Saturday, May 18, 2013

ஸ்ரீசாந்த் நீங்க நல்லவரா ?கெட்டவரா?


உச்சி வெயிலின் உக்கிரம் காலை 11 மணிக்கே தொடங்கிவிடுகிறது.  வெயிலின் தாக்கமாவது மண்ணாங்கட்டியாவது என்றுசிறுவர்கள் இளைஞர்கள் வயல்கள் ஏரிகள் குளங்கள்கிராமங்களில் நகர்புறமைதானங்கள் எல்லா இடங்களிலும்கிரிக்கெட் விளையாட்டுகள்  போட்டிகள் என கோடைத்திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.

எல்லாம்  ஐபில் கிரிக்கெட்வெப்பதாக்கம் இளைஞர்கள் சிறுவர்களின் வியர்வை போய்கொண்டிருக்கிறது.

ரொம்ப நல்லவரு....கண்ண தொடைச்சுகப்பா...


ரசிகர்களின் பேராதரவு ஜபில் கிரிக்கெட் போட்டிகள் பெரிய வர்த்தகரீதியான லாபத்தை ஈட்டி தர  விளையாடும் வீரர்களுக்கு அணிதலைமைகள் லட்சங்களிலும் கோடிகளிலும் கொட்டி கொடுத்து  தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டி வீரர்களை அணிக்கு ஏலம் எடுக்கிறார்கள்.

இரவு கண்விழித்து மிகைஆர்வத்துடன் ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வீரர்களின் உண்மையான தனிதிறமையை வெளிப்படுத்தி எதிரணி வீரர்களை பந்துகளை அல்லது விக்கெட்களையோதுவசம் செய்வது தான் உண்மையான காரணம்.


அவர்களை மடையர்களாக்கும் விதமாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தங்கள்  திறமையை   யாருக்கு வேண்டுமானலும் தாரை வார்க்கும் விபசாரத்தை என்னவென்று சொல்வது.

சூதாட்டத்தில் பங்குபெற்ற ஸ்ரீசாந்த்  நான் அப்பாவி  என்று பேட்டி கொடுக்க அவரது அப்பாவோ என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை கெட  இவர்கள் தான் காரணம் என்று மற்றவர்களை காரணம் காட்டுகிறார்.

போலீசார் விசாரணையில் குற்றத்தை ஒப்புகொண்டதாக செய்தி. திரும்பவும் நான்  அப்பாவி ஒன்றும் தெரியாதவன் புக்கியால் தான் கெட்டு போய்விட்டேன் என்று கண்ணீர் வடிக்கிறார்.

இது அவருடைய முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

இதற்கு பின்னாலும் நிறைய கள்ளதனங்கள் இருக்கலாம். ஆக மொத்தத்தில் மடையர்கள் ஆவது ரசிகர்களே...

இன்னமொரு முக்கியகாரணம் ரசிகர்களின் கண்மூடித்தனமான ஆவல் விபரம் தெரிந்தவர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails