Monday, May 06, 2013

ஆண் நாய்களுக்கு குடும்ப கட்டுபாடுரோட்டோர பாதச்சாரி விக்கித்து வியர்த்து பின்னால் வரும் சத்தம் கேட்டு ஒதுங்கி நின்று பார்வை யை   சத்தம் வரும் திசை நோக்கி திருப்ப…

ஆறு அல்லது எட்டு பேர் கொண்டு குழு

ஓடுடா…..ஓடுடா…… என்று கத்திக் கொண்டே கட்டை கம்புகளுடன் ஓடிவர அவர்களுக்கு முன்னால் நாய் ஒன்று வேகமாய் ஓடியது.

எதிர்புறம் கம்பி சுருக்குடன் மறைந்திருந்த அந்த குழுவினுடைய நபர் லவகமாய் நாயின் கழுத்தில் கம்பி சுருக்க மாட்டி ஒரு இழுப்பில் …

நாய் மாட்டி கொண்டு… இழுத்து கொண்டு ஓட முயற்சிக்க…
கம்பு கட்டையுடன் வந்த குழு நாயின் தலை மற்றும் உடம்பு என  மூர்க்கமான தாக்குதலில் சிதைந்த நாய்  தன் மூக்கின் வழியே ரத்தம் வரவழைத்து முனுகியப்படியே  சுருண்டது.

இவர்களுக்கு பின்னாலயேஇது போன்ற தாக்குதலில் உயிரிழந்த நாய்களை ஏற்றி வந்த வண்டியில் இந்த நாயும் கணக்கில் சேர்ந்தது.

எங்களுடைய பேரூராட்சி உட்பட்டபபகுதியில் கோடைகாலங்களில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க கடந்த 10 வருடங்களுக்கு முன் உள்ள நிலைமை இது.

கட்டைகள் கம்புகள் மறைந்தது அதே எண்ணிக்கையிலான குழுவில் ஒரே நபரிடம் கம்பி சுருக்கு மற்றொரு நபரிடம் ஒரு சிறியபை.

ஒரு நாயை துரத்தி கொண்டு ஓடுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை   நாய் பயந்து கொண்டு ஓடியதில் வேறுபாடு இல்லை .

மறைந்திருந்த நபர்  கம்பி சுருக்கை மாட்டி ஒரே இழுப்பில் சுருண்டு விழ…தப…தப….ஓடி வந்த குழுவினர் நாயை அமுக்கி பிடித்து ஊசியின் வழியே உயிர் பிரியும் மருந்தை செலுத்த  உடன் மயக்கமாகி கொஞ்சம்  கொஞ்சமாய் பிரியும் உயிர்.

இது 10 வருடங்களுக்கு  பிறகு நடைமுறையில் இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை குறைப்பு.

இப்பொழுது சிறிய லோடு வண்டியில் கம்பி கூண்டுடன் பேரூராட்சி ஆட்கள் செல்ல….

நாய் பிடிக்கும் குழு நபர்கள் ஆண் நாய்களை மட்டும் தேடி கொண்டிருந்தார்கள்.

என்னவென்று விசாரிக்க … ஆண்நாய்களை பிடித்து குடும்ப கட்டுபாடு  செய்து விட்டு விடுவார்களாம் என்று சொன்னார்கள்.

அப்பாடா….

தெரு நாய்கள் தப்பித்தது…..அடி கிடையாது …விஷம் கிடையாது..

ஆனாலும் இது சரியா..!!??


2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆனாலும் இது சரியா..!!??

உங்கள் கிராமத்தில் இது வரை இருந்த நடைமுறைகளைப் பார்க்கும் போது, மிகக் குரூரமே நானும்!
இவற்றைக் கண்டுள்ளேன்.
ஆனால் ஆண் நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு (காயடித்தல்)
மிகத் தவறுங்க!!!
இவை வாழுவதால் பெண் நாய்களுக்கும் எந்தப் பலனும் இல்லை.அத்துடன் இந்த காயடித்தலால் ஆண் நாய்கள் உடல் பருமனுடன், கோவம் கூடியதாகவும் மாறும் அபாயமும் உண்டு.

அவுஸ்ரேலியாவில் டிங்கோ நாய்களுக்குச் செய்வது போல் உணவில் விசம் வைத்துக் கொல்வது தவிர வழியேயில்லை.
தென் ஆபிரிக்காவில் யானைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, இருக்கும் இளம் யானைகளுக்குத் தேவையான உணவு செய்வனே கிடைக்க அரச வன பாதுகாவலர்கள் வருடாவருடம் முதிய யானைகளைச் சுட்டுக் கொல்லுகிறார்கள்.

எனக்கு மிருகங்களில் பிரியம் உண்டு. அதிலும் கண்பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு உதவும் நாயில் அளப்பெரிய அன்பு , அதன் பார்வையிலேயே ஒரு தாயின் கருணை ததும்பும், இங்கு அந்த வகை நாயை, நான் அதிகம் குறிக்கிட நேரிடும். நின்று அவதானிப்பேன் அதன் சிரத்தையை.

ஆனாலும் நமது நாடுகளில் தெருநாய்களால் மனிதனுக்கு ஏற்படும் சிரமங்கள் அதிகம். மனிதனா? மிருகமா? என்றால் மிருக நலம் விரும்பிகள் கூட, மனித நலத்தையே விரும்புவார்கள். அதாவது
ஒரு மிருகநலவிரும்பியின் வீட்டில் தீப்பிடித்து விட்டால், அந்த வீட்டில் அவர் குழந்தையும், அவர் வளர்ப்பு நாயும் மாட்டிவிட்டால்,அந்த சூழலில் ஏதாவது ஒன்றைத்தான் காப்பாற்றமுடியுமானால், அவர் தேர்வு செய்வது நிச்சயம் நாயாக இராது. இதனால் தான் மனிதனே பிரதானம் என்கிறேன்.

அதனால் குடும்பக்கட்டுப்பாட்டையும் நிறுத்தி, தெருநாய்களை வகைப்படுத்தி அதில் உள்ள இனங்களைப் பிரித்தறிந்து; அவ்வினங்கள் யாவற்றிலும் வீரியம் மிக்க சில சோடிகளைத் தேர்வு செய்து
அரச செலவில் அவற்றை பாராமரித்துக் கொண்டு (இனம் முற்றாக அழியாவண்ணம்) மிகுதியை உணவில் தூக்க மருந்தை அதிக அளவில் கலந்து , வலியின்றிக் கொன்று விடுவதே!
எல்லோருக்கும் நன்று.

kaliya raj said...

வணக்கம் யோகன் பாரிஸ்...

அவர்கள் இந்த தடவை நாய் பிடிக்க வந்தபொழுது மிகவும் வித்தியாசம்.காலங்கள் மாற இதுவும் மாறுகிறது போலும் .

தாங்கள் சொன்ன விபரங்கள் நான் அறியாதது. அறிய தந்தமைக்கு நன்றிங்க...

LinkWithin

Related Posts with Thumbnails