Sunday, April 21, 2013

பிரதமர் கண்டனம் பாலியல் வழக்கும்


போலீஸ்  கேஸ் விசாரணை  ஜவ்வு மிட்டயாய் வழக்கு குற்றவாளிகள் பெருகதான் செய்வார்கள்.

தலைவர்கள் தங்கள் மனசாட்சி உட்படாமல் சமுதாயத்திற்காக கருத்தை உதிர்கிறார்கள்.

கருத்துகளுக்கு இடம் கொடுக்காமல்  செய்த குற்றத்தின் தன்மையை பொறுத்து குற்றவாளியை பிடித்து உடனே உயிர்போகும் படி செய்திருந்தால் மற்றவர்கள் கொஞ்சமாவது யோசித்திருப்பார்கள்.

ஒன்றா இரண்டா நூற்றுக்கும் மேல் டெல்லி அரசு என்ன செய்கிறது?  அரசியல் செய்பவர்களும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை??!!

பிரதமர் கண்டனம் ஜனாதிபதி கண்டனம் அரசியல் தலைவர்கள் ஆளக்கொரு கருத்து பாதிக்கப்பட்டது அவர்கள் பிள்ளை கிடையாதே…சாதாரண குடிமகன் என்னசெய்யமுடியும் வழக்கமாய் போலீஸ் நோக்கிதான் ஓட வேண்டும்.

ஒவ்வொரு சாதாரணகுடிமகனின் மனகுமுறல்கள் இதுவாக இருந்தபோதிலும் முடிந்தவர்கள் செய்துமுடிக்கவேண்டும்.

பிரதமர் கண்டனம்

'5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிகரமானதும், அவமானகரமானதும் ஆகும். இதைப் போன்ற கொடுமைகளை நம்மிடையிலிருந்து களைய ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் உழைக்க வேண்டும்,' 

 உள்துறை அமைச்சர்

குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்ட பிறகு கடுமையான தண்டனை வழங்கப்படும்,' 

சுஷ்மா சுவராஜ்

சிறுமியை இரண்டு தினங்கள் அடைத்து வைத்து சீரழித்தவன் மனரீதியாக பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம். எனவே அவனுக்கு முதலில் ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்து சித்ரவதை செய்யவேண்டும். பின்னர் துடிக்கத் துடிக்க தூக்கில் போடவேண்டும். அப்போது தான் இதைப் பார்ப்பவர்களுக்கும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அச்சம் உண்டாகும்

ஜனாதிபதி

சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இந்த துயர சம்பவத்தின் பாதிப்பில் இருந்து சிறுமி விரைவில் குணமடைய, அவரின் பெற்றோருடன் இணைந்து இறைவனிடம் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான வன்புணர்ச்சி சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ள பிரணப் முகர்ஜி, குற்றவாளிகளுக்கு பாடம் புகட்டும்படி கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாதிரியான குற்றங்களை நம் சமுதாயம் ஒற்றுமையுடன் இணைந்து களைய வேண்டும் என்றும் குடியரசு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails