Tuesday, April 09, 2013

நடுத்தரவர்க்கமும் கரண்ட்கட்டும்


தமிழகத்தின் மின்வெட்டு தமிழகம் அறிந்ததே ஆனால் அது முறைபடுத்த பட்ட மின்வெட்டாக இருந்தால் மக்கள் வாழப்பழகிவிடுவார்கள். 

முறைப்படுத்தியும் முறைப்படுத்தப்படாத கரண்ட் கட்டினால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தரவர்க்கம் தான்.

பொருளாதாரவசதியினால் மேம்பட்டவர்களுக்கு  யாதொரு  பிரச்சனையும் இல்லை மாற்றுவழி தேடிக்கொள்கிறார்கள்.

காலையில் வேலைக்கு போய் வீடு திரும்ப கிட்டதட்ட இரவு 10 மணி ஆகும். அவர்கள் வந்து படுத்தால் போதும் என்ற நிலைமையிலே வேலையிலிருந்து விடுப்படுவார்கள்.  சாப்பிட்டு விட்டு மற்றவேலைகள் முடித்து தூங்க இரவு 11 மணி ஆகும் போது  கரண்ட்இருக்கும்.

முறைப்படுத்தபடாத மின்வெட்டில் கரண்ட் போக  காற்றாடி நின்றுவிடும். இப்பொழுது உள்ள சமுதாய சூழலில் கதவை திறந்து வைக்க பயம். காற்று இல்லாமல் வியர்க்க அடுத்த  1 மணி நேரமோ 1 ½  மணி நேரமோ மனைவி பிள்ளைகள் தூங்க கணவனின் ஆயுதம் விசிற தான் விசிறி யே ஆக வேண்டும்.

உழைத்து களைத்து படுத்தால் போதும் என்று வேலை விட்டு போகும் ஆணுக்கு நேர்ந்த கதி இதுதான்.

இன்னொரு முக்கிய பிரச்சனை அரசுகளின் சரியான  திட்டங்கள் இல்லாத பாதாள சாக்கடையால் வருடம் 365 நாளும் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை.

முன்பெல்லாம் கடித்தால் கூட ஒன்றும் தெரியாது. இப்போது அரிக்க ஆரம்பிக்கிறது சொறிய ஆரம்பித்தால் சொறிந்து கொண்டே இருக்கவேண்டும் எங்கே இங்கு தூங்குவது.

காரணம் கரண்ட் கட்..

வீடுகளில்பகல் நேரங்களில்  கரண்ட் இல்லாமல் போனால் கூட சமாளித்து விடுவார்கள்.

இரவு நேரங்களில் கரண்ட் இல்லாமல் என்பது நடுத்தரமக்களுக்கு நரகம் தான் .

LinkWithin

Related Posts with Thumbnails