Monday, June 10, 2013

எழுத மறந்தவர்கள்.

ஸ்மார்ட்போன்களின் வருகையால் எழுத்து என்பது அரிதாகிவிட என்னுடையநண்பர்கள் இருவர்  தன் சுயதொழிலில் எழுத படிக்க அதிகம் தேவையில்லாத துறை.   தினசரி அவரது நடவடிக்கைகளில் படிப்பும் எழுத்தும் அவ்ளோ தேவையில்லாத ஒன்று.

படிப்பும் எழுத்தும் அவர்களுடைய சுய விருப்பத்திலேயே நடைப்பெறும். இருவரும் படித்தாலும் அவர்கள் எழுதுவது என்பது ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் சில சொற்களுடன் முடிவடைந்துவிடும்.

அவருடைய   சொந்த வேலையின் காரணமான தொடர்ச்சியாக கடித போக்குவரத்து  வைத்துகொள்ள வேண்டிய சூழல்.



பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்து கொண்டு எழுத தடுமாறினார்.

மற்றொரு நண்பருக்கு ஒரு 2000 புத்தக தலைப்புகள் எழுத வேண்டிய சூழல்.

குறிப்பேட்டை எடுத்து வைத்துகொண்டு எழுத ஆரம்பித்தால் எழுத்துகள் தாறுமாறாய் சிறுபிள்ளையின் கிறுக்கல் ஆக  எழுத  நண்பர் படுஅப்செட்.

சரியான பயிற்சி இல்லாவிடில் இது தான் நிலைமை. 

வாலிப வயதில் சரியாக ஆறு வாரங்கள் எழுதி பழகவில்லை என்றால்  எழுத்துகள் எழுத வராது என்பது ஆராய்ச்சியில் சொல்லியுள்ளார்கள்.

நம் முன்னோர்கள்  எழுதி வைத்தது கீழே..


சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நித்தமும் நடையும் நடைப்பழக்கம்
தானம் தயை   நட்பு பிறவி

குணப்பழக்கம். -ஔவையார்-

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails