Wednesday, June 19, 2013

உள்ளுர் மனிதர்கள் முதல் உலகநாடுகள் வரை ஒற்றாடல்

கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளில் அமெரிக்க அரசின்  உளவு துறை உளவுவேலைகளின் உண்மை தன்மை போட்டுடைத்த சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென்முக்கிய செய்தியாகி போனார்.

ஜி8  நாடுகளின் தலைவர்களை பிரிட்டன் உளவு பார்த்ததையும் அவரே போட்டுடைக்க… அரசுகளின் ராஜதந்திரங்களில் உளவு மிக முக்கியம்.


திருவள்ளுவர் மிக அழகாக..

”ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.”

பொருள்

ஒற்றரால்(நாட்டு நிகழ்ச்சிகளை ) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழிவேறு இல்லை.

உலகநாடுகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. உளவு பார்த்து சொல்லப்படும் செய்திகள் பொறுத்தே அவற்றுக்கான முக்கியதுவம் அளிக்கப்பட இடைவெளியே இல்லாது ஒற்றாடல் என்பது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

எங்கள் கிராமங்களில் ஒற்றாடல் என்பது பெண்களிடத்தில் தான் இயல்பாக குறிப்பிட்ட வீடுகளுக்கு சென்று நடக்கும் நிகழ்வுகள் பேசப்படும் செய்திகளை அனுமானித்து   பிறர் செய்தி வாங்குபவரிடம் இலவசமாய் செய்திகள் சொல்லப்படும்.

அவை தகுந்தநேரத்தில் செய்திக்கு உரியவர்களிடம் சொல்லப்படும்.

அதனால் இன்றளவும் குடும்பபெண்களிடத்திலிருந்து குடும்பத்தினுடையஆண்களுக்கு செய்திகள் சொல்லப்பட்டு கொண்டேயிருக்கும்.

செய்திகளின் தன்மை பெரும்பாலும் கள்ளஉறவுகள் குடும்பசண்டைகள் பற்றியே சுழலும்.

ஓராயிரம் நபர்களின் பாதுகாப்பில் மேலும் மேலும் பிரச்சனைகள் ஏற்படும்போது தனிமனிதர்களின் தகவல்கள் மிக தீவிரமாய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

சரியா…தவறா….அவரவர்களின் பார்வையை பொறுத்தது.



ஓர் சிறந்த அரசின் ஒற்றாடல் கள் இப்படிதான் இருக்கவேண்டும் என இலக்கணம் வகுக்கும் வள்ளுவர்.

”எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை  எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.”

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails