Monday, June 24, 2013

பெண் காத்திருக்கிறாள் காதல் காத்திருக்கிறது


கல்யாணம் நடக்குமா..? நடக்காதா..? மனப்போராட்டத்தில் அவள்.

பெற்றவர்கள் ஒத்துபோவதில் முரண்பாடுகள் நிகழ்வதால் அவளின் திருமணம் தள்ளிப்போகிறது.

விரும்பியவர் கிடைக்க பிரார்தனை செய்கிறாள்.

வருபவரை விரும்பியவர் ஆக்கிகொள் என்று கூறினால்…சாரி..நோ காம்பர்மைஸ்…

அதற்காகவா இவ்ளோ நாட்கள் நான் காத்திருந்தேன்? என்ற எதிர்கேள்வியில் சமாதானம் பேசுபவர்கள் அவுட்.

காதலர்கள் இருவரும் பேசுகையில் இப்படி வெயிட் பண்ணுவதும் நன்மைகே என்று ஆறுதல் பேச்சுகளில் காலங்கள் ஓடுகிறது.

குடும்பம் விட்டு வெளியேறியோ அல்லது குடும்பத்தின் தலைமை எதிர்த்தோ இவர்கள் செயல்படா நிலைமை.

பெண் இருப்பது அறிந்து மண  ம் பேசவந்தவர்கள் திருப்பி அனுப்பட்டார்கள்.

பெண் இருப்பதை சொன்னவர்கள் நினைத்து கொண்டார்கள் அல்லது விசாரித்தார்கள் முடிவு இரண்டாய் நின்றது.

ஒன்று காதலில் விழுந்திருக்கிறாள் பெண்.

இரண்டு யாருக்கோ பேசி முடிக்கப்பட்டிருக்கிறாள்.


அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மத்தியில் பலவித யூகங்கள் பேச்சுகளாய் வெளிப்பட பெண் காதுகளுக்கு ஒன்று இரண்டாகி நான்காகி சென்றடைய  மனதில் வருத்தம் எய்துகிறாள்.

தினசரி மனப்போராட்டங்களில் காதல் நடந்து நகருவதே கடினமாய் போகிறது.


பெண்  காத்திருக்கிறாள் காதல் காத்திருக்கிறது.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails