரும்பாலும் இருக்காது.

அவ்வாறு பொருட்கள் இருந்தாலும் ரேசன் கார்டு நகல்கள் நில சம்பந்தமான நகல்கள் வேண்டும் என்பார்கள்.

அதை கொண்டு சென்றால் அதற்குபிறகு நாம் பொருட்கள் வாங்குவது நம்முடைய அதிர்ஷ்டம்.

வேளாண் துறை அதிகாரி இருந்தால்  பொருள் எடுத்து கொடுக்கும் உதவியாளர் இருக்கமாட்டார். உதவியாளர் இருந்தால்  வோளாண்துறை அதிகாரி எஸ்கேப்.

இதற்குள்ளாகவே விவசாயி தனியார் கடைகளில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி விவசாயவேலையை முடித்திருப்பார்.

வேளாண் துறைஅதிகாரி அலுவலகம் இருக்கும் ஊருக்கு வந்தவுடனேயே அங்குள்ள அரசியல் பிரமுகர்களுக்குமுதலிடம்  கொடுக்கப்படும்.
பெரும் நிலசுவான்தார் இரண்டாமிடம்  வேளாண்அலுவலகத்திற்கு மானிய விலையில்  வந்து இறங்கும் விதை உரம் வேளான் கருவிகள் அனைத்தும் வேளாண்துறை அதிகாரியால் முக்கியமானவர்களுக்கு கொடுத்தது போக  மீதம் இருக்கும்  சில வற்றை மற்ற விவசாயிகள் பெற்றுகொள்ளலாம்.

எந்த ஆட்சி வந்தாலும் வேளாண்துறையின் லட்சணம் இதுதான்.

இதற்கு இப்பொழுது உள்ள தமிழகஅரசு விதிவிலக்கா என்ன??!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails