Tuesday, May 21, 2013

தினகரன் தலையங்கம் முரண்பாடுகள்


21.05.2013 அன்று வெளியான தினகரன் தலையங்கத்திற்கு தீனியாக கிடைத்தது இரண்டு தனிமனிதர்களின் வாழ்க்கை.
ஒன்று தன்னுடைய 30 வருட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இழந்த ஒருவர்  . இரண்டாவது தந்தை இறந்தபிறகு குடும்பபொறுப்பை ஏற்று தன்னுடைய சுகதுக்கங்களை இழந்து தன்னுடன் உடன்பிறந்தவர்களை நல்லபடியாக வாழவைத்தவர்

எது நமக்கு சொந்தம் என்ற தலைப்பிட்டு இறுதியில்எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்; மறுநாள் வேறு ஒருவருடையதாகும் என்ற உலக நியதியை  புரிந்து கொண்டால் இழப்புகள் வலி தராது என்று பகவத்கீதையைமேற்கோள் காட்டியுள்ளார்கள்.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவடையதாகும் என்பது உண்மை தான். எல்லா மனிதர்களுமே மனபக்குவம் அவர்அவர்கள் வளர்ந்த சூழல் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் விதங்களை வைத்து தான் மாறுபடும்.

இழப்புகளை இழந்தவர்களின் வலி என்பது அவர்கள் அதை கஷ்டப்பட்டுஉருவாக்கி பாதுகாத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த வலிகளால் ஏற்ப்படும் எந்த ஒரு முடிவும் அவர்களை பொருத்தவரையில் மிகச்சரி.

அவர்களுடைய தற்பொழுதைய தேவை சரியான ஒன்றை சுட்டிகாட்டி நம்பிக்கையான ஆறுதலான வார்த்தைகள் அதை விடுத்து தத்துவவார்த்தைகள் தேவையில்லாத ஒன்றாகவே படுகிறது.

திரும்பவும் அவர்களால் அவர்களாகவே உருவாகமுடியும் போன்ற நம்பிக்கை வார்த்தைகள் தான்.

முதலாமவர் எதிர்பார்ப்பு அவருடைய 30 வருட சம்பாத்தியத்தில் உருவான சொத்து சுகம் அது ஒரே இரவில் ஏமாற்றம் ஆக  எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்; மறுநாள் வேறு ஒருவருடையதாகும் இதை அவரால் ஏற்றுகொள்ளமுடியுமா???

இரண்டாமவர் தன்னை இழந்து அவர்களுடைய தம்பி தங்கைகளின் நல்வாழ்க்கை தான் அவருடைய எதிர்பார்ப்பு இந்த எதிர்பார்ப்பில்நிகழ்ந்த ஏமாற்றம் கொலையில் முடிந்துள்ளது. அவர்களுக்காக தன் சொந்த இழப்புகளின் துயரம் தான் இவ்வளவு கோபம். மேற்சொன்ன மேற்கோள்களை இவரால் ஏற்றுகொள்ளமுடியுமா ???

அந்த தலையங்கம் இது தான்.

எது நமக்கு சொந்தம்?

பெரிய பின்னணி ஏதுமின்றி சுயமாக உழைத்து தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறியவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் உண்டு. நேற்று செய்தி தலைப்புகளை ஆக்கிரமித்த இருவர் அந்த ரகம். பெயர்களில்  திருச்செந்தூர் வட்டார வாசம் தெரிகிறது. சேர்மகனி(60), சபரிநாதன்(21). படிக்கவில்லை. முன்னவர் பிராட்வேயிலும், இளைஞன் பொன்னேரியிலும் கடை திறந்து வியாபாரம் செய்து வந்தவர்கள். சேர்மகனி வட மாநிலங்களில் பட்டாணி கடலை வாங்கி விற்று அமோகமாக சம்பாதித்தார். சபரிநாதன் மளிகை கடை வருமானத்தில் விதவை தாய், 3 தம்பி, 2 தங்கைகளை வசதியாக வாழவைத்தார்.

ஒரு தங்கை காதல் திருமணம் செய்து நாகர்கோயிலில் குடும்பம் நடத்த சென்றுவிட்டாள். நண்பர்கள் இருவருடன் அங்கு சென்ற சபரி, பாசமலர் சிவாஜியாக ஒருநாள் நடித்து தங்கையை கண்ணீரில் நனைய வைத்தார். மறுநாள் தங்கையையும் மாமனாரையும் வெட்டி கொன்றார். தங்கை கணவன் காயங்களுடன் பிழைத்துவிட்டார்.

குடும்பத்தோடு ஊட்டி சுற்றுலா சென்ற சேர்மகனி திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 275 சவரன் நகையும் 50 லட்சம் ரொக்கமும் காணாமல் போயிருந்தன. ‘பேங்க் பழக்க வழக்கமெல்லாம் நமக்கு கிடையாது. நகையோ பணமோ அவசரத்துக்கு வேண்டுமென்றால் கையோடு வைத்துக் கொள்வதுதான் நல்லது என நினைத்தேன். இத்தனை வருட உழைப்பின் பலனும் ஒரே நாளில் போய்விட்டதே’ என்று கண் கலங்குகிறார்.

‘எனக்கு ஜாதிகூட முக்கியமில்லை. ஆனால் ராணி போல வாழ வேண்டும் என நான் ஆசைப்பட்ட தங்கை, ஏழையின் வீட்டில் கஷ்டப்படுவதை தாங்க முடியவில்லை. நம்பிக்கை துரோகத்துக்கு இதுதான் விலை’ என்று அமைதியாக விளக்கம் சொல்கிறார் சபரி.

திருடனிடம் சொத்தை இழந்தவரையும் தங்கையை கொன்றவரையும் ஒப்பிட முடியாது. இருவரும் இழந்தது கொஞ்சமல்ல என்பது மட்டுமே பொதுவானது. பணம் நகை பத்திரமாக இருக்குமிடம் வீடல்ல என்பதை சேர்மகனி அறியவில்லை. சொந்த தங்கை என்றாலும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை சபரி உணரவில்லை.  எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்; மறுநாள் வேறு ஒருவருடையதாகும் என்ற உலக நியதியை  புரிந்து கொண்டால் இழப்புகள் வலி தராது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails